வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



12/02/2013

காவிரி பிரச்னையில் முறையான நடவடிக்கை எடுத்தது யார்?

காவிரிப் பிரச்னையில் முறையான நடவடிக்கை எடுத்தது யார் என்று ஜெயலலிதாவுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா படித்த டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணம், ஈழத்தமிழர் பிரச்னை, மின் உற்பத்தி போன்றவைகளுக்கு... ஏற்கனவே விளக்கமளித்துள்ளேன். அவர் உரையில் எஞ்சிய பகுதி, காவிரி பிரச்னை பற்றியது.

கடந்த 19 மாத கால ஆட்சியில் கர்நாடகாவிடம் தமிழ்நாட்டுக்கு தேவையான நீரினை பெற்றுக் கொடுக்க இயலாத நிலை பற்றி விளக்கம் அளிப்பதற்கு பதிலாக, தேவையில்லாமல் என்னைப் பற்றி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி தப்பித்துக் கொள்ள முயன்றிருக்கிறார். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கும், காவிரியிலிருந்து தண்ணீரை பெறுவதற்கும் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டுமென்று முதன் முதலாக திமுக ஆட்சியில்தான் 1970ல் மத்திய அரசுக்கு கடிதமே எழுதப்பட்டது. 1971ல் திமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு 1989 திமுக ஆட்சியில்தான், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று, நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அந்த கூட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தவிர அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். நடுவர் மன்றம் அமைப்பதில் ஜெயலலிதாவுக்கு எந்த அளவு ஆர்வம் இருந்தது என்பதை அந்த புறக்கணிப்பிலிருந்தே புரிந்து கொள்ளலாம். வி.பி. சிங் பிரதமரானதும் நடுவர் மன்றம் அமைக்கக் கோரி கடிதம் எழுதினேன். அவர் சொன்னதன் பேரில் 1990ல் நடுவர் மன்றம் தேவை என்று பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் விளைவாகத்தான் நான் முதல்வராக இருந்தபோது 2,6,1990ல் நடுவர் மன்றம் அமைந்தது. அதில் இடைக்காலத் தீர்ப்பினை கோரி மனு செய்தோம். இடைக்காலத் தீர்ப்பு வழங்கிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் கூறியது. அதிகாரம் உண்டா இல்லையா என்று உச்சநீதிமன்றத்தில் 1991ல் திமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்தோம். அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் காரணமாக நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பினை அளித்தது.

இதற்கிடையில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளிவந்த போதிலும், எந்த விதமான விளைவுகளும் ஏற்படவில்லை. 1991 முதல் 1996 வரை ஜெய லலிதா ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை.
1996ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நடுவர் மன்றத்தின் ஆணையை செயல்படுத்து வதில் தாமதத்தைத் தவிர்க்கும் வண்ணம், திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டு மென்று 1997ல் 4 முறை பிரதமருக்கு எழுதிய கடிதங்களிலும், 2 முறை பிரதமரை நேரில் சந்தித்தும் கேட்டுக் கொண்டேன்.

பிரதமர் வாஜ்பாய் காவிரி பிரச்னை பற்றி பேசுவதற்காக என்னை அழைத்து கடிதம் எழுதியிருந்தார். அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினேன். பிரதமர் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கப் பட்டது. ஆனால் ஜெயலலிதா நான் செல்லக் கூடாது என்று அறிக்கை விடுத்தார். வாஜ்பாய் 2 நாட்கள் தொடர்ந்து நடத்திய அந்த கூட்டத்தின் இறுதியில்தான் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி இடைக்கால ஆணையில் கூறப்பட்ட 205 டி.எம்.சி தண்ணீர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் தலைமையில் காவிரி பாயும் 4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைக்கப்படும் என்றும் முடிவாயிற்று.

அந்த ஒப்பந்தத்தை தலைவர்களும் ஏடுகளும் பாராட்டின. இதுதான் உண்மையில் நடந்த வரலாறு. சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தை ஜெயலலிதா வரவேற்கவில்லை. மாறாக அதனை ஏற்க மாட்டோம் என்று கூறினார். வாஜ்பாய் அப்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், திமுகவின் தலைவனான என்னை அழைத்து சுமூக முடிவு கண்டார். ஆனால் மத்திய அரசில் இடம் பெற்ற அதிமுக தலைவி பத்திரிகையாளர்களிடம் என்ன கூறினார் தெரியுமா? ‘கருணாநிதியின் தந்திரத்திற்கு வாஜ்பாய் ஆளாகிவிட்டார். இரண்டு பேரும் சேர்ந்து செய்து கொண்டி ருக்கின்ற உடன்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்றார்.

இத்தனையையும் இப்போது மறைத்துவிட்டு, அவருடைய இடைவிடா முயற்சிகளால்தான் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில் முடிவு காணப்பட்டதைப் போலவும், காவிரி நதிநீர் ஆணையம், மற்றும் காவிரி கண்காணிப்புக் குழு போன்றவை அமைக்கப் பட் டன என்பதைப் போலவும் தன்னைத்தானே தட்டிக்கொடுத்துப் பாராட்டிக் கொண்டுள் ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு திமுக ஆட்சியில்தான் 2007ல் வெளியிடப்பட்டது. தீர்ப்பினை அனைத்து கட்சியினரும் வரவேற்று அறிக்கை கொடுத்தனர்.

ஆனால் ஜெயலலிதா, இது ஏற்க முடியாத தீர்ப்பு என்றும், கருணாநிதியால் காவிரி பிரச்னையில் நடுவர் மன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தீர்ப்பை முழுமையாகப் பெற்றுத்தர முடியவில்லை. இந்த இறுதித் தீர்ப்பு தமிழ கத்திற்குப் பாதகமாக வந்துள்ளது. இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எப்போதும் போல வலியுறுத்தி அறிக்கை விடுத்தார்.

எனவே ஜெயலலிதா காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் ஏற்கவில்லை, இறுதித் தீர்ப்பையும் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை. காவிரி நதிநீர் ஆணையத்தையாவது ஏற்றுக் கொண்டாரா? காவிரி நதிநீர் ஆணை யம் அமைக்கப்பட்டு, 1998ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் போதிய அதிகாரம் உள்ள அமைப்புக்குத்தான் ஆணையம் என்று பெயர். ஆனால் பிரதமர் தலைமையிலான ஆணையத் துக்கு காவிரி தொடர்பாக உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. எந்த முடிவும் எடுக்க விடாமல் தடுக்கிற விவாத அமைப் பாகத்தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படப் போவது தமிழகம்தான்’ என்று ஆத்திர அவசரத்தோடு சொன்னார்.

பின்னர் பேரவையில், ‘செயல்படாத ஆணையம் காவிரி ஆணையம், பல் இல்லாத ஆணையம் அந்த ஆணையத்தை ஏற்காமல் நாங்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினோம்’ என்று சொன்னார். 2002ல் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ‘எவ்வித அதிகாரமும் இல்லாமல், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை திறம்பட செயல்படுத்த இயலாத நிலையில் காவிரி நதி ஆணையம் உள்ளது. எனவே இந்த ஆணையத்தின் கூட்டங்களில் இனிமேல் தமிழ்நாடு கலந்து கொள்ளாது’ என்று கொண்டதே கோலம் என்ற பாணியில் முடிவெடுத்து அறிவித்தார்.

இந்த முடிவினைப் பற்றி என்னிடம் கேட்டபோது, ‘இந்த முடிவு விவேகமானதல்ல. குறுவை நெல் பயிரிடுவதற்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு மத்திய அரசின் தலையீட்டையும் உதவியையும் பெற அனை த்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை மாற்றும் போக்குதான் அதிமுக அரசில் மேலோங்கி நிற்கிறது’ என்று கூறினேன்.

காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று நான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் எழுதிய பதில் கடிதத்தில் அதைப் பற்றி கவனிப்பதாகக் கூறியிருந்தார். அவ்வாறே காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டபோதே சுமூகமாக பேசி தண்ணீரை பெறுவதற்கான வழி வகை காணாமல், அவருக்கே உள்ள முன்கோபம் காரணமாக வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு வெளியே வந்து விட்டார்.

நவம்பரில் மீண்டும் காவிரி ஆணைய கூட்டம். கர்நாடக முதலமைச்சர் முதல் நாளே சென்றுவிட்டார். ஆனால் ஜெயலலிதா கடைசி நிமிடம் வரை வருவதாக சொ ல்லி விட்டு, பிறகு டெல்லி பயணத்தையே ரத்து செய்துவிட்டார். யாருக்கு இழப்பு? தமிழ்நாட்டு விவசாயிகளுக்குத்தான். இதற்கிடையில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் மீது நம்பிக்கை இல் லை என்று ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியது, கடுமையான ஆட்சே பத்துக்குரியது. அந்த அவதூறு கடிதத்தை 4 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் வழக்கறிஞரான கே.கே. வேணுகோபால், அந்த கடிதத்தை திரும்பப் பெறுவதற்காக மீண்டும் ஒரு கடிதத்தை பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா எழுதி அனுப்புவார் என்று தெரிவித்தார். அதற்கிணங்க, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், பிரதமர் மீது தனிப்பட்ட முறையில் தான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், ஏற்கனவே தான் சொன்ன அத்தனையையும் மறந்து விட்டு காவிரி ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் எழுதி யிருந்தார்.

இத்தனை உண்மைகளையும் யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையால்தான் ஜெயலலிதா காவிரிப் பிரச்னையில் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைப்பதைப்போல, பேரவையில் முழங்கியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள்தான் பதில் கூற வேண்டும். இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் கூறியுள்ளார்கள்.

காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று நான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் எழுதிய பதில் கடிதத்தில் அதைப் பற்றி கவனிப்பதாகக் கூறியிருந்தார். அந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டபோதே சுமூகமாக பேசி தண்ணீரை பெறுவதற்கான வழி வகை காணாமல், அவருக்கே உள்ள முன்கோபம் காரணமாக வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு வெளியே வந்து விட்டார்.

No comments:

Post a Comment


Labels