வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



04/11/2014

பால், மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுதும் திமுக ஆர்ப்பாட்டம் பெரும் புரட்சி தேவை கலைஞர் பரபரப்பு பேச்சு!

 பால் மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளாக கலந்துகொண்ட திமுகவினர்.


 





சென்னை: பால்விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்ந்துள்ளதை கண்டித்து, திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் நேற்று காலையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ‘தமிழகத்தை காப்பாற்ற சட்டம் ஒழுங்கு நிலைபெற பெரும் புரட்சித் தேவை’ என்று தெரிவித்தார். தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. அதேபோல பால் பொருட்கள் பால்கோவா, நெய் போன்ற பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. மின் கட்டணத்தையும் கடுமையாக உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, கனமழைக்கு மாநிலம் முழுவதும் சேதம் ஏற்பட்டது. ஆனால் சேத விவரங்களை மாநில அரசு முறையாக செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விலை உயர்வைக் கண்டித்தும், மாநில அரசின் செயல்படாத செயலைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செய லாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, அவர் தமிழகத்தில், ‘‘சட்டம், ஒழுங்கு, அமைதி பற்றிய பிரச்னைகளைப் பற்றி ஆட்சியில் இருப்போர் கவலைப்படுவதில்லை. எனவே சட்டம், ஒழுங்கு, அமைதி நிலை பெற காப்பாற்றப் பட தமிழ்நாட்டில் ஒரு பெரும் புரட்சி தேவை. அந்தப் புரட்சியைத் தொடங்க வேண்டியவர்கள் நீங்கள் தான். நடத்த வேண்டிய வர்களும் நீங்கள் தான். வெற்றிகரமாக ஆக்க வேண்டியவர்களும் நீங்கள் தான். நான் ஒருவன், இவைகளை சாதிக்க முடியுமா என்றால் என் 91 வயது வரையில் பொறுத்திருந்து, நான் உழைக்க உழைக்க என் உழைப்பைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்த இந்தத் தமிழினம், இன்றைய தினம் தடுமாறி நிற்கின்றது.

இந்தத் தமிழ் இனத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை எனக்கு முன் அமர்ந்திருக்கின்ற இளைஞர்கள், வாலிபர்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை. வயோதிகர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு கடந்த காலம் தெரியும், நிகழ்காலம் தெரியும். ஆனால் வருங்காலத்தை உருவாக்க வேண்டியவர்கள், அவர்கள் மாத்திரமல்ல, வாலிபர்களும், இளைஞர்களும், மாணவர்களும் தான். அதை உருவாக்க தாய்மார்கள், பெரியவர்கள், வாலிபர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள் என்று உங்களை அழைக்கிறேன் என்றார், இதுபோல, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.பி.சேகர் தலைமை தாங்கினார். பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

காஞ்சிபுரத்தில் தா.மோ.அன்பரசன், திருவள்ளூரில் சுதர்சனம், திருச்சியில் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, நாகையில் ஏ.கே.எஸ்.விஜயன், மதுரை மாநகரில் தளபதி, புறநகரில் மூர்த்தி, நெல்லையில் கருப்பசாமி பாண்டியன், விருநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்., ராமநாதபுரத்தில் சுப.தங்கவேலன், தூத்துக்குயிடில் பெரியசாமி, கன்னியாகுமரியில் சுரேஷ்ராஜன், நாமக்கல்லில் காந்திசெல்வன் ஆகியோரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே போன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், மாநில அரசுக்கு எதிராக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். பல மாவட்டங்களில் கொட்டும் மழையில் நனைந்தபடி தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment


Labels