வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

20/04/2016

கலைஞர் மீண்டும் முதல்-அமைச்சராவது உறுதி: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கலாம்’’ என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். 

மு.க.ஸ்டாலின் பிரசாரம்திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் அருகே திறந்த வேனில் நின்ற படி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியதாவது:- திருச்சி என்றாலே திருப்புமுனை தான். வருகிற சட்டமன்ற தேர்தலில் திருப்பு முனையை உருவாக்கி தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தலைவர் கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சராவது உறுதி. கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 501 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மாணவர்கள் கல்விக்காக வாங்கிய கடன் ரத்து செய்யப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். ரேஷன் பொருட்கள்திருச்சி மாநகரில் ஆட்டோ நகர் அமைக்கப்படும். சென்னையை போல புறநகரங்கள் உருவாக்கப்படும். திருச்சியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைப்பதில்லை. பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஒரு வாரம் அலைந்தும் கிடைப்பதில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரேஷன் கடைகளில் மாதம் முழுவதும் பொதுமக்கள் பொருட்கள் வாங்கலாம். எந்த பொருட்களும் இல்லை என்று இல்லாமல் கிடைக்கும் வகையில் வழி செய்யப்படும்.தி.மு.க. ஆட்சியில் திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டும் அதனை இந்த ஆட்சியில் நிறைவேற்றவில்லை. பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தென்னூரில் பூங்கா அமைக்கப்படும். காசிவிளங்கிபாலம் முதல் குடமுருட்டி பாலம் வரை வெள்ளதடுப்பு சுவர் கட்டப்படும். ராமஜெயம் கொலை வழக்குஅ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை பற்றி பேசவேண்டியதில்லை. அ.தி.மு.க. வை சேர்ந்த திருச்சி பரஞ்சோதி எம்.எல்.ஏ., துணை மேயராக இருந்த ஆசீக்மீரா ஆகியோர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை இல்லை. மேலும் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசார கூட்டங்களில் சொல்லாததையும் செய்ததாக கூறி வருகிறார். வீதிக்கு, வீதி டாஸ்மாக் கடைகளை திறந்ததும், செம்பரபாக்கம் ஏரியை திறந்ததும் தான் அவர் சொல்லாமல் செய்தது. இவ்வாறு அவர் பேசினார்.அடிமனை பிரச்சினைஅதன்பின் ஸ்ரீரங்கத்தில் வேட்பாளர் பழனியாண்டியை ஆதரித்து பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பேசுகையில் ‘‘ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு முதல்-அமைச்சரான ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின் போது சொன்னதை நிறைவேற்றினாரா? இல்லை. அடிமனை பிரச்சினையை தீர்க்கவில்லை. வாசனை திரவியம் தொழிற்சாலை அமைக்கவில்லை. ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஏற்படுத்தவில்லை. வாழைப்பழம் பதப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைக்கவில்லை. துவாக்குடி-கரூர் வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கொள்ளிடம் படித்துறை புதுப்பிக்கவில்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவில்லை. ஆட்சி மாற்றம் நடைபெறுவது உறுதி. அ.தி.மு.க. ஆட்சிக்கு நீங்கள் (பொதுமக்கள்) இறுதி மணி அடிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஸ்ரீரங்கத்தில் அடிமனை பிரச்சினை தீர்க்கப்படும். மலர் தொழிற்சாலை அமைக்கப்படும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க காவிரி கூட்டுக்குடி நீர் திட்டம் ஸ்ரீரங்கத்தில் நிறைவேற்றப்படும். கொள்ளிடம் படித்துறை புதுப்பிக்கப்படும்’’ என்றார். திருவெறும்பூர் தொகுதிஇதேபோல திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., மண்ணச்சநல்லூர் தொகுதியில் வேட்பாளர் கணேசன், துறையூர் தொகுதியில் வேட்பாளர் ஸ்டாலின் குமார் ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கை சின்னத்திற்கு ஆதரவாக பாலக்கரையில் மு.க.ஸ்டாலின் திறந்தவேனில் நின்ற படி பிரசாரம் செய்தார்.

No comments:

Post a Comment

Labels