வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



25/04/2016

சசிபெருமாள் உயிரை காப்பாற்றுவதற்காக
 ஒரேயொரு கடையை மூடினாரா ஜெயலலிதா? ஸ்டாலின்


கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின், தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஜெயலலிதா பொய்களை மட்டுமே பேசி வருவதாக குற்றம் சாட்டினார்.

அப்போது பேசிய அவர், மதுக்கடைகளைத் திறந்த ஜெயலலிதாவிற்கு “மதுக்கடைகளை மூடுவோம்” என்று கூறும் தி.மு.க.வின் வாக்குறுதியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சனம் செய்தார். 

‘’ ஒரே கையெழுத்தில் மதுக்கடைகளை மூடிய தலைவர் கலைஞர்- அது 1974ல் நடந்தது,   1300 பார்களையும், 128 டாஸ்மாக் கடைகளையும் முதல் கட்டமாக மூடியவர் தலைவர் கலைஞர்.
 ஒரே கையெழுத்தில் “இனி தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் இல்லை” என்று 22.12.2008 அன்று உத்தரவு போட்டவர் தலைவர் கலைஞர்,  அதே தேதியில் 1.1.2009 முதல் மதுக்கடைகளின் விற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப்படும் என்று உத்தரவு போட்டவர் தலைவர் கலைஞர்.
ஆனால் அதிமுக ஆட்சியில் தான் மதுவிற்பனை தாராளமயம் ஆக்கப்பட்டது.    20.5.1983 அன்று இன்று மது விற்கும்“டாஸ்மாக்” நிறுவனம் துவங்கப்பட்டது. 

அப்போது அதிமுக ஆட்சி.  தமிழகத்தில் மதுவிலக்கு தொடர்பான 20 சட்டங்களும், ரூல்ஸ்களும் கொண்டு வரப்பட்டன.   இதில் மதுவை விற்கும் 15 சட்டங்களை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி.    மது உற்பத்தி செய்ய “மிடாஸ்” கம்பெனியை திறந்தவர் ஜெயலலிதா.
 
அந்த மது ஆலைக்கு அனுமதி கொடுத்த தேதி :31.5.2002.    இதன் பிறகுதான் ஜெயலலிதாவின் மூலையில் உதிக்கிறது.  மதுவை அரசே விற்றால் மிடாஸ் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கலாமே என்று திட்டம் போடுகிறார்.  அதனால்தான் “டாஸ்மாக் கடைகள் மூலம் அரசாங்கமே மது விற்கும்” என்ற உத்தரவை 29.11.2003 அன்று வெளியிடுகிறார்.  

 மது ஆலையை அமைத்து, அதற்கு மது விற்கும் வியாபாரத்தையும் ஏற்படுத்த உத்தரவு போட்ட கை இதே முதலமைச்சர் ஜெயலலிதாவின் கை! அம்மையார் ஜெயலலிதாவிற்கு துணிச்சல் இருந்தால் இதை மறுக்க முடியுமா? ஜெயலலிதா இந்த கையெழுத்தைப் போடுவதற்கு முன்பு மதுவின் மூலம் அரசுக்கு வருமானம் 3 ஆயிரத்த 639 கோடி ரூபாய்.

  அரசாங்கமே மதுவை விற்கலாம் என்று ஜெயலலிதா கையெழுத்துப் போட்ட பிறகு தமிழக அரசுக்கு கிடைக்கும் வருமானம் 31.3.2015 வரை 24 ஆயிரத்து 164 கோடி ரூபாய்.   31.3.2016- ஆம் வருடப்படி பார்த்தால் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி ரூபாய். 3 ஆயிரம் கோடியாக இருந்த “மது வருமானத்தை” 30 ஆயிரம் கோடியாக உயர்த்தியது ஜெயலலிதாவே என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?
நானும் ஆதாரங்களுடன் வருகிறேன். நீங்களும் ஆதாரங்களுடன் வாருங்கள். நிருபீக்கிறேன் என்று சவால் விடுத்தார்..

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட “மதுவிலக்கு” நிச்சயம் அமல்படுத்தப்படும்.
அதற்கு எதற்கு சட்டம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜெயலலிதா.  ஒரே கையெழுத்தில் அரசு ஆணை மூலம் மதுக்கடைகளை மூடி விடலாம் என்றும் கூறியிருக்கிறார். 

  இந்த ஐந்து வருடமாக ஆட்சியில் இருப்பது ஜெயலலிதா. அவர் ஏன் ஒரே உத்தரவு மூலம் மதுக்கடைகளை மூடவில்லை. ஏன் இந்த ஐந்து வருடத்தில் ஏதாவது ஒரு டாஸ்மாக் கடையை ஜெயலலிதா தானாகவே முன் வந்து மூடியிருக்கிறாரா? இதே கன்னியாகுமரியில் ஒரேயொரு மதுக்கடையை மூட வேண்டும் என்று தானேகாந்திய வாதி சசி பெருமாள் செல் போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அவர் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரேயொரு கடையை மூடினாரா ஜெயலலிதா.

  அதற்கு பதில் அவரை செல்போன் டவரிலேயே நிற்க வைத்து சாகடித்த ஆட்சிதான் ஜெயலலிதா ஆட்சி, என்றும் கேள்வி எழுப்பினர்.

No comments:

Post a Comment


Labels