வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

28/11/2014

பெரம்பலூரில் தி.மு.க. சார்பில் ஜெயலலிதா வழக்கு தீர்ப்பை விளக்கும் புத்தகம் வினியோகம்!

பெரம்பலூரில் தி.மு.க. சார்பில்
ஜெயலலிதா வழக்கு தீர்ப்பை
விளக்கும் புத்தகம் வினியோகம்!


 

பெரம்பலூர், நவ. 28:
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு பற்றி விளக்கி திமுக தலைவர் கருணாநிதி எழுதிய புத்தகத்தை திமுகவினர் பெரம்பலூரில் பொதுமக்களிடம் வினியோகித்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி திமுக தலைவர் கருணாநிதி எழுதிய விளக்க புத்தகம் பெரம்பலூரில் மாவட்ட திமுக சார்பாக, பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் துரைசாமி தலைமையில் பழைய பஸ்டாண்டு காந்திசிலையை சுற்றியுள்ள பகுதிகளில், போஸ்ட் ஆபீஸ் தெரு, பெரியார் சிலை, அம்பேத்கார் சிலை, மதரஸாசாலை உள்ளிட்டப் பகுதிகளில் பொதுமக்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பயணிகள் ஆகியோரிடம் திமுகவினர் புத்தகத்தை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் வெள்ளசாமி, முன்னாள் எம்எல்ஏ தேவராஜன், நகர அவைத்தலைவர் நடராஜன், மாணவரணி துணை அமைப்பாளர்கள் கருணாநிதி, தமிழ்ச்செல்வன், பேரளி முன்னாள் ஊராட்சித் தலைவர் படைகாத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், ரெங்கராஜ், கணேசன், சிவக்குமார், சிவா, பாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

Labels