வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

03/02/2013

44வது நினைவு தினம் - கருணாநிதி தலைமையில் அண்ணாவுக்கு அஞ்சலி
 Anna Remembered On His 44th Death Anniversary

சென்னை: மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 44வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக திமுகவினர் சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. அண்ணாவின் 44வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அண்ணா நினைவுநாளில் திமுகவினர் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதிப் பேரணி நடத்துவர். அதன்படி இன்றும் பேரணி நடந்தது. இந்தப் பேரணிக்கு கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து பேரணி கிளம்பி கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முடிவடைந்தது. பேரணியில் எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நினைவிடத்தில் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

Labels