வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

12/12/2014

அதிமுக ஆட்சி அவலங்களை மக்களிடம் சொல்ல வேண்டும்! புதிய நிர்வாகிகளுக்கு ஆ.ராசா அறிவுரை!
பெரம்பலூர், டிச. 12:
துடிப்புடன் பணியாற்றுங்கள், அதிமுக ஆட்சியின் அவலங்களை, திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள் என பெரம்பலூரில் கட்சியின் புதிய நிர்வாகிகளை முன்னாள் மத்திய அமைச்சர் ராசா வலியுறுத்தினார்.
திமுக கட்சியின் 14வது அமைப்புத்தேர்தல் நடந்து வருகிறது. இதில் பெரம்பலூர் மாவட்ட ஒன்றிய, நகரச்செயலாளர்கள் உள்ளிட்டப் பதவியிடங்களுக்கான பெயர் பட்டியல் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகிகள் நேற்று பெரம்பலூர் வந்த திமுக கொள்கை பரப்புச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவிடம் வாழ்த்துக்களைப் பெற்றனர்.

அவர்களிடம் பேசிய ராசா, புதிய நிர்வாகிகள் துடிப்புடன் பணியாற்ற வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுபோல், அதிமுக ஆட்சியின் அவலங்களையும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். கீழ்மட்ட தொண்டர்களையும் மதித்து, கட்சியை கட்டுக்கோப்புடன் வளர்க்கும் பணிகளில் ஈடுபடவேண்டும் எனத்தெரிவித்து வாழ்த்தினார்.
தலைமைசெயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், மாநில இளை ஞரணி துணை அமைப் பாளர் சுபாசந்திரசேகரன், குன்னம் எம்எல்ஏ சிவசங்கர், அவைத்தலைவர் வெள்ளசாமி, ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, குன்னம் ராஜேந்திரன், வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், துணைச்செயலாளர் வெங்கடாசலம், வேப்பந்தட்டை ஜெகதீசன், தங்கராசு, ஜெகதீஸ்வரன், மாநில மருத்துவரணி டாக்டர் வல்லபன் ஒன்றியச் செயலாளர்கள் அண்ணா துரை, நல்லத்தம்பி, மதியழகன், நகர, பேரூர் செயலாளர்கள் பிரபாகரன், வெங்க டேசன், ஜாஹிர்உசேன், ரவிச்சந்திரன் மற்றம் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Labels