வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



03/11/2014

தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் 
நடைபெற்ற இடங்கள் -பங்கேற்றோர் விவரம்!

திமுக தலைவர் கலைஞர்  அறிக்கையின்படி தமிழக அ.தி.மு.க. அரசின் தொடர்ந்த மக்கள் விரோதப்போக்கினை கண்டிக்கும் வகையிலும் -பால் விற்பனை விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறுவதோடு, விவசாயிகளுக்கு உடனடியாக போதிய நிவாரண உதவித் தொகையினை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தியும், தி.மு.க. சார்பில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டு நடைபெற்றது.

இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:


“தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு ஏழையெளிய நடுத்தர குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் வரலாறு காணாத விதமாக பால் விலையை லிட்டருக்குப் பத்து ரூபாய் உயர்த்தியுள்ளது. அத்துடன், மின்வெட்டு குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை விடும் அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்து மக்கள் கருத்துக் கேட்கும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளது. மேலும் கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் பெரு மழையில் விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையிலும், அரசின் சார்பில் எவ்வித நிவாரணங்களும் இதுவரை அறிவிக்கப்பட வில்லை. 

தமிழக அ.தி.மு.க. அரசின் தொடர்ந்த மக்கள் விரோதப்போக்கினை கண்டிக்கும் வகையிலும், பால் விற்பனை விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறுவதோடு, விவசாயிகளுக்கு உடனடியாக போதிய நிவாரண உதவித் தொகையினை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வரும் 3-11-2014 திங்கட் கிழமை காலை 10 மணியளவில் “ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு” நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டில் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்த அறிக்கையின்படி, இன்று (3-11-2014) இன்று காலை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் “ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டு” எழுச்சியுடன் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடங்கள், பங்கேற்றோர் விவரம் பின்வருமாறு :-

தென்சென்னை மாவட்டம்

தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மு.க.தமிழரசு - தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் - துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி - தலைமைக் கழக செய்தி தொடர்பாளர் அ.இரகுமான்கான் - தலைமை நிலையச் செயலாளர்கள் எஸ்.ஏ.எம்.உசேன், ஆ.த.சதாசிவம் - இலக்கிய அணி துணைச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன் - மகளிர் அணி துணைத் தலைவர் திருமதி. விஜயாதாயன்பன், மகளிர் அணி பிரச்சாரக்குழுச் செயலாளர் வசந்திஸ்டேன்லி, உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் -அனைத்து அணிகளின் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட 15,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வடசென்னை மாவட்டம்

கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணைப் பொதுச்செயலாளர் திருமதி சற்குணபாண்டியன், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., வடசென்னை மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், சட்டத்துறை இணைச் செயலாளர் இரா.கிரிராஜன், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, திருமதி.சங்கரிநாராயணன், இராயபுரம் மதிவாணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட 15,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில், சிவகங்கை அரண்மனை வாசல் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்க் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் பெரியண்ணன்.அரசு அவர்கள் தலைமையில், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்க் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம்

தஞ்சை மாவட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கோ.சி.மணி அவர்கள் முன்னிலையில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் து.செல்வம்அவர்கள் தலைமையில், தஞ்சை தலைமை தபால் அலுவலக சாலையில் உள்ள இரயிலடி அருகில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமை தேர்தல் பணிச் செயலாளர் எல்.கணேசன், மத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம் .உபயதுல்லா, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சி.இறைவன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் காரல்மார்க்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் சாக்கோட்டை க.அன்பழகன், கோவி.செழியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்க் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 5,000க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் என்.சுரேஷ்ராஜன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மீனவர் அணிச் செயலாளர் இரா.பெர்னார்டு, சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், எஸ்.ஆஸ்டின், கு.லாரன்ஸ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் நிர்வாகிகள் - கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 4,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் ஐ.பெரியசாமி,எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கொறடா அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ., இளைஞர் அணி துணைச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் ஐ.லியோனி, மகளிர் அணித் தலைவர் நூர்ஜகான்பேகம், மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 25,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் தலைமையில் திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் - மாநகரச் செயலாளர், நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம், காந்தி சாலை, பெரியார் நினைவுத் தூண் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 25,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நன்னியூர் இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கழக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினரும் -அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கழக உறுப்பினர் கே.சி.பழனிசாமி, கொள்கைப் பரப்பு அணி துணைச் செயலாளர் பரமத்தி சண்முகம், விவசாய அணிச் செயலாளர் ம.சின்னசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் நிர்வாகிகள் - கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 5,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் பா.துரைசாமி அவர்கள் தலைமையில் பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து
அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம்

நாகை மாவட்டத்தில் நாகை மாவட்டக் கழகச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், அவர்கள் தலைமையில் நாகப்பட்டினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் என்.பெரியசாமி அவர்கள் தலைமையில் தூத்துக்குடி, பாளை ரோடு, நாம்தமிழர் வளாகம் மேல்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பி.கீதாஜீவன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் மேலூர் யூனியன் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மேலூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் -ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார்10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டத்தில், சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்கள் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் - மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி அவர்கள் தலைமையில் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச்செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 3,000க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் என்கேகே.பி.ராஜா அவர்கள் தலைமையில் ஈரோடு, வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், சு.முத்துசாமி, நெசவாளர் அணிச் செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் காயத்ரி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாநகர, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம்

கோவை மாவட்டத்தில் கோவை மாவட்டக் கழகச் செயலாளர் பொங்கலூர் நா.பழனிசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், செஞ்சிலுவைச் சங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கோவை மு.கண்ணப்பன், கோவை மு.இராமநாதன்,
தலைமைக் கழக செய்தி தொடர்பாளர் ச.விடுதலைவிரும்பி, தொ.மு.ச. பேரவைத் தலைவர் பேரூர் அ.நடராசன், தீர்மானக்குழு உறுப்பினர் கா.ரா.சுப்பையன், சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினர் கோவை இரா.மோகன், கோவை மாநகரக் கழகச்செயலாளர் கோவை எம்.வீரகோபால் உள்ளிட்ட மாவட்ட, மாநகர நிர்வாகிகள் - மாநகர, ஒன்றிய,
நகர, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.திருவாரூர் 7 மாவட்டம் திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன் அவர்கள் தலைமையில் திருவாரூர், தெற்கு வீதி, நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 5,000க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாவட்டக் கழகச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி, தீர்மானக்குழுச் செயலாளர் குழந்தை தமிழரசன், பொறியாளர் அணிச் செயலாளர் துரை கி.சரவணன், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சபாதிமோகன், கொள்கை பரப்பு துணைச்
செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நெசவாளர் அணித் தலைவர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ. முன்னிலையில் விருதுநகர் அம்மன் கோவில் திடலில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் குன்னூர் அ.சீனிவாசன், ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் வி.பி.இராசன், நெசவாளர் அணிச் செயலாளர் அருப்புக்கோட்டை க.பழனிச்சாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார்
6,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர், பஜார் வீதி, அண்ணா திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளர் க.சுந்தரம், ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி, தலைமைக் கழகவழக்கறிஞர் இ.பரந்தான், நெசவாளர் அணிச் செயலாளர் ஓ.ஏ.நாகலிங்கம், மாணவர் அணி துணைச் செயலாளர் ஜெரால்டு செங்குட்டுவன் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கி.வேணு, ப.ரங்கநாதன், கே.பி.பி.சாமி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தலைமையில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் தேனி மாவட்டக் கழகச் செயலாளர் எல்.மூக்கையாஅவர்கள் தலைமையில் தேனி இரயில்வே கேட் அருகில், ஸ்டேட் பேங்க் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் பணிச் செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் கம்பம் என்.இராம கிருஷ்ணன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் போடி என்.லட்சுமணன், பெ.ஆசையன், வி.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் க.பொன்முடி அவர்கள் தலைமையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. பேரவை சண்முகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் சுப.தங்கவேலன் அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 6,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகர் மாவட்டம்

மதுரை மாநகர் மாவட்டத்தில் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.தளபதி அவர்கள் தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகில் ஸ்காட் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீர்மானக்குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம், வ.வேலுச்சாமி, பெ.குழந்தைவேல் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் - பகுதி, வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டக் கழகச் செயலாளர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை, வேங்கிக்காலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாவட்டக் கழகச் செயலாளர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் வேலூர், அண்ணாசாலை, அண்ணா சிலை எதிரில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கழக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் ஆர். ராஜேஸ்வரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாநகர, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர் டி.செங்குட்டுவன், எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி, புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி துணைச் செயலாளர் இ.ஜி.சுகவனம், மகளிர் அணி துணைத் தலைவர் டாக்டர் காஞ்சனா கமலநாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் - மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாநகர, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 4,500.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர் கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் உதகை, ஐந்து லாந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பா.மு.முபாரக், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிடமணி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் தலைமையில் பாளையங்கோட்டை, ஜவகர் மைதானத்தில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் -மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாநகர, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் செ.காந்திசெல்வன் அவர்கள் தலைமையில் நாமக்கல், மோகனூர் ரோடு, கோட்டாட்சியர்அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் பணிச் செயலாளர்பார்.இளங்கோவன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள், நிர்வாகிகள் - அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட சுமார் 11,951க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment


Labels