வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



21/03/2015

டீசல் மானியத்தில் ரூ.100 கோடி முறைகேடு! ஊழல் ஆட்சியை விரட்டுவோம்!திருவாரூர் ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு!




திருவாரூர், மார்ச் 21:
மீனவர்களுக்கான டீசல் மானியத்தில் ரூ.100 கோடி முறை கேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. தமிழகத்தில் இருந்து ஊழல் ஆட்சியை விரட்டு வோம் என்று திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி மரணம் தொடர்பாக சிபிஐ விசா ரணை நடத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வந் துள்ள நிலம் கையகப்படுத் தும் மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதா வது:
விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் கொடுமையான மசோ தாவை மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றி உள்ளது. அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். பாஜவினர் தேர்தலின் போது விவசாய நிலங்களை வர்த்தகத்துக்கும் பயன்படுத்த மாட்டோம் என்றனர். தேர்தல் அறிக்கையிலும் இதை சொன்னார்கள். ஆனால் இன்று நிலங்களை பறிக்க சட்டம் கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளு க்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது.
இதே தஞ்சையில், ஜெய லலிதா முதல்வராக இருந்தபோது அவரை அழைத்து பாராட்டு கூட்டம் நடத்தி பொன்னியின் செல்வி என்ற ஒரு பட்டத்தையும் அவருக்கு வழங்கினார்கள். அந்த ஜெயலலிதா தலை மையில் உள்ள அதிமுக எம்.பிக்கள் தான் இப்போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு ஆதரவு தெரி வித்து உள்ளனர். இதற்கெல் லாம் அடிப்படை காரணம் பெங்களூர் சொத்துகுவிப்பு வழக்கில் இருந்த தப்பிப்பதற்கு தான் என்பதை மக் கள் புரிந்து கொள்ளவேண் டும். இந்த வழக்கில் தண்ட �னை பெற்ற ஜெயலலி தாவை மத்திய நிதியமைச் சர் போயஸ் தோட்டத்தில் சந்தித்து பேசியுள்ளார். நீங் கள் இந்த மர்மத்தை புரிந்து கொள்ளவேண்டும். இதை விட வெட்க கேடு வேறு என்ன இருக்க முடியும்.
காவிரியில் இப்போது வரும் தண்ணீரை தடுக்க மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி பிரச்னைக்காக கடந்த 4 ஆண்டு காலத்தில் இந்த அரசு ஒரு முறையாவது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தெம்பு, திராணி இருந்ததா?
அமைச்சர்கள், முதல் வர், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் தவறுகளை முறைகேடுகளை கண்டித்து போராட்டம் நடக்கிறது. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சிபாரிசை ஏற் காமல் நேர்மையாக டிரை வர் பணியிடங்களை நிரப்பி யதால் அமைச்சரின் கோபத்திற்கு ஆளாகிய அதி காரி தற்கொலை செய்து உள்ளார். அந்த அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட் டார். அவர் மீது சிபிஐ விசா ரணை நடத்த வேண்டும்.
மானிய டீசலில் 100 கோடி ஊழல் நடந்து உள் ளது. அரசின் நலத்திட்டங்களில் ஊழல் நடந்து உள் ளது என இன்று செய்தி வந்துள்ளது. இந்த ஊழல் ஆட்சியை அகற்ற பாடுபடுகிறோம். மாற்றம் வரத்தான் போகிறது. மாற்றத்தை உருவாக்க பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசி னார்.
ஆர்ப்பாட்டத்தில் முன் னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் பூண்டி கலை வாணன், முன்னாள் அமைச்சர்கள் மதிவாணன், அழகு திருநாவுக்கரசு உள் பட ஆயிரக்காணபேர் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத்தலைவராக இருக்கும் அதிமுக பிரமுகர் ஒருவர், ரேஷன் கடை ஊழியர் சாமிநாதன் என்பவருக்கு ரூ.40,000 கடன் கொடுத்து உள்ளார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த கடனுக்கு அதிமுக பிரமுகர், ரேஷன் கடை ஊழியரிடம் மீட்டர் வட்டி கேட்டு மிரட்டி உள்ளார். அத்துடன் அவர் வேலை செய்யும் ரேஷன் கடையில் இருந்து மாதம் 20 மூட்டை அரிசி தர வேண்டும் என கூறி உள்ளார்.
இதற்கு பயந்து சாமிநாதனும் தற்கொலை செய்து உள்ளார். அவர் சாகும் முன் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது. தெம்பு, திராணி இருந்தால் வழக்கு போடுங்கள். உங்களைப்போல நான் வாய்தா வாங்க மாட்டேன் என்றும் மு.க.ஸ்டாலின் பேசியபோது குறிப்பிட்டார்.
திருவாரூரிலும்தற்கொலை

No comments:

Post a Comment


Labels