வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



22/03/2015

திமுகவை வழிநடத்த ஸ்டாலினைத்தான் நம்புகிறேன்: அன்பழகன்
 
இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் பல்லாவரம் பஸ்நிலையம் அருகே நடந்தது.

மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்திருந்த இந்த பொதுக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பேசியபோது,

’’தி.மு.க.வில் இளைஞரணி கட்டுப்பாடு உள்ள இயக்கமாக உள்ளது. இளைஞரணி எழுச்சியோடு செயல்பட மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார். எதிர்காலத்தில் இந்த இயக்கத்தை வழிநடத்தும் தகுதி மு.க.ஸ்டாலினுக்குதான் உள்ளது.

இந்த இயக்கம் பண பலத்தால் வளரவில்லை. உழைப்பால் வளர்ந்தது. எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. எதிர் காலத்தில் இந்த இயக்கத்தை வழிநடத்த ஸ்டாலினைத்தான் நம்புகிறேன்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடம் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை மத்திய மந்திரி அருண்ஜெட்லி சந்திக்கிறார். இந்த சந்திப்பு பற்றி அவர் விளக்கம் எதுவும் சொல்லவில்லை.

இப்போதைய முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயமாக செயல்பட முடிய வில்லை. ஜெயலலிதா ஆட்டிப்படைக்கிறார். அப்படி ஒரு ஆட்சி நடக்கிறது.

பெரியார் பிறந்த மண், காமராஜர் வாழ்ந்த மண் இன்னும் சொல்லப்போனால் அண்ணா முதல்–அமைச்சராக திகழ்ந்த மண்.

ஒரு ஆற்றல்மிக்க தலைவர், நான் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அவரை விட சிறந்த இன்னொரு முதல்– அமைச்சர் கலைஞரை போல இன்னொரு தலைவர் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே கிடையாது. கலைஞர் இந்த வயதிலும் அயராது பாடுபடுகிறார்.

கடந்த ஆண்டு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்த அ.தி.மு.க. தற்போது ஆதரிக்கும் மர்மம் என்ன?

இந்த சட்டத்தால் விவசாயிகள், பாமர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறிய அ.தி.மு.க. தற்போது இந்த நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? இப்போது விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment


Labels