வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



Showing posts with label DMK. Show all posts
Showing posts with label DMK. Show all posts

19/02/2016

பெரம்பலூரில் அதிமுகவை சேர்ந்த 50 பேர் திமுக கொள்கைபரப்புச் செயலாளர் ராசா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் !

பெரம்பலூரில்
அதிமுகவை சேர்ந்த 50 பேர் திமுக கொள்கைபரப்புச் செயலாளர் ராசா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
பெரம் ப லூர்,பிப்.19:
பெரம் ப லூ ரில் திமுக கொள் கை ப ரப் புச் செய லா ளர் ராசா முன் னி லை யில் அதி மு கவை சேர்ந்த 50பேர் திமுக கட் சி யில் இணைந் த னர்.
முன் னால் மத் தி ய அ மைச் ச ரும், திமுக கொள் கை ப ரப் புச் செய லா ள ரு மான ராசா நேற்று பெரம் ப லூர் மாவட் டத் திற்கு வந் தி ருந் தார். பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள திமுக கட் சிப் பிர மு கர் க ளின் சுக, துக்க நிகழ்ச் சி க ளில் ராசா கலந் து கொண் டார்.
இந் நி லை யில் பெரம் ப லூர் பாலக் க ரை யி லுள்ள மாவட்ட திமுக தலைமை அலு வல கத் திற்கு வந் தி ரு ருந்த ராசா வின் முன் னி லை யில், வேப் பந் தட்டை அடுத்த பூலாம் பாடி பேரூ ராட் சி யி லி ருந்து திரண்டு வந் தி ருந்த அதி முக கட் சி யைச் சேர்ந்த 50 பெண் கள், வேப் பந் தட்டை ஒன் றி யச் செய லா ளர் நல் லத் தம்பி தலை மை யில், திமுக கட் சியில் தங் களை இணைத் துக் கொண் ட னர்.
அவர் களை வர வேற் றுப் பே சிய ராசா, வரும் சட் ட மன் றத் தேர் த லில், ஐந் தாண் டு கால அதி முக ஆட் சி யின் அவ லங் களை பொது மக் க ளி டம் எடுத் துக் கூறி, திமுக ஆட் சி யின் சாத னை களை, கரு ணா நி தி யின் நலத் திட் டப் பணி களை, திமுக தேர் தல் வாக் கு று தி களை எடுத் துக் கூறி, அனை வ ரும் திமு க வுக்கு வாக் க ளிக்க ஒத் து ழைப்பு தாருங் கள் எனக் கேட் டுக் கொண் டார்.
நிகழ்ச் சி யின் போது மாவட் டச் செ ய லா ளர் குன் னம் ராஜேந் தி ரன், ஒன் றி யச் செய லாளர் கள் நல் லத் தம்பி, அண் ணா துரை, மதி ய ழ கன், நக ரச் செ ய லா ளர் பிர பா க ரன், மாவட்ட துணைச் செ ய லா ளர் ஜெக தீ சன், மாவட்ட அணி அமைப் பா ளர் கள் மகா தேவி, ஹரி பாஸ் கர், செந் தில் நா தன், ரமேஷ், பூலாம் பாடி பேரூர் செய லா ளர் சேகர், பேரூ ராட் சித் த லை வர் செல் வ லெட் சுமி, வார்டு செய லா ளர் அருண், மக ளி ரணி சும தி மணி, கங் கா த ரன், பிர சன்னா, சிங் கா ர வே லன் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.

07/08/2015

தளபதி மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்!



சென்னை: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகியுள்ளது திமுக. அதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பொதுமக்களைச் சந்திக்கும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

01/08/2015

தி.மு.க-இஸ்லாமியர்கள் உறவை யாராலும் பிரிக்க முடியாது’ சென்னையில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மு.க.ஸ்டாலின் பேச்சு!


 
சென்னை,

தி.மு.க – இஸ்லாமியர்கள் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (ஈத் மிலன்) சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை தாங்கினார்.

12/12/2014

அதிமுக ஆட்சி அவலங்களை மக்களிடம் சொல்ல வேண்டும்! புதிய நிர்வாகிகளுக்கு ஆ.ராசா அறிவுரை!




பெரம்பலூர், டிச. 12:
துடிப்புடன் பணியாற்றுங்கள், அதிமுக ஆட்சியின் அவலங்களை, திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள் என பெரம்பலூரில் கட்சியின் புதிய நிர்வாகிகளை முன்னாள் மத்திய அமைச்சர் ராசா வலியுறுத்தினார்.
திமுக கட்சியின் 14வது அமைப்புத்தேர்தல் நடந்து வருகிறது. இதில் பெரம்பலூர் மாவட்ட ஒன்றிய, நகரச்செயலாளர்கள் உள்ளிட்டப் பதவியிடங்களுக்கான பெயர் பட்டியல் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகிகள் நேற்று பெரம்பலூர் வந்த திமுக கொள்கை பரப்புச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவிடம் வாழ்த்துக்களைப் பெற்றனர்.

03/11/2014

பெரம்பலூரில் பால் விலை உயர்வு, மின் கட்டணம்உயர்வு கண்டித்து ஆ.இராசா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!



பால் விலை உயர்வு, மின் கட்டணம்உயர்வு மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா தலைமையில் ,பெரம்பலூரில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் வி.களத்தூர் நகர தி.மு.க வினர் பலர் கலந்து கொண்டனர்.




















 

28/10/2014

வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அமோக வெற்றி முடிவாகிவிட்டது-தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேச்சு!


திருவாரூர், அக்.28:
சட்டமன்ற தேர்தலில் தி.மு. கவிற்கு அமோக வெற்றி கிடைக்கும் என்பது தற்போதே முடிவாகிவிட்டது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று இரவு திருவாரூர்& மன்னார் குடி சாலையில் உள்ள பொன்தமிழ் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்.பி விஜயன், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


28/09/2014

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி திமுக தலைவர் கலைஞர் கடிதம்.....!



தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி திமுக தலைவர் கலைஞர் கடிதம்.....!

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, அவர் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிடோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க அலுவலகங்கள், சுப்பிரமணிய சுவாமியின் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளது. அ.தி.மு.க.வினரின் தாக்குதலை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

எனவே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.


To
1. His Excellency the President of India,
Rashtrapathi Bhavan,
New Delhi.
2. Hon’ble Prime Minister of India.
New Delhi.
3. The Chief Justice of India,
Supreme Court of India,
New Delhi.
4. Thiru Raj Nath Singh,
Hon’ble Union Minister of Home Affairs,
New Delhi.
5. The Secretary to Government of India,
Ministry of Home Affairs,
New Delhi.
6. His Excellency the Governor of Tamil Nadu,
Raj Bhavan,
Guindy, Chennai 32.
7. The Chief Justice of Madras High Court,
Greenways Road, Chennai.
8. The Chief Secretary.
Government of Tamil Nadu,
Chennai 9.
9. The Home Secretary to Government,
Chennai 9.
Respected Sir,
You must be aware of to-days developments in the State of Tamil Nadu pursuant to the Judgment passed by the Hon’ble Special Court, Bangalore in the Disproportionate Assets Case against Selvi J. Jayalalithaa and others.
The State is now witnessing large scale violence leading to Law and Order problems due to the conviction of the State Chief Minister as the Ruling A.I.A.D.M.K. Party Cadres are going on scot-free targeting the D.M.K. Leaders, Functionaries, Party offices and their Residences throughout the State of Tamil Nadu.
They have also attacked the B.J.P. Leader, Thiru Subramanian Swami’s Chennai Residence, for being the complainant in this case. They are also attacking the innocent public and destroying the public properties with an intention to instill fear and panic in the minds of the public. The Media is also not spared while covering the various violent incidences in the State.
AIADMK Cadres are indulging in large scale violence and the Police are silent spectators to these lawless acts of their Party men. The Police in the State are not in a position to handle the situation and the People in Tamil Nadu are living in grip of fear. There is a complete break-down of Constitutional Machinery in the State of Tamil Nadu. Unless stringent measures are taken immediately by the State Police and military Administration, we fear for the safety of the people in Tamilnadu. If the present situation is allowed to continue, the state may witness worsening off law and order situation which will be a grave threat to the citizen’s life and property.
Under these circumstances, I request your good-self to intervene and take appropriate measures forthwith to restore the Law and Order and to ensure public peace, tranquility and safety to the citizens and to their properties in the State of Tamil Nadu.
I also request your goodself to take action against the erring police officials who are hand in glove with the AIADMK Cadres and perpetuating the violence, aiding, abetting and failing to check the violators.
Thanking you.
Kalaignar Karunanidhi

25/09/2014

ஐ.நா சபையில் ராஜபக்சேபே பேசுவதை கண்டித்து வி.களத்தூர் தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து கருப்பு தினமாக கடைபிடிக்கபட்டது!


இன்று கருப்பு சட்டை அணியும் போராட்டம் திமுக செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் இன்று கருப்பு சட்டை ஐநா சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சேபே கண்டனம் தெரிவித்து கருப்பு கொடிஏற்றி கருப்பு தினமாக கடைபிடிக்கபட்டது. வி.களத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது இஸ்மாயில் பாய் தலைமையில் நடைப்பெற்றது.

 

பெரம்பலூர் நகரிலும் நடைப்பெற்றது .





 

19/09/2014

பெரம்பலூர் தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு திமுக சார்பாக நிவாரண உதவி!


பெரம்பலூர், செப்.19:
பெரம்பலூரில் தீவிபத்தில் பாதிக்கப்பட்வர்களுக்கு திமுக சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் நகராட்சியில் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் அமைந் துள்ள திருநகரில் கடந்த 17ம்தேதி மதியம் ஏற்பட்ட தீவிபத்தில் 6 குடிசைவீடுகள், 1 ஓட்டுவீடு, 1 கல்நார்வீடு உள்பட மொத்தம் 8 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
சேதமடைந்த வீடுகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலெக்டர் தரேஸ் அகமது, டிஆர்ஓ ராஜன்துரை, சப்&கலெக்டர், நகராட்சித்தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று திமுக சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா திருநகர் பகுதிக்குச் சென்று தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் ஆறுதல்கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் துரைசாமி, ஒன்றியச் செயலாளர் கள் ராஜ்குமார், ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாரிக்கண்ணன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் செந்தில்நாதன், வடக்குமாதவி அண்ணாதுரை, நகராட்சி கவுன்சிலர்கள் சிவக்குமார், பாரி, ஒஜீர், சபியுல்லா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
  மேலும் பெரம்பலூர் தூய பாத்திமா தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக பங்குகுரு அடைக்கலசாமி தலைமையில், அருட்சகோதரி ஆனந்தி, பள்ளித் தலைமை ஆசிரியை டெய்சி, உதவித் தலைமை ஆசிரியை புஷ்பா மற்றும் ஆசிரியைகள் நிவார ணப் பொருட்களை வழங்கினர்.

27/08/2014

பெரம்பலூரை சார்ந்த கட்சியின் சாதாரன அடிமட்ட தொண்டனின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.....!



பெரம்பலூரை சார்ந்த கட்சியின் சாதாரன அடிமட்ட தொண்டனின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.....!

ஆம் நண்பர்களே இன்று காலை நான் அண்ணா அறிவாலயத்தில் நம் பாசமிகு தளபதி உதவியால் நம் அன்பு தலைவர் ஐயா கலைஞர் அவர்களை சந்தித்து பேசினேன்.....


ஐயா கலைஞர் அவர்களும் நானும் பேசிய சில வார்த்தைகள் இதோ உங்களுக்காக....

ஐயா கலைஞர் : வாங்க தம்பி எங்க இருந்து வரீங்க??? எப்படி இருக்கீங்க???

நான் : ஐயா, நான் பெரம்பலூர் பக்கத்துல இருக்கிற பாடாலூர் ல இருந்து வந்துருக்கேன், நல்லா இருக்கேன் ஐயா...

ஐயா கலைஞர் : அப்படியா சரிங்க தம்பி... உங்க பேரு என்ன???

நான் : ஐயா.. என்னோட பேரு விஜய்...

ஐயா : சரிங்க தம்பி... நீங்க எதுக்கும் கவலை பட கூடாது எப்பவும் போல சந்தோசமா இருக்கனும்... எதுக்கும் பயப்பட கூடாது மன தைரியத்தோட இருந்தா நமக்கு எதும் ஆகாது சரியா தம்பி... விஜய் ன வெற்றி தம்பி ...

நான் : சரிங்க ஐயா,.. உங்கள நடந்து வந்து பார்க்கனும் னு நெனச்சேன் ஆனா நடந்து வந்து பார்க்க முடியல ஐயா... என்னோட வாழ்நாள் ஆசை இன்னிக்கு நிறைவேறிடுச்சு ஐயா ரொம்ப சந்தோஷம் ஐயா...

கலைஞர் ஐயா.: எனக்கும் சந்தோஷம் தம்பி...

நான் : சரிங்க ஐயா... போய்ட்டு வரேன் 2016 நிச்சயம் நம்ம ஆட்சி தான் ஐயா...

கலைஞர் ஐயா : சரிங்க தம்பி ரொம்ப சந்தோஷம் பார்த்து போய்ட்டு வாங்க...

தலைவரின் புன்னகை என்னை வழியனுப்பி வைத்தது...

உம்மை தலைவனாய் பெற்றமைக்கு பெருமை கொள்கின்றேன் தலைவா.....

நன்றி தளபதி அண்ணா..

14/08/2014

திமுக சார்பில் விரைவில் மாவட்டம் தோறும் இணையதளம் : தளபதி ஸ்டாலின்!



குமரி மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் மகேஷ் வரவேற்று பேசினார்.  
கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பதை விட மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறோம். வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக கருதி உழைக்கும் தொண்டர்களை கொண்ட இயக்கம்தான் தி.மு.க.
வருகிற 2016–ல் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இந்த தேர்தலில் எந்த முறையில் களம் இறங்குவது என்பதை திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட வேண்டும். அதற்கு நம்மிடையே உள்ள பிளவுகளை மறந்து தேர்தலை சந்திக்க வேண்டும். ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் நாம் செயல்பட்டால் நம்மை யாரும் அசைக்க முடியாது. வெற்றிக்கொள்ளவும் இயலாது.
இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடையே எடுத்து சொல்ல வேண்டும். தி.மு.க. சார்பில் விரைவில் மாவட்டம் தோறும் இணையதளம் தொடங்கப்படும். அந்த இணையதளத்தில் தி.மு.க. கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் படத்துடன் இடம் பெறும். இதற்காக மாவட்டந்தோறும் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி.க்கள் சங்கரலிங்கம், ஆஸ்டின், புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, எப்.எம். ராஜ ரெத்தினம், மாவட்ட பொருளாளர் பொன். சின்னத்துரை, கேட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. காஞ்சிபுரத்தை தொடர்ந்து 2–வது கூட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. தி.மு.க.வில் நிர்வாகிகள் யாராக இருந்தாலும் சரி, ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்தில் எந்த பணியையும் ஆற்ற முடியவில்லை. எதை பற்றியும் பேச முடியவில்லை. பேசினால் வெளியே அனுப்புகிறார்கள். சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை என்று இதை ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
110 விதியின் கீழ் அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். அதன்படி, 110 அறிவிப்புகளை முதல்–அமைச்சர் வெளியிடுகிறார். இந்த 3 ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடிக்கு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவரை எந்த பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்று நான் கேட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவி தம்பித்துரை எம்.பி.க்கு வாய்ப்பு கிடைத்துள்ளதே, இது சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா–அ.தி.மு.க. கூட்டணிக்கான அச்சாரமா? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலின், ‘உங்கள் ஆருடத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது’ என்றார்.

04/04/2014

வி.களத்தூரில் நேற்று (3-4-14) முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் சி. பிரபு அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்!

வி.களத்தூரில் நேற்று  (03.04.2014) இரவு 8.50 மணியளவில் முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பிரச்சாரம் செய்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் சி. பிரபு அவர்களை ஆதரித்து தமது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

02/04/2014

நாளை வி.களத்தூருக்கு வருகைத் தரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விற்கு சிறப்பான வரவேற்பு தர ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஊராட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

வி.களத்தூர் ஊராட்சியின் ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் 01/04/2014 இன்று காலை 10 மணியளவில் கிளைச் செயலாளர் A.M.இஸ்மாயில் தலைமையில் வ.களத்தூர் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பணி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சார யுக்திகள் பற்றியும், வெற்றி வாய்ப்புகள் பற்றியும் ஓய்வு பெற்ற ஆசிரியரும், முன்னாள் கவுன்சிலருமான திரு.சுந்தர்ராஜன் அவர்கள் ஆழமாக விவரித்துப் பேசினார். பின்னர் கலந்துரையாடலும் நடைப்பெற்றது.

26/03/2014

வி.களத்தூரில் திமுக வேட்பாளர் ச.பிரபு தேர்தல் பிரச்சாரம் செய்தார்!!

வி.களத்தூரில் இன்று (25.03.2014) மதியம் திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற வேட்பாளர் ச. பிரபு தமது தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆரம்பமாக தேர்தல் அலுவலகம் திறந்து வைத்தார். பிறகு தமது பிரச்சாரத்தை துவங்கினார். பிரச்சாரத்தில் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக வும் அதன் கூட்டணி கட்சிகளும் பாடுபடும் என்று கூறினார். இந்த பிரச்சாரத்தின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி பொருப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
IMG-20140325-WA0013IMG-20140325-WA0005
IMG-20140325-WA0012
IMG-20140325-WA0016IMG-20140325-WA0019IMG-20140325-WA0020
 
Thanks : kallaru.com

25/03/2014

ஸ்டாலின் பேச்சைக் கேட்க முடியாத பெரம்பலூர் மாவட்ட திமுகவினர்!!

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குன்னத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு மு.க. ஸ்டாலின் பேச்சைக் கேட்க சுமார் 6 மணி நேரமாகக் காத்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திமுக தொண்டர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை ஆதரித்து, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சிதம்பரம் தொகுதிக்குள்பட்ட மீன்சுருட்டி, ஜயங்கொண்டம், உடையார்பாளையம், வி. கைகாட்டி, கீழப்பழூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரமும், இரவு 8 மணிக்கு குன்னத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக குன்னம்- அந்தூர் சாலையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது. மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் அதிகளவு கூட்டம் இருக்க வேண்டுமென கருதிய திமுகவினர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கட்சித் தொண்டர்களை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வாகனங்களில் அழைத்து வந்தனர். மாலை 4 மணி முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை எதிரே, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரை கட்சி நிர்வாகிகள் நாற்காலியில் அமர வைத்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களில் பெரும்பாலானோர் உற்சாக பானத்தில் இருந்ததால், பெண்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனிடையே, மேடையில் பேசிய நிர்வாகிகள் இன்னும் சிறிது நேரத்தில் மு.க. ஸ்டாலின் வந்து விடுவார் என தெரிவித்துக் கொண்டே இருந்தனர். இரவு 8 மணியிலிருந்து 5 நிமிஷத்துக்கு ஒருமுறை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மு.க. ஸ்டாலின். தொல். திருமாவளவன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர் என மைக் மூலம் தெரிவித்தனர். ஆனால், இரவு 10 மணி வரை முக்கிய பிரமுகர்கள் யாரும் வராததால் விரக்தியடைந்த வெளியூரைச் சேர்ந்தவர்கள் செல்லத் தொடங்கினர். 
இந்நிலையில் மீன்சுருட்டி, ஜயங்கொண்டம், உடையார்பாளையம், வி. கைகாட்டி, கீழப்பழூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு 10.05-க்கு மேடைக்கு வந்த மு.க. ஸ்டாலின், தேர்தல் விதிகளுக்கு கட்டுப்பட்டு சைகை மூலம் வாக்களிக்குமாறு கோரி விட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதனால் சுமார் 6 மணி நேரமாகக் காத்திருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

24/03/2014

தமிழகத்தில் அவல நிலையில் சட்டம் ஒழுங்கு பகலில் பெண்கள் தைரியமாக செல்ல முடியவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சிதம்பரம்:  அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவலம்  காரணமாக, பெண்கள் பகலிலேயே தைரியமாக நடந்து செல்ல  முடியவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.  சிதம்பரம் தொகுதியில், திமுக தலைமையிலான ஜனநாயக  முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள்  கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து திமுக பொருளாளர்  மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக நாகை  மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு வந்த அவரை மாவட்ட  எல்லையான வல்லம்படுகை அருகே, திமுக மாவட்ட செயலாளர்  எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர், வல்லம்படுகையில் திறந்த வேனில் ஸ்டாலின் பிரசாரம்  செய்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதா, நாங்கள்  ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டே இருக்காது என்றார். திமுக ஆட்சியில்  2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. 

ஆனால் தற்போது 8 முதல் 10 மணி நேரம் மின்வெட்டு உள்ளது.  சட்டமன்றத்தில் எதைக் கேட்டாலும் 110 விதியின் கீழ் அறிக்கை  படிக்கிறார். 100, 101, 108 என அவசர தொலைபேசி எண்கள் உள்ளது.  அதுபோல, ஜெயலலிதா புருடாவுக்கு 110 விதி உள்ளது. எதைப்  பற்றியும் கவலைப்படாத முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில்  மட்டும் பொய் பிரசாரம் செய்கிறார். இத்தொகுதி மக்களுக்காக  கொள்ளிடம் கரை ரூ.108 கோடி செலவில் பலப்படுத்தப்பட்டது.  நாடாளுமன்ற தேர்தலில், கருணாநிதி சுட்டிக்காட்டும் ஒருவர்தான்  பிரதமராக வர முடியும் என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டம்  சுட்டிக்காட்டுகிறது. முதல்வர் பிரசாரத்துக்காக போயஸ் தோட்டத்தில்  இருந்து விமான நிலையம் வரை அடிக்கு ஒருவர் என போலீசார்  நிறுத்தப்படுகின்றனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள்,  வேட்பாளர்கள் ஹெலிபேடில் படுத்து வணக்கம் சொல்கிறார்கள்.  கடலூரில் ஜெயலலிதா பிரசார மேடைக்கு மின்சாரம்  திருடப்பட்டிருக்கிறது. கொளுத்தும் வெயிலில் மக்கள் உட்காந்து  இருக்கிறார்கள். ஜெயலலிதா ஏசியில் மேடையில் இருக்கிறார்.

திமுக ஆட்சியில் எளிய மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும்  பிற்படுத்தப்பட்வர்கள், ஆதிதிராவிடர், சிறுபான்மையினர், அடித்தட்டு  மக்கள் என அனைவருக்கும் எத்தனையோ திட்டங்களை கொண்டு  வந்து பல்வேறு சாதனைகளை செய்து உள்ளோம். சிதம்பரம்  நாடாளுமன்ற தொகுதிக்கு ரயில்வே மேம்பாலம், சிதம்பரம் அரசு  மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், குழந்தைகள் பிரிவு, அறுவை  அரங்க கட்டிடம், மகப்பேறு அரங்க கட்டிடங்களும், சி.முட்லூர் ஆரம்ப  சுகாதார நிலையத்துக்கும், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும்  கூடுதல் கடடிடம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடந்து உள்ளது.  15.5.13 அன்று சட்டசபையில் சாமி சகஜானந்தாவிற்கு சிதம்பரத்தில்  மணிமண்டபம் கட்டப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். 

இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை  வழியாக வந்தால் திமுக அரசின் திட்டங்களை ஜெயலலிதா பார்க்க  முடியும். சிறுபான்மை கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு இந்த  அரசு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வாங்குகிறார்கள். கல்வி அமைச்சரை  எத்தனை முறை மாற்றியுள்ளார். திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி  அறிமுகமானது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டத்தை  ரத்து செய்தார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு  செய்த பிறகு சமச்சீர் கல்வி கிடைத்தது. இந்த ஆட்சியில் கொலை,  கொள்ளை, பலாத்காரம் நடக்கிறது. பகலில் ஒரு பெண் நடந்து செல்ல  முடியவில்லை. தமிழகத்தை காப்பற்றவும், கருணாநிதி கை  காட்டுபவர் பிரதமராகவும், திருமாவளவனை அதிக வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு  மு.க.ஸ்டாலின் பேசினார்.

21/03/2014

" The Economic Times ” ஆங்கில நாளிதழுக்கு தளபதி அளித்த பேட்டி!

 
" The Economic Times ” ஆங்கில நாளிதழுக்கு தளபதி அளித்த பேட்டி.
அதன் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
1. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகிய பிறகு சந்திக்கும் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தொண்டர்களை கட்டுக்கோப்பாகக் கொண்ட கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால் தேர்தலை நம்பிக்கையுடன் சந்திக்கிறோம். ஜெயலலிதா அரசின் நிர்வாக சீர்கேடு, பெருகி விட்டு ஊழல், ஜனநாயக விரோத அரசாக செயல்படுவது என்ற பல காரணங்களின் அடிப்படையில் ஜெயலலிதா அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் எங்களுக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை தேடிக் கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

2. 2. தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது தி.மு.க. மட்டுமே. இதன் நோக்கம் என்ன?
மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மதிக்கும் தலைவர் கலைஞர். அதை நிரூபிக்க வரலாற்றில் ஆதாரங்கள் இருக்கின்றன. கலைஞர் முதல் முறையாக முதலமைச்சரான போதே தியாகு, கலியபெருமாள் ஆகியோரின் தூக்குத்தண்டனைய ஆயுள் தண்டனையாக குறைத்தவர். ஐந்தாவது முறையாக முதலமைச்சராக இருந்த போதும் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தவர். ஜனநாய உரிமைகளையும், மனித உரிமைகளையும் காக்கும் தலைவராகிய கலைஞர், நீண்ட காலமாகவே தூக்குத்தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கூறி வருகிறார். அந்த கருத்திற்கு ஆதரவாக சமீபத்தில் உச்சநீதிமன்றமும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரே தீர்ப்பில் 15 பேரின் தூக்குத்தண்டனைகளை ஆயுள் தண்டனையாக குறைத்தது. பிறகு, திருச்சியில் நடைபெற்ற தி.மு.க.வின் பத்தாவது மாநில மாநாட்டில் தூக்குத் தண்டனையை ஒழி்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற இப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

3. கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி நரேந்திரமோடியை பாராட்டியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் தி.மு.க. சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
ஒரு தலைவரை பாராட்டுவதும், ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதும் வெவ்வேறான விஷயங்கள். பா.ஜ.க.வுடனும், காங்கிரஸுடனும் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தி.மு.க. பொதுக்குழு முடிவு எடுத்து, அதை எங்கள் தலைமையும் நிறைவேற்றியிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகும் இந்த நிலை தொடரும்.
4. அ. ராஜா தேர்தலில் போட்டியிடுகிறார். 2-ஜி பற்றி பெரிய அளவில் பிரச்சாரம் தேசிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்று கருதுகிறீர்கள்?
தி.மு.க.வின் பெயரைக் கெடுக்க சில சுயநல சக்திகளால் உருவாக்கப்பட்ட அதீத கற்பனைக் குற்றச்சாட்டு என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் அது எந்த விதத்திலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பிற்கு பாதகமாக அமையாது. மத்தியில் நிலையான, மதசார்பற்ற ஆட்சி அமைப்பதில் தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் கலைஞர் முக்கியப் பங்கு வகிப்பார்.
5. நரேந்திர மோடி பற்றி உங்கள் கருத்து என்ன?
மோடி அவர்கள் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். அடுத்தடுத்து மூன்று முறை வெற்றி பெற்று வந்திருக்கிறார். குஜராத்தில் நல்ல பணிகளை செய்திருக்கிறார் என்று ஒரு சாராரும், அவர் ஒரு மதவாதி என்று இன்னொரு சாராரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்போது பா.ஜ.க. அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் எஜமானர்கள். அவர்கள்தான் இறுதியில் முடிவு எடுக்கப் போகிறார்கள்.
6. ராகுல் காந்தியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். அவரது தலைமைப் பண்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?
தேசிய பாரம்பரியம் உள்ள ஒரு கட்சியிலிருந்து ராகுல் வருகிறார். கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக அக்கட்சியின் தீவிர அரசியலில் இருக்கிறார். அவர் கட்சிக்குள் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறார். மதசார்பற்ற தன்மை கொண்ட அவரது தொலை நோக்கை நான் பாராட்டுகிறேன். அவர் எந்த அமைச்சரவையிலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பதால் அவரது நிர்வாகத் திறமை பற்றி நான் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காலங்களில் இருந்த அரசியலுக்கும், இப்போதுள்ள அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
7. பா.ஜ.க. ஒரு கூட்டணியை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கூட்டணியை அமைத்த பா.ஜ.க.வும், அதன் தலைவர்களும்தான் அது பற்றி ஆத்ம சோதனை செய்ய வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் 65 வருட கால பாரம்பரியம் கொண்ட கட்சி. அது பல தேர்தல்களையும், கூட்டணிகளையும் பார்த்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தவிர தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருப்பது போன்ற வரலாறு இருக்காது என்றே நான் நினைக்கிறேன். ஆகவே மாநிலத்தில் உள்ள எந்தக் கூட்டணியையும் விட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறும்.

20/03/2014

மாஜி அமைச்சர் ராஜா குற்றச்சாட்டு முதல்வர் ஜெ., இரட்டை வேடம் போடுகிறார்



பெரம்பலூர்: ""தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்,'' என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, பெரம்பலூரில் நடந்த தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் குற்றம்சாட்டினார். பெரம்பலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் சட்டசபை தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் துறைமங்கலம் பாலக்கரை பகுதியில் நடந்தது.
கூட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தலைமை வகித்து, பெரம்பலூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் சீமானூர் பிரபுவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதி மிகுந்த அக்கறைகொண்டு உடனுக்குடன் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றினார். ஆனால், முதல்வர் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், சென்னையில் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை கலைப்பதற்காக காவல் துறையை கொண்டு அவர்கள் மீது தடியடி நடத்தினார்.
தற்போதைய தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
என் மீது தொடரப்பட்ட "2 ஜி' வழக்கு தொடர்பாக உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட 33 இடங்களில் சி.பி.ஐ., போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவோ, மற்ற ஆவணங்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகளே நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவ்வழக்கில் அரசு சாட்சியம் நிறைவடைந்துள்ள நிலையில், ஏப்., 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு, இப்போது வேறு விதத்தில் செல்கிறது. "2 ஜி' தொடர்பாக கைது செய்யப்பட்டு, 15 மாதம் சிறையில் இருந்தேன். அதற்கெல்லாம் கலங்காத நான், கடந்த சட்டசபை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளரின் தோல்வியை அறிந்து அழுதேன். எனவே, தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சீமானூர் பிரபுவை அதிக ஓட்டுக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்துக்கு திருச்சி மாவட்ட செயலாளர் நேரு, பெரம்பலூர் லோக்சபா தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சுபாசந்திரசேகர், மாவட்ட செயலாளர்கள் துரைசாமி, சிவசங்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வி.சி., புதிய தமிழகம், இ.யூ.மு.லீக்., த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, எம்.ஜி.ஆர்., கழகம், அகில இந்திய ஃபார்வார்டுபிளாக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

19/03/2014

தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன?

க‌லக்கிய, கலக்கப்போகும் கலைஞர்!

தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? என்பதை திராவிட முன்னேற்ற‍க் கழகத் தலைவரும் தமிழ கத்தில் 16ஆண்டுகள் முதல்வராக பொறுப்பு வகித்த‍வருமா ன கலைஞர் கருணாநிதி, அவர்களின் சாதனைகளாக முகநூ லில் வெளிவந்தவை
அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என் ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு
பெருஞ்சாதனை!
அண்ணா காலத்தில்தான் சுய மரியாதைத் திருமணங்க ள் சட்டப்படி செல்லுபடியாக் கப்பட்டன.
அண்ணா காலத்தில்தான் கழ க ஆட்சியில் இந்திமொழி ஆதிக்கம் அகற்றப்படவும் – தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொ ழித் திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.
அண்ணா மறைவுக்குப்பின் நான் முதலமைச்சராகப் பொறுப் பேற்று ஆட்சி நடத்திடும் இந்த ப் பதினாறு ஆண்டுகாலத்தில்;
1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மா ற்றாக அந்தத் தொழிலாளிக ளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட் டம்.
2. பட்டிதொட்டி முதல் பட்டினக்க ரை வரையில் பார்வை இழந்தோர் க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.
4. விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – இலவச மின்சா ரத் திட்டம்.
5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.
6.அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆக ச்சட்டம்.
7. குடிசை மாற்று வாரியம்.
8. குடிநீர் வாரியம்.
9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம் .
10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொ ழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.
11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு–அரசு போக்கு வரத் துக் கழகங்கள் அமை ப்பு; பேருந்துகள் கிராமங்களுக் கெல்லாம் செல்ல வழி வகை காணப் பட்டது.
12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.
13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் – வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சத விகிதமாக் குறைப்பு.
14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்திட்டம்.
15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – 50 ரூபா ய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளி கைப் பொருள்கள்.
16.காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர் ச்சி நாள் என்று சட்டம் – மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.
17. சத்துணவில் வாரம் மூன்று முட் டைகள் – வாழைப்பழம் வழங்கும் திட்டம்.
18. புதிய புதிய பல்கலைக் கழக ங்கள் – பொறியியல் கல்லூரி கள்–மருத் துவக்கல்லூரிகள்–கலைஅறிவியல் கல்லூரிகள்.
19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இல வச பேருந்து பாஸ்.
20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.
21. சத்துணவு ஊழியர்களுக்கும் கால முறை ஊதிய ம்.
22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.
23.பரிதிமாற்கலைஞரின் கனவு நன வாகி தமிழ் செம்மொழி என அறிவி ப்பு.
24. தைத்திங்கள் முதல்நாள்–தமிழ்ப்புத்தாண்டு எனச்சட்டம்.
25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.
26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.
27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி
28.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.
29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.
30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் – சுழல் நிதி உதவிகள்.
31. அதைப் போலவே இளைஞர்க ளுக்கும், விவசாயிகளுக்கு ம் சுய உதவிக் குழுக்கள்.
32. தொலைக்காட்சிப்பெட்டிக ள் இல்லா வீடுகளுக்கு இலவ ச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.
33. எரிவாயு இணைப்புடன் கூ டிய இலவச எரிவாயு அடுப்புக ள்.
34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.
35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.
36. நமக்கு நாமே திட்டம்.
37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.
38. திருச்சியில் உய்யகொண்டான் – சே லத்தில் திருமணி முத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
39.மாநிலத்திற்குள்நதிகளை இணைக்கும்மாபெரும் திட்டம்.
40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக் கடைத் திட்டம்.
41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட் டம்.
42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.
43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
44.கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துக ள்.
45. புதிய சட்டமன்ற வளாகம் – தலை மைச் செயலகம்.
46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்.
47. உழவர் சந்தைத் திட்டம்.
48. வேலைநியமனத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அரசுத்துறை களில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
50. 15ஆயிரத்துக்கும்மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.
51.இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).
52. வருமுன் காப்போம் திட்டம்.
53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.
54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;
55. புறம்போக்கு நிலங்க ளில் வீடுகட்டி வாழ்வோ ருக்கு வீட்டு மனைப் பட்டா.
56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.
57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.
58. மிகப் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு  20 சதவிகித இட ஒதுக்கீடு.
59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.
60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.
61. அரசு அலுவலர் இற ந்தால் குடும்பப் பாது காப்பு நிதி.
62. விடுதலை வீரர்களு க்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் – குடும் பங்களுக்கு நிதி உதவிகள்.
63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை.

17/03/2014

"நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு பொதுமக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்"-தென்காசியில் ஸ்டாலின் பிரசாரம்!

 
நெல்லை, மார்ச் 17:
�நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு பொதுமக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்� என தென்காசியில் நடந்த பிரசாரத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Labels