வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

02/01/2015

திமுக சார்பில் தமிழக மக்களுக்கு எனது
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
திமுக தலைவர் கலைஞர் 
பொய்களையே அணிகலன்களாக பூண்டவர்கள் தமிழக அரசியலில் புரிந்து வரும் கேடுகளை பறைசாற்றி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் உரிய தண்டனை வழங்கி �சட்டத்தின் முன் அனைவரும் சமம்� என்பதை நிலைநாட்டிய ஆண்டு 2014. மாற்றத்தை எண்ணி வாக்களித்த மக்களுக்கு மூன்றாண்டுகளாகியும் ஏமாற்றம் குறையவில்லை. வாக்குறுதிகளை காப்பாற்றும் வாய்மை இல்லை. மின்சாரமில்லை. அதற்கும் இரண்டுமுறை உயர்த்தப்பட்ட கட்டணமோ அநியாயம். பேருந்துக் கட்டண உயர்வோ பேரதிர்ச்சி. பால் விலை உயர்வோ மகா கொடுமை. உப்பு முதல் உணவுப் பொருள் ஒவ்வொன்றின் விலையும் விஷம் போல் உயர்வு. புதிய தொழிற்சாலைகள் இல்லை. ஏற்கனவே இருந்த தொழில் களை காக்கும் திராணி யும் இல்லை. தொழிலாளர் வாழ்வோ தொடர் போராட் டம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நடவடிக்கைகளால் எங்கும், எதிலும் குழப்பம்.
இன்று தமிழகம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில், மக்கள் நலப்பணிகளில், உற்பத்தியில், தொழில் வளர்ச்சியில் என அனைத்து வகையிலும் இந்திய அளவில் பின்தங்கிவிட்ட அவலத்தையும் ஜனநாயக விரோத மக்கள் விரோதச் சேட்டைகள் நாள்தோறும் பெருகி வருவதையும் எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த அவலம் களையப்படவும், இப்போதைய பின்னடைவுகளிலிருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப்படவும், களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து முனைப்போடு உழைத்திட வேண்டும். அதற்கு இந்தப் புத்தாண்டு 2015 வழிவகுக்கும் எனும் உறுதியான நம்பிக்கையுடன் திமுக சார்பில் தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

Labels