வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

27/08/2014

பெரம்பலூரை சார்ந்த கட்சியின் சாதாரன அடிமட்ட தொண்டனின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.....!பெரம்பலூரை சார்ந்த கட்சியின் சாதாரன அடிமட்ட தொண்டனின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.....!

ஆம் நண்பர்களே இன்று காலை நான் அண்ணா அறிவாலயத்தில் நம் பாசமிகு தளபதி உதவியால் நம் அன்பு தலைவர் ஐயா கலைஞர் அவர்களை சந்தித்து பேசினேன்.....


ஐயா கலைஞர் அவர்களும் நானும் பேசிய சில வார்த்தைகள் இதோ உங்களுக்காக....

ஐயா கலைஞர் : வாங்க தம்பி எங்க இருந்து வரீங்க??? எப்படி இருக்கீங்க???

நான் : ஐயா, நான் பெரம்பலூர் பக்கத்துல இருக்கிற பாடாலூர் ல இருந்து வந்துருக்கேன், நல்லா இருக்கேன் ஐயா...

ஐயா கலைஞர் : அப்படியா சரிங்க தம்பி... உங்க பேரு என்ன???

நான் : ஐயா.. என்னோட பேரு விஜய்...

ஐயா : சரிங்க தம்பி... நீங்க எதுக்கும் கவலை பட கூடாது எப்பவும் போல சந்தோசமா இருக்கனும்... எதுக்கும் பயப்பட கூடாது மன தைரியத்தோட இருந்தா நமக்கு எதும் ஆகாது சரியா தம்பி... விஜய் ன வெற்றி தம்பி ...

நான் : சரிங்க ஐயா,.. உங்கள நடந்து வந்து பார்க்கனும் னு நெனச்சேன் ஆனா நடந்து வந்து பார்க்க முடியல ஐயா... என்னோட வாழ்நாள் ஆசை இன்னிக்கு நிறைவேறிடுச்சு ஐயா ரொம்ப சந்தோஷம் ஐயா...

கலைஞர் ஐயா.: எனக்கும் சந்தோஷம் தம்பி...

நான் : சரிங்க ஐயா... போய்ட்டு வரேன் 2016 நிச்சயம் நம்ம ஆட்சி தான் ஐயா...

கலைஞர் ஐயா : சரிங்க தம்பி ரொம்ப சந்தோஷம் பார்த்து போய்ட்டு வாங்க...

தலைவரின் புன்னகை என்னை வழியனுப்பி வைத்தது...

உம்மை தலைவனாய் பெற்றமைக்கு பெருமை கொள்கின்றேன் தலைவா.....

நன்றி தளபதி அண்ணா..

No comments:

Post a Comment

Labels