வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

01/12/2014

2016 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணி அமைப்போம்! மு.க.ஸ்டாலின் பேட்டி!


சென்னை, டிச.1:
�2016 சட்டப்பேரவை தேர்தலில், எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி உருவாக்கப்படும்� என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டி:
2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், தேசிய கட்சியான காங்கிரஸ் அல்லது பாஜவுடன் கூட்டணி அமைப்போமா? என்று இப்போது சொல்ல முடியாது. அதற்கு தற்போது சரியான நேரம் இல்லை.
தமிழ்நாட்டில் தற்போது எதிர்க்கட்சிகள் தனித்தனியாக பிரிந்து கிடப்பது உண்மை தான். 1967ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா, காங்கிரசை எதிர்க்க ஒரு முன்னணியை (கூட்டணி) உருவாக்கினார். அது போன்று தற்போது நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் எதிர்க்கட்சிகளை ஒன்று இணைத்து, பலம் வாய்ந்த கூட்டணி அமையும் சூழ்நிலை உருவாகும்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி, நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக தொண்டர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்தி வருகிறேன். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து கட்சிக்கு மீண்டும் திரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்ள திமுக எப்போதும் தயாராக இருக்கிறது.
திமுகவில் அனைத்து தரப்பினரும் ஒன்று இணைந்து செயல்படுகிறார்கள். கருணாநிதியே எப்போதும் தலைவராக இருக்கிறார்.
பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து கடந்த ஆறு மாதங்களில் மோடி ஏராளமாக பேசி இருக்கிறார். நிறைய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். ஏழைகளுக்கு பிச்சையும், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கு அனைத்து வகையான வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகளை நாம் காண முடிகின்றது.
மோடியின் அரசு கலப்பு பொருளாதாரப்பாதையை விட்டு முதலாளித்துவ பொருளாதார பாதையை நோக்கி செல்வதாகவே தெரிகின்றது. மேலும், ஆர்.எஸ்.எஸ்.ன் அடையாளங்களான �இந்து ராஷ்ட்டிரம் மற்றும் சமஸ்கிருதம்� போன்றவை மீண்டும் தலைகாட்ட தொடங்கி விட்டன.
 

No comments:

Post a Comment

Labels