வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



02/02/2013

திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டாமல்
 தன்னுடைய பெயரை சூட்டிக்கொண்டவர் ஜெயலலிதா ; கலைஞர்

 புதிய தலைமைச் செயலகத்தை பன் நோக்கு மருத்துவமனையாக மாற்றத் தடையில்லை என்று 31-1-2013 அன்று மதியம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே செயல்படத் தொடங்கிய மருத்துவமனையின் செயல்பாடு பற்றி?
கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக புதிய தலைமைச் செயலகம் மூடப்பட்டுத் தான் கிடந்தது. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்திலேயே, அந்தக் கட்டிடத்திற்குள் அரசின் பொதுப்பணித்துறை நுழைந்து தன்னிச்சையாகப் பணியாற்றிய புகைப்படங்கள் ஏடுகளிலேயே வெளி வந்தன. உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்பு அவசர கதியில் பன்நோக்கு மருத்துவ மனை செயல்படத் தொடங்கிவிட்டதாக செய்தி வந்தது.
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றிய முடிவினை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஏடுகளும், சில எதிர்க்கட்சிக்காரர்களும் அம்மையாருக்குப் பயந்து மௌனமாக இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டு மக்கள், சென்னை மாநகர மக்கள், ஏன், தலைமைச் செயலகத்திலே இட நெருக்கடிக்கிடையே நாளும் பணியாற்றும் அலுவலர்கள் ஆகியோரிடம் கேட்டால் அம்மையாரின் காழ்ப்புணர்வு பற்றி பக்கம் பக்கமாகச் சொல்வார்கள்.
2015 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையக் கட்டடத் திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லையே?
 சென்னை விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு முனையத்திற்கு பெருந் தலைவர் காமராஜர் பெயரையும், வெளிநாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரையும் சூட்ட வேண்டுமென்று வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, சென்னை-கடற்கரையில் நடைபெற்ற ஒரு மிகப் பெரிய விழாவில் நான் உரையாற்றிய போது வேண்டுகோள் வைத்தேன்.
பிரதமர் வி.பி.சிங் அப்போதே மேடையிலிருந்து கீழே இறங்கி தொலைபேசியில் டெல்லியுடன் தொடர்பு கொண்டு பேசிவிட்டு, பின்னர் மேடையில் உரையாற்றும்போது அந்த வேண்டுகோளினை ஏற்று காமராஜர் பெயரும், அண்ணா பெயரும் சூட்டப்படு மென்று அறிவித்தார். அவ்வாறே அந்தப் பெயர்கள் சூட்டப்பட்டன.
 
அந்த விமான நிலையங்களின் விரிவாக்கம் தான் தற்போது நடைபெற்றது. இதிலே உள்நாட்டு விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு அன்பு நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று தமிழக முதல்வர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் உள்நாட்டு விமான நிலையத்திற்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் பெயரை மாற்றக் கூடாது என்று நாடார் சமுதாய அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தினை குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி திறந்து வைத்துள்ளார். சென்னை தரமணியில் அமைந்துள்ள திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயரையோ, நடிகர் திலகத்தின் பெயரையோ சூட்ட வேண்டுமென்று திரைப்படத் துறையினர் வேண்டுகோள் விடுத்த நேரத்தில், அதைக் கேட்காமல் தன்னுடைய பெயரையே திரைப்பட நகருக்குச் சூட்டிக் கொண்டவர் தான் ஜெயலலிதா.
 முதலமைச்சர் பொறுப்பில் உள்ள காவல் துறையில் காலிப் பணி இடங்களே இல்லை என்கிறார்களே?
தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த காவல் துறை பணி இடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 718 என்றும், அதிலே காலிப்பணி இடங்கள் 21 ஆயிரத்து 911 என்றும் முதலமைச்சரே சொல்லியிருக்கிறாரே! காவல் துறையிலேயே இந்த அளவிற்கு

No comments:

Post a Comment


Labels