நெல்லை, மார்ச் 17:
�நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு பொதுமக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்� என தென்காசியில் நடந்த பிரசாரத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
திமுக கூட்டணி சார்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு தென்காசி, மேலகரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரசாரம் துவங்கினார். தொடர்ந்து, தென்காசி, குத்துக்கல்வலசை, நயினாகரம், கடையநல்லூர் ஆகிய ஊர்களில் அவர் பேசியதாவது:
திமுக ஆதரவுடன் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கிருஷ்ணசாமி இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தலுக்கு மட்டுமல்ல, என்றென்றைக்கும் உங்களுடன் நாங்கள் இருந்து வருகிறோம். அந்த உரிமையோடுதான் நாங்கள் ஓட்டு கேட்கிறோம். நாட்டில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. அதற்கு தலைவர்களும் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை பற்றி சிந்திக்கிறார். தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்தித்து ஓட்டு கேட்க வருகிறார். அதுவும் ஆகாயத்தில் பறந்து வந்து ஓட்டு கேட்கிறார்.
2011 தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிகள், அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன உறுதிமொழிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மின்தடை திமுக ஆட்சியில் 2 மணி நேரம் மட்டுமே இருந்தது. மின் தட்டுப்பாட்டை திமுக தலைவர் கருணாநிதி எப்படி சமாளித்தார் என்பது தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டே இருக்காது என ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்று மின்வெட்டு எப்படி இருக்கிறது?
விலைவாசியை குறைப்பேன் என்றார். பால் விலை, பஸ் கட்டண உயர்வு என அனைத்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் தென்காசி தொகுதிக்கு நாங்கள் என்னென்ன செய்துள்ளோம் என்பதை வாக்காளர்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியில் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த திட்டமும் இல்லை. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் ஆகியவை தான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள். 2013ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை குறித்த காவல் துறையின் புள்ளி விவரங்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 46 திருட்டு, வழிப்பறி வழக்குகள், 58 கற்பழிப்பு, பாலியல் வழக்குகள், 68 கஞ்சா, மணல் கடத்தல் வழக்குகள், 77 வெடிகுண்டு குறித்த வழக்குகள், 88 கொடுங்கொலைகள், ஆதாய கொலைகள் என மொத்தம் 1,139 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் & ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.
விலைவாசி உயர்வும் இந்த ஆட்சியில் விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கிறது. கட்டுமான பொருட்களின் விலை திமுக ஆட்சியில் இருந்ததைவிட 2 மடங்கு, 3 மடங்கு உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் மணல் ஒரு லோடு
ஸி5
ஆயிரமாக இருந்தது இப்போது
ஸி25
ஆயிரமாக உள்ளது. ஜல்லி ஒரு யூனிட்
ஸி2,200ஆக
இருந்தது, தற்போது
ஸி3
ஆயிரமாக உள்ளது.
ஒரு கிலோ கம்பி
ஸி35
ஆக இருந்தது, தற்போது
ஸி50ஆக
உயர்ந்துள்ளது. சிமென்ட் ஒரு மூட்டை
ஸி245
ஆக இருந்தது, தற்போது
ஸி335ஆக
உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் ஒரு வீட்டிற்கு மின்கட்டணம்
ஸி1,000
செலுத்தியவர்கள் இன்று
ஸி2
ஆயிரம் செலுத்தி கொண்டிருக்கின்றனர். கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு திமுக ஆட்சியில் மின் கட்டணமாக
ஸி1,000
செலுத்தியவர்களுக்கு தற்போது
ஸி2,500
ஆக உயர்ந்துள்ளது. எனவே, இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமியை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். சங்கரன்கோவிலில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
No comments:
Post a Comment