வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



28/01/2014

பணி நீட்டிக்கப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நாடாளுமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது: மு.க.ஸ்டாலின்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு உயர் பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் முக்கிய தேர்தல் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுத்தாமல் வேறுபிரிவுகளுக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 
அதன் விவரம் வருமாறு:
அண்மையில் நடைபெற்ற ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் காவல் துறையினரின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளால் எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்திற்குப் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டதுடன், ஆளுங்கட்சியினரின் விதிமீறல்கள் கடைசிவரை நீடித்தன.
நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களுக்குக் காவல்துறை துணை நிற்கும் என்ற சந்தேகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கிறது.
தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ராமானுஜம் பணி நீட்டிப்பில் உள்ளார். அவர் தமிழக அரசின் தயவை எதிர்பார்த்தே பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே அவரைப் போன்ற அதிகாரிகள்  தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.
தமிழகத்தில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பணி ஓய்வுக்காலத்திற்குப் பிறகும் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு உயர் பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் முக்கிய தேர்தல் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுத்தாமல் வேறு பிரிவுகளுக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

No comments:

Post a Comment


Labels