சிதம்பரம்: அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவலம் காரணமாக, பெண்கள் பகலிலேயே தைரியமாக நடந்து செல்ல முடியவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். சிதம்பரம் தொகுதியில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக நாகை மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு வந்த அவரை மாவட்ட எல்லையான வல்லம்படுகை அருகே, திமுக மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், வல்லம்படுகையில் திறந்த வேனில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதா, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டே இருக்காது என்றார். திமுக ஆட்சியில் 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது.
ஆனால் தற்போது 8 முதல் 10 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. சட்டமன்றத்தில் எதைக் கேட்டாலும் 110 விதியின் கீழ் அறிக்கை படிக்கிறார். 100, 101, 108 என அவசர தொலைபேசி எண்கள் உள்ளது. அதுபோல, ஜெயலலிதா புருடாவுக்கு 110 விதி உள்ளது. எதைப் பற்றியும் கவலைப்படாத முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் மட்டும் பொய் பிரசாரம் செய்கிறார். இத்தொகுதி மக்களுக்காக கொள்ளிடம் கரை ரூ.108 கோடி செலவில் பலப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில், கருணாநிதி சுட்டிக்காட்டும் ஒருவர்தான் பிரதமராக வர முடியும் என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டம் சுட்டிக்காட்டுகிறது. முதல்வர் பிரசாரத்துக்காக போயஸ் தோட்டத்தில் இருந்து விமான நிலையம் வரை அடிக்கு ஒருவர் என போலீசார் நிறுத்தப்படுகின்றனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், வேட்பாளர்கள் ஹெலிபேடில் படுத்து வணக்கம் சொல்கிறார்கள். கடலூரில் ஜெயலலிதா பிரசார மேடைக்கு மின்சாரம் திருடப்பட்டிருக்கிறது. கொளுத்தும் வெயிலில் மக்கள் உட்காந்து இருக்கிறார்கள். ஜெயலலிதா ஏசியில் மேடையில் இருக்கிறார்.
திமுக ஆட்சியில் எளிய மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்வர்கள், ஆதிதிராவிடர், சிறுபான்மையினர், அடித்தட்டு மக்கள் என அனைவருக்கும் எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்து பல்வேறு சாதனைகளை செய்து உள்ளோம். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ரயில்வே மேம்பாலம், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், குழந்தைகள் பிரிவு, அறுவை அரங்க கட்டிடம், மகப்பேறு அரங்க கட்டிடங்களும், சி.முட்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் கூடுதல் கடடிடம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடந்து உள்ளது. 15.5.13 அன்று சட்டசபையில் சாமி சகஜானந்தாவிற்கு சிதம்பரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை வழியாக வந்தால் திமுக அரசின் திட்டங்களை ஜெயலலிதா பார்க்க முடியும். சிறுபான்மை கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு இந்த அரசு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வாங்குகிறார்கள். கல்வி அமைச்சரை எத்தனை முறை மாற்றியுள்ளார். திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகமானது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டத்தை ரத்து செய்தார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த பிறகு சமச்சீர் கல்வி கிடைத்தது. இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, பலாத்காரம் நடக்கிறது. பகலில் ஒரு பெண் நடந்து செல்ல முடியவில்லை. தமிழகத்தை காப்பற்றவும், கருணாநிதி கை காட்டுபவர் பிரதமராகவும், திருமாவளவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:
Post a Comment