வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

02/02/2013

என்னுடைய குடும்பத்தினருக்காக ஜெயலலிதா அரசு அளித்த சலுகைகள்! : கலைஞர்

தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கை.
கேள்வி:- கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் திரைப்படங்களுக்கு தடை விதித்திருக்கலாம், ஆனால் அதைச் செய்யவில்லை” என்று ஜெயலலிதா சொல்லியிருப்பது பற்றி?
பதில் :- தி.மு.கழக ஆட்சியில் தமிழில் பெயர் சூட்டி தயாரிக் கப்படும் தரமானத் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் என் பேரன் உதயநிதி ஸ்டாலின் நடித்து தயாரித்த 'ஒரு கல், ஒரு கண்ணாடி' என்ற படத்திற்கு ஜெயலலிதா அரசு, தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கான வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டது. உடனே நீதி மன்றம் சென்று வழக்கு தொடுத்து, அந்த வழக்கு இன்னமும் நிலுவையிலே உள்ளது.
அடுத்து 'நீர்ப் பறவை' என்ற திரைப்படத்திற்கும் தமிழக அரசு, தமிழில் பெயரிடப்படும் திரைப்படங் களுக்கான வரி விலக்கினை அளிக்க மறுத்துவிட்டது.

உடனே நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து, அரசின் முடிவுக்கு தடையாணை பெற்றார்கள். அதன் பிறகு அண்மையில் 'கண்ணா  லட்டு தின்ன ஆசையா?' என்ற திரைப் படத்திற்கும் முதலில் வரிவிலக்கு அளிக்க மறுத்தார்கள். உடனே நீதி மன்றத்திற்குச் சென்றதும், தமிழக அரசே அனுமதி கொடுத்தது. இது தான் என்னுடைய குடும்பத்தினருக்காக ஜெயலலிதா அரசு அளித்த சலுகைகள்!

No comments:

Post a Comment

Labels