வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



03/10/2014

ஜெ- முதல்வர் முதல் சிறை வரை. வழக்கின் விபரம் முழுமையாக...........
இன்றைய காலக்கட்டத்தில் இளைய சமுதாயத்தினருக்கு இந்த வழக்கு 
பற்றி ஒன்றும் தெரியாது. ஏன் எனில் அவர்கள் இந்த வழக்கு பதிவு 
செய்யப்பட்டபோது அவர்கள் டவுசர் போட்டுக்கொண்டு மண்ணில் 
விளையாடிக்கொண்டு இருந்திருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த 
வழக்கின் வரலாறு.1991 – 1996 காலக்கட்டம்………….இராஜிவ்காந்தி 
தமிழகத்தில் கொல்லப்பட்டபோது, காங்கிரஸ்சோடு கூட்டணியில் 
இருந்த அதிமுக அனுதாப அலையில் மாபெரும் வெற்றியை பெற்றது. 
ஜெயலலிதா முதல்வரானார்.அவர் முதல்வரானபின் தமிழகம் மாபெரும் 
கோரதாண்டவத்தை சந்தித்தது. கூட்டணியில் இருந்த காங்கிரஸ்சை 
கழட்டி விட்டார். என்னால் கிடைத்த வெற்றி என 
அறிவித்தார்.முதலமைச்சராக மாதம் ஒரு ரூபாய் சம்பளமாக 
பெறுகிறேன் என அறிவித்தார்.அதிமுகவின் சீனியர் தலைவர்களை 
அவமானப்படுத்தினார். நாவலர் நெடுஞ்சியனை, உதிர்ந்த ரோமம் என 
வர்ணித்தார்.கவர்னர் என் கையை பிடித்து இழுத்தார் என 
சட்டமன்றத்தில் அறிவித்தார்.தனது வளர்ப்பு மகனான சுதாகரன்க்கு 
நடிகர் சிவாஜிகணேசன் பேத்தியை மனைவியாக்கி கோடிகளில் 
திருமணம் செய்து வைத்தார்.அவரும் அவரது தோழி சசிகலாவும் தங்க, 
வைர நகைகள் போட்டுக்கொண்டு மாநிலத்தை வலம் 
வந்தனர்.மகாமகம் குளத்தில், ஜெ, சசிகலா குளித்துவிட்டு மாலை 
மாற்றிக்கொண்ட நிகழ்வில் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் பலி. 
பலர் ஊனம்.ஜெவின் அதிகார அத்துமீறல், ஊழல் போன்றவற்றை 
ஆதாரத்தோடு வெளிப்படுத்திய நக்கீரன் இதழ், அதன் ஆசிரியர், 
பிரிண்டர், நிருபர்கள் மீது அதிகார காவல் நாய்களின் பாய்ச்சல், வழக்கு, 
கைது. சிலர் காவல்துறையின் கொடுமையால் மரணம்.சென்னையை 
சேர்ந்த நகைக்கடை அதிபரிடம் முதல்வர் அதிகாரத்தை காட்டி ஜெ, 
சசிகலா தங்க, வைர நகைகள் வாங்கிக்கொண்டு பணம் தராததால் 
குடும்பத்தோடு தற்கொலை.ஜெவின் ஊழலுக்கு துணை புரியாத 
சந்திரலேகா ஐ.ஏ.எஸ் முகத்தில் ஆசிட் வீசிய ஜெவின் அடிப்பொடிகள் 
ஏற்பாடு செய்த வெளிமாநில ரவுடிகள்.இன்று முதல்வர் ஜெ வின் 
ஊழலுக்கு துணை புரியாத சகாயம் ஐ.ஏ.எஸ் போல அன்று உமாசங்கர் 
ஐ.ஏ.எஸ் அலைகழிப்பு, மிரட்டல்.ஜெவுக்கு எதிர்ப்பாக வழக்குகள் 
தொடுத்த பிரபல வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம் உட்பட பலர் 
மீது ரவுடிகளை விட்டு தாக்குதல்.தனக்கு ஒத்தொழைக்காத மத்திய 
அமைச்சர்களாக இருந்த சிதம்பரம், மணிசங்கர் அய்யர், தலைமை 
தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உட்பட பலர் மீது தாக்குதல். பொய் 
வழக்குகள் என ஜெவின் கோரதாண்டவம் ஆடினார்.திராட்சை தோட்டம், 
பங்களாக்கள் என சொத்துக்களாக வாங்கி குவிப்பு என படுமோசமான 
அலங்கோல ஆட்சியாக திகழ்ந்தது.இசையமைப்பாளர் கங்கைஅமரனை 
மிரட்டி நிலத்தை எழுதி வாங்கியது.இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே 
போகலாம். முதல் முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்தபோதே 
இத்தனை 
கோரதாண்டவம் ஆடினார். இதனால் மக்கள் ஆட்சி மாற்றத்தை 
விரும்பினர். 1996ல் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. ஜெ. சொத்துக் 
குவிப்பு வழக்கு முழு பின்னணி:ஜெயலலிதா முதன் 
முறையாக1.7.1991முதல்30.4.1996வரை தமிழகத்தின் முதல்வராக 
இருந்தார்.இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தன் வருமானத்துக்கு 
அதிகமாக சொத்துகளைச் சேர்த்துள்ளதாக ஜனதா கட்சியின் 
தலைவராக 
இருந்த சுப்பிரமணியன் சுவாமிஅப்போதைய தமிழக ஆளுநர் சென்னா 
ரெட்டியிடம் அனுமதி பெற்று,பிறகு14.6.1996-ல் சென்னை அமர்வு 
நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.27-6-1996அன்று அந்த மனுவை 
விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற 
நீதிபதிராமமூர்த்தி,தமிழ்நாடுஊழல் மற்றும் கண்காணிப்பு துறையின் 
டி.ஐ.ஜி-யாகஇருந்த லத்திகா சரணை விசாரணைசெய்ய ஆணையிட்டார். 
அதை எதிர்த்து ஜெயலலிதாதரப்பு,தனி நபர் ஒருவரை விசாரணை 
அதிகாரியாக நியமிக்கக் கூடாது. இந்தவிசாரணைக்குத் தடை விதிக்க 
வேண்டும்என்று மனுத் தாக்கல் செய்தார்கள்.அதையடுத்து சென்னை 
அமர்வு நீதிமன்றம் அந்த விசாரணைக்கு இடைக்கால 
தடைவிதித்தது.இந்த வழக்கை துறைரீதியாக தமிழக ஊழல் மற்றும் 
கண்காணிப்புத்துறையின் ஐ.ஜி-யாக இருந்த வி.சி.பெருமாள் விசாரணை 
நடத்தி வந்தார். துறை ரீதியாக விசாரித்து வந்த வி.சி.பெருமாள்,இந்த 
வழக்கில் குற்றம்செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் 
கருதி,ஜெயலலிதா மீது18.9.1996-ம்தேதி எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து 
விசாரணையை தொடங்கினார்.சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 
மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக(1-7-1991-க்கு முன்பு) அவருடைய 
சொத்து மதிப்பு2கோடியே1லட்சத்து83ஆயிரத்து956.53ஆகும். ஆனால் 
வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991முதல்30-4-
1996வரை)66கோடியே65லட்சத்து20ஆயிரத்து395.59ஆக 
சொத்துஅதிகரித்துள்ளது.எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை 
தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாகசொத்து 
குவித்துள்ளார். 
மேலும் சசிகலா,சுதாகரன்,இளவரசிஆகியோர் சொத்துகுவிக்க 
உடந்தையாக இருந்துள்ளனர்.எனவே அவர்கள் மீது ஊழல் தடுப்பு 
சட்டம்13(1) (ஈ) பிரிவில் வருமானத்துக்குஅதிகமாக சொத்து குவித்தது 
மற்றும்13(2)அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தகுற்றத்துக்கு 
உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம்120(பி)கூட்டு சதி 
தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு 
செய்யப்பட்டது.நீதிமன்றத்தின் 
இடைக்காலத் தடை முடிந்ததும் ஊழல்மற்றும் கண்காணிப்புத் துறை 
இயக்குநராக இருந்த ராகவனிடம்,வேறுஒருவரைக்கொண்டு இந்த 
வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம்ஆணையிட்டது. 
லத்திகா சரணுக்குப் பதிலாக தமிழ்நாடு ஊழல் மற்றும்கண்காணிப்புத் 
துறையின்ஏ.டி.எஸ்.பி-யாக இருந்த நல்லம நாயுடு 
தலைமையில்16இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். ஐ.ஐீ பெருமாள் 
வழக்கை நல்லம்மநாயுடுவிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் டான்சி 
நில வழக்கில் சி.பி.சி.ஐ.டிபோலீஸார் ஜெயலலிதாவை7.12.1996-ல் கைது 
செய்து சென்னை புழல் சிறையில்வைத்தனர். அப்போது நல்லமநாயுடு 
தலைமையிலான ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை போலீஸார் 
சென்னை அமர்வு நீதிமன்றத்தின்ஒப்புதல் பெற்று ஜெயலலிதாவின் 
வங்கிக் கணக்குகளை முடக்கியதோடு அவருக்குச்சொந்தமான 
அசையும் மற்றும் அசையா சொத்துகளை நேரில் 
சென்று7.12.96முதல்12.12.96வரை ஜெயலலிதாவின் போயஸ் 
கார்டன்இல்லம்,ஐதராபாத் திராட்சை தோட்டம் ஆகிய இடங்களில் 
சோதனையிட்டார்.வழக்கை விசாரிக்க தனி 
நீதிமன்றம்அமைக்கப்பட்டது. அந்த தனி நீதிமன்றத்தில்4.6.1997-ல் 3வது 
சிறப்பு நீதிபதி பி.அன்பழகன் முன் குற்றப்பத்திரிகை 
தாக்கல்செய்யப்பட்டது.21.10.1997-ல் இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் 
குற்றவாளியாகசேர்க்கப்பட்டார். சசிகலா,சுகாதரன்,இளவரசிஆகியோர் 
மீது குற்றம் சுமத்தப்பட்டது. பிறகு259சாட்சியங்கள்சேர்க்கப்பட்டனர். 2000 
ஆகஸ்ட்டில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 
ஆகஸ்ட் மாதம் துவங்கியது.250சாட்சிகள் 
விசாரிக்கப்பட்டனர்.மீண்டும்2001மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் 
ஏற்பட்டுஅதிமுகவின் ஜெயலலிதா முதல்வரானார். சொத்து வழக்கின் 
போக்கு மாறியது.மூன்று அரசு வக்கீல்கள் ராஜினாமா,விசாரணை 
அதிகாரி மாற்றம்,சிறப்புநீதிமன்ற நீதிபதி மாற்றம் என நடந்தது. 
2002நவம்பர் மாதம் வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்தது. 
அதையடுத்து சாட்சிகள் மறு விசாரணை செய்யப்பட்டனர்.76சாட்சிகள் 
குறுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். அவருக்கான 
கேள்விகள்,அவரது வீட்டுக்கே அனுப்பப்பட்டன.2003பிப்ரவரி மாதம் வரை 
விசாரணை நடந்தது76சாட்சிகளில்64பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர். 
இதனை அரசு வழக்கறிஞர் தடுக்கவில்லை என்று தி.மு.க 
சந்தேகப்பட்டது. தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச 
நீதிமன்றத்தில், ''வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா 
முதல்வராக இருப்பதால்,இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்துக்கு மாற்ற 
வேண்டும்''என்று மனுத் தாக்கல் செய்தார். அதையடுத்து உச்ச 
நீதிமன்றம் 
வழக்கை பெங்களூருக்கு மாற்ற18.11.2003-ல் உத்தரவிட்டது.10.9.2004-ல் 
அதிகாரபூர்வமாக வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அதனைத் 
தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் 
மொழிபெயர்த்தல்,பிறழ் சாட்சிகளின் விசாரணை,குறுக்கு 
விசாரணை,குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவுசெய்தல் 
என நடந்தது. நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வாதி வழக்கறிஞர்கள் 
மாற்றம் என நடந்தபடியிருந்தது.2005ல் அரசு வக்கீலாக ஆச்சார்யா 
நியமிக்கப்பட்டார். வழக்கை மீண்டும்விசாரிக்க அவர் 
முயற்சித்தபோது,தனக்கான கேள்விகளை வீட்டுக்கு 
அனுப்பும்படியும்,ஆஜராகாமல் இருக்கவும் ஜெயலலிதா நீதிமன்ற 
உத்தரவை பெற்றார் இதனால்,வழக்கு விசாரணையில் தொய்வு 
ஏற்பட்டது. 2011மே மாதம்,ஜெயலலிதா மீண்டும் முதல்வராக 
பதவியேற்றார்ஆகஸ்ட் 12ந்தேதி சொத்துகுவிப்பு வழக்கில் நேரில் 
ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்குஅளிக்கக்கோரிய 
மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம்,வீடியோ 
கான்பரன்ஸ்மற்றும் எழுத்து மூலமாக வாக்குமூலத்தை பதிவு செய்ய 
அனுமதி அளித்தது.2011 செப்டம்பர் மாதம் அரசு தரப்பில்259சாட்சிகள் 
விசாரிக்கப்பட்ட நிலையில்,அதுதொடர்பாக விளக்கமளிக்க ஜெயலலிதா 
நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்புநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாஉச்சநீதிமன்றத்தை நாடினார். 
ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 2011 
அக்டோபர் மாதம், பெங்களூருதனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் 
ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 
இந்தவிசாரணையில்,முதல்நாள்567கேள்விகளுக்கு பதிலளித்தார். 
மீதமுள்ள கேள்விகள்நவம்பர்8ம் தேதி கேட்கப்படும் என்று நீதிபதி 
மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார்.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 
ஜெயலலிதா மனுதாக்கல் செய்ய அது தள்ளுபடி செய்யப்பட்டது. நவம்பர் 
9ந்தேதி மீதமிருந்த, 192கேள்விகளுக்கு என 
மொத்தம்1,339கேள்விகளுக்கு பதிலளித்தார்.ஜெ தரப்பு அரசு வக்கீல் 
ஆச்சார்யாவுக்கு ஆசை காட்டி வளைக்க முயன்றது. அவர் மறுத்ததால் 
அப்போது மாநிலத்தில் இருந்த பி.ஜே.பி அரசு மூலம் அவரை தொந்தரவு 
செய்தது ஜெ படை. என் கடைசி காலத்தில் மன நிம்மதி முக்கியம் என 
2012 ஆகஸ்ட் மாதம் ஜெ வின் வழக்கில் இருந்து விலகிக்கொண்டார். ஜெ 
மீதும், பி.ஜே.பி அரசு மீதும்குற்றம்சாட்டிவிட்டே சென்றார்.2013பிப்ரவரி 
மாதம்,புதிய சிறப்பு வக்கீலாக பவானி சிங் நியமிக்கப்பட்டார். அதே 
ஆண்டு செப்டம்பர் மாதம்,வழக்கை விசாரித்து வந்த நீதிபதி 
பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார். புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல்டி 
குன்ஹா நியமிக்கப்பட்டார். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் வழக்கு 
கடந்த10ஆண்டுகளாகப் பல நீதிபதிகளால் விசாரணை செய்தாலும் 
31.10.2013-ல் வழக்கின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்ற ஜான் மைக்கேல் 
டி.குன்ஹா,அதிரடிகளை காட்டினார். வீணான பெட்டிஷன்கள், 
காலதாமதம், இழுத்தடிப்பு என குற்றம்சாட்டப்பட்டவர்களின் 
வழக்கறிஞர்கள் குன்ஹாவிடம் “விளையாட“ தொடங்கினார்கள்.7.3.2014-
ல் அரசுத்தரப்பு இறுதிவாதம் தொடங்க உத்தரவிட்டார். அரசு 
வழக்கறிஞர் 
பவானி சிங் வராததால்10.3.2014-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.10-ம் 
தேதியும் பவானி சிங் வரவில்லை.14.3.2014-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.14-
ம் தேதி வந்த பவானி சிங் உடல்நிலை சரியில்லை.10நாட்கள் கால 
அவகாசம் வேண்டும் என்று மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுத்தார். 
அதைகேட்டுகோபம்கொண்ட நீதிபதி,அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் 
ஒருநாள் சம்பளமான65,000ரூபாயை அபராதமாக விதித்தார். அடுத்த 
நாள்15-ம் தேதியும் பவானிசிங் வராததால் அன்றும் ஒருநாள் 
சம்பளமான65,000ரூபாயை அபராதமாக விதித்தார். நீதிமன்ற 
வரலாற்றில் ஒரு அரசு வழக்கறிஞர் மீது நீதிபதி அபராதம் விதித்தது 
நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அரசுத் 
தரப்பு இறுதி வாதம்19.5.2014-ல்முடித்த உடனே ஜெயலலிதா தரப்பு 
இறுதிவாதம் செய்ய உத்தரவிட்டார்.ஜெயலலிதாவின் வழக்கறிஞர் 
குமாரின் தாயார் இறந்துவிட்டார். அதனால்எங்களுக்கு கால அவகாசம் 
வேண்டும் என்றார்கள் ஜீனியர்கள். விலக்கு அளித்தவர் 
ஏ2,ஏ3,ஏ4வழக்கறிஞர்கள் தங்கள் இறுதிவாதத்தைத் தொடங்க 
வேண்டும்என்றார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாருடைய 
இறுதிவாதத்தை முடித்தபிறகுதான் எங்கள் வாதத்தை தொடங்குவோம் 
என்று அடம் பிடித்தனர். அதற்கும் கடிவாளம் போட்டார். சொத்து 
பட்டியல்.........பெங்களூருநீதிமன்றத்தில் 
அரசுத்தரப்புவழக்கறிஞர்பவானிசிங்,ஜெயலலிதாவருமானத்துக்குஅதிக
மாகவாங்கிக்குவித்துள்ளசொத்துக்களின்பட்டியலைதாக்கல்செய்துள்ளா
ர்.அரசுத்தரப்புவழக்கறிஞர்கள்வாசித்தஜெயலலிதாவின்306சொத்துப்பட்
டியல்இதுதான்....ஜெயா பப்ளிகேஷன்,சசிஎன்டர்பிரைசஸ்,மெடோ 
அக்ரோ ஃபார்ம்ஸ்,ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ்,லெக்ஸ்ப்ராப்பர்ட்டீஸ்,ஜெ 
ஃபார்ம் ஹவுஸ்,ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன்,ரிவர்வே அக்ரோபிரைவேட் 
லிமிடெட்,ராம்ராஜ் அக்ரோ மில்ஸ்,கிரீன் 
கார்டன்,ஆஞ்சநேயாபிரின்டர்ஸ்,சூப்பர் டூப்பர் 
பிரைவேட்லிமிடெட்என32கம்பெனிகள் பெயரிலும் சொத்துகள் 
வாங்கப்பட்டுள்ளன.போயஸ் கார்டன் நிலம் மற்றும் 
கட்டடம்10கிரவுண்ட்330சதுர அடி விலை ரூ.1,32,009.ஹைதராபாத் 
சிட்டியில் பிளாட் நம்பர்36-ல் விரிவாக்கப்பட்ட651.18சதுர அடி கட்டடம் 
ரூ.50,000.ஹைதராபாத் பஷீராபாத் என்ற கிராமத்தில் திராட்சைத் 
தோட்டம் மற்றும்இரண்டு பண்ணை வீடுகள்,வேலையாட்களுக்கான 
குவாட்டர்ஸ் உள்ளிட்ட11.35ஏக்கர்நிலம் ரூ.1,65,058.மேலும் அதே 
பகுதியில்93/3சர்வே எண்ணில்3.15ஏக்கர் ரூ.13,254ஆகியவை சந்தியா 
மற்றும் ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் 
மானம்புசாவடியில்2,400சதுர அடியில் நிலம் மற்றும் வீடு ரூ.1,57,125.அதே 
பகுதியில்51,000சதுர அடி காலி நிலம் ரூ.1,15,315.மீண்டும் அதே பகுதியில் 
காலி நிலம் ரூ.2,02,778ஆகியவை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது. 
சசிகலா பெயரில் திருச்சி அபிராமிபுரத்தில் நிலம் மற்றும் வீடு3,525சதுர 
அடி ரூ.5,85,420. ஜெயா பப்ளிகேஷன் பெயரில் கிண்டி தொழிற்பேட்டை 
நிலம் மற்றும் ஷெட் ரூ.5,28,039.புதுக்கோட்டையில்1கிரவுண்ட்1,407சதுர 
அடி நிலம் மற்றும் கட்டடம் ரூ.10,20,371.டான்சி நிலம்55கிரவுண்ட் 
ரூ.2,13,68,152.சசிகலா,இளவரசி,சுதாகரன் பெயரில்900ஏக்கரில் கொடநாடு 
டீ எஸ்டேட் மற்றும் ஃபேக்டரி ரூ.7,60,00,000.வெலகாபுரம் கிராமத்தில் 
மெடோ ஆக்ரோ ஃபார்ம்ஸுக்கு210.33ஏக்கர் நிலம் 
வாங்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா பெயரில் வட சென்னையில் சேயார் 
கிராமத்தில் விவசாய நிலம் வேதாசலமுதலியார் மகன் நடேச 
முதலியாரிடம்3.43ஏக்கர் நிலம் ரூ.17,060.ஜெயலலிதா சசிகலா பெயரில் 
சென்னை-28,சீனிவாச அவின்யூ நிலம் மற்றும் வீடு1,897சதுர அடி 
வெங்கடசுப்பனிடம் இருந்து ரூ.5,70,039வாங்கியது. சசிகலா பெயரில் 
சாந்தோம் ஆர்.ஆர். ஃப்ளாட் ரூ.3,13,530.சசி என்டர்பிரைசஸ் பெயரில் 
சென்னை4,அப்பாஸ் அலிகான் ரோட்டில் ரூ.98.904-க்கு ஷாப்பிங் 
மால்நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டில்11கிரவுண்ட்736சதுர 
அடி நிலம் ரூ.22,10,919மவுண்ட் ரோடு,மயிலாப்பூரில் ஜெயலலிதா 
பெயரில் வாங்கிய நிலம் மற்றும் கடை ரூ.1,05409.திருநெல்வேலி 
மாவட்டத்தில்1,200ஏக்கர்.சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் 
நீலாங்கரை,ஈஞ்சம்பாக்கம்,முட்டுக்காடு,வெட்டுவாங்கேணி,பையனூர்,சி
றுதாவூர்,சோழிங்கநல்லூர்செய்யூர்,புதுக்கோட்டை,திருச்சி,தஞ்சை,மன்
னார்குடி என தமிழகத்தின் பலமாவட்டங்களில் காலி 
நிலம்,கட்டடம்,கடைகள் மற்றும் விளைநிலங்களும்வாங்கப்பட்டுள்ளன. 
சென்னையில் கிண்டி,டி.டி.கே ரோடு,மவுண்ட் ரோடு,லஸ் பகுதிகளில் 
இடங்கள்,கட்டடங்கள் வாங்கப்பட்டுள்ளன.பையனூர் பங்களா 
ரூ.1,25,90,261.ஹைதராபாத் திராட்சைத் தோட்டப் பண்ணை வீடு 
ரூ.6,40,33,901.போயஸ் கார்டன் வீடு விரிவாக்கம் ரூ.7,24,98,000.சிறுதாவூர் 
பங்களா ரூ.5,40,52,298உட்பட பல இடங்களில் உள்ள 
பண்ணைவீடுகள்,புதிய கட்டடங்களின் மராமத்துப் பணிகளின் 
செலவுகள்பட்டியலிடப்பட்டன.இளவரசி அக்கவுன்டில் அபிராமிபுரம் 
இந்தியன் வங்கியில் ரூ.2,42,211.ஜெயலலிதா அக்கவுன்டில் மயிலாப்பூர் 
கனரா வங்கியில் ரூ.19,29,561.மயிலாப்பூர் ஸ்டேட் பேங்க்கில் 
ரூ.1,70,570.சசிகலா பெயரில் கிண்டி கனரா வங்கியில் ரூ.3,17,242சுதாகரன் 
அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.5,46,577 என,பல 
பெயர்களில் பல வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.ஜெயலலிதா 
பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியரா - 
ரூ.4,01,131,மாருதி800ரூ.60,435,மாருதிஜிப்ஸி,ட்ராக்ஸ் ஜீப். ஜெயா 
பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார்,டாடா மொபைல் வேன் என பல 
மாடல்களில்30-க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.போயஸ் 
கார்டனில் கைப்பற்றப்பட்ட389ஜோடி செருப்புகள் ரூ.2,00,902, 914பட்டுப் 
புடவைகள் ரூ.61,13,700 மற்ற புடவைகள் ரூ.27,08,720மற்றும் பழைய 
புடவைகள் ரூ.4,21,870. 28கிலோ தங்க நகைகள் 
குறிப்பாகஇசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான 
சென்னையை அடுத்த ஊரில்22ஏக்கர்நிலத்தினை சுதாகரன் மிரட்டி 
வாங்கியது குறித்துஅளிக்கப்பட்ட சாட்சியத்தினைநீதிமன்றத்தில் 
படித்துக் காண்பித்தார்.அத்துடன்சனிக்கிழமை வாதம் முடிவுற்றது. 
மீண்டும் நேற்றய தினம் அவ்வாதம்தொடங்கியது. அப்போது அரசு சிறப்பு 
வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகி,ஏற்கனவேஇவ்வழக்கு தொடர்புடைய 
சாட்சிகள்வழங்கியிருந்து,பதிவு செய்யப்பட்டவாக்குமூலங்களை 
படித்துக்காண்பித்தார். அதில் குறிப்பாக, சசிகலாவும்,இளவரசனும் 
சென்று நீலாங்கரையில் உள்ள ஒரு பங்களாவை சுற்றிப்பார்த்து 
அதைவாங்கியது சம்பந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் 
வழங்கியிருந்த சாட்சியத்தைபடித்துக் காண்பித்தார். அதேபோன்று 
நீலாங்கரையில் நீச்சல் குளம் உள்ளிட்ட ஒரு பங்களா 
அமைந்தஇடத்தினைசுதாகரன் வாங்கியது சம்பந்தமாக அந்த இடத்தின் 
உரிமையாளர்அளித்திருந்த சாட்சியத்தையும் நீதிமன்றத்தில் பவானிசிங் 
படித்தார்.மேலும்,ஜெயலலிதா கொடநாட்டில் வாங்கிய800ஏக்கர் 
நிலத்தினை சீரமைக்கவேளாண்மைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணனை 
அழைத்தது பற்றி அந்த அதிகாரியேசாட்சியம் அளித்துள்ளதைப் படித்து 
காண்பித்தார். 1,000-க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் என306சொத்துகளின் 
அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573ஆகும்''என்று விடாமல் வாசித்து 
முடித்தார்.இதனை மறுத்து ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து 
அவரது வழக்கறிஞர் பி.குமார் வாதிட்டார். அதனைமறுத்து அரசு 
வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார்100மணி நேரம்வாதிட்டுள்ளனர். இதே 
போல சசிகலா,சுதாகரன்,இளவரசி 
ஆகியோரின்வழக்கறிஞர்கள்,ஜெயலலிதாவிற்கும் இவ்வழக்கிற்கும் 
தொடர்பில்லை. திமுகவின்அரசியல் பழிவாங்கும் வழக்கு'என 
சுமார்90மணி நேரம் வாதிட்டுள்ளனர்.சுமார்5ஆயிரம் பக்கத்துக்கு 
எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல்செய்துள்ளனர்.சொத்து குவிப்பு 
வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது 
வாதமாக445பக்கங்களில் எழுத்துப்பூர்வமானஆதாரங்களை 
அடுக்கியிருந்தார். கடந்த28.8.2014-ம் தேதி ஒரே நாளில் ஜெயலலிதா 
தரப்பு,அரசு தரப்பு என இரு தரப்பு இறுதிவாதத்தின் நிறைவுத் தொகுப்பு 
வாதத்தை முடித்து எழுத்துபூர்வமான வாதத்தையும் பெற்று அன்றே 
தீர்ப்பு தேதியை அறிவித்து பரபரப்பை கூட்டினார். நீதிபதி மைக்கல் டி 
குன்ஹா............கடந்த18ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் 
குவிப்பு வழக்கு தீர்ப்பைநெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற 
நீதிபதி ஜான் மைக்கேல்டி குன்ஹாவே மிக முக்கிய காரணம்.1996-ம் 
ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் 
தொடங்கியசொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் 
சிறப்பு நீதிமன்றம்,சென்னை உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றம்,பெங்களூர் 
சிறப்பு நீதிமன்றம்,கர்நாடக உயர்நீதிமன்றம் என 
கடந்த18ஆண்டுகளில்6நீதிமன்றங்களின் படிகளைஏறி இருக்கிறது. 
சென்னைதனிநீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்துஆறுமுக 
பெருமாள் ஆதித்தன் சென்னை தனி நீதிமன்றம்அன்பழகன் சென்னை 
தனி நீதிமன்றம்ராஜமாணிக்கம் சென்னை தனி நீதிமன்றம்மதிவாணன் 
சென்னை தனி நீதிமன்றம்பச்சப்புரே பெங்களுரு சிறப்பு 
நீதிமன்றம்கிருஷ்ணப்பா பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்மனோலி 
பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்ஆன்டின் பெங்களுரு சிறப்பு 
நீதிமன்றம்மல்லிகார்ஜுனய்யா பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்சோமராஜ் 
பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்பாலகிருஷ்ணா பெங்களுரு சிறப்பு 
நீதிமன்றம்முடிகவுடர் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்ஜான் மைக்கேல் டி 
குன்ஹா பெங்களுரு சிறப்பு நீதிமன்றம்வரை 14 நீதிபதிகள் 
இவ்வழக்கைவிசாரித்துள்ளனர்.ஜான் மைக்கேல் டி'குன்ஹா14-
வதுபெங்களுரூ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த31-10-
2013அன்றுபொறுப்பேற்றுக்கொண்டார்.பெங்களூர் சிபிஐநீதிமன்றத்தின் 
நீதிபதியாகவும்,பெங்களூர் மாவட்ட நீதிமன்றபதிவாளராகவும் 
பணியாற்றிய இவர்கடந்த11மாதங்களில் வழக்கை தீர்ப்பை 
நோக்கிநகர்த்தியுள்ளார். அதற்கு காரணம் அவருடைய கடினமான 
உழைப்பும்,கண்டிப்பானஅணுகு முறையும் தான் காரணம். மேலும் மனு 
மேல் மனு போட்டு நீதிமன்றத்தின்நேரத்தை வீணடித்த தனியார் 
நிறுவனங்களின் மனுக்களை மிகச்சரியாக கையாண்டார்.முதல் 
முறையாக அவர்களுக்கு அபராதம் விதித்தார். அரசு வழக்கறிஞர் 
பவானிசிங் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவரு டைய இரு 
நாள் ஊதியம் 1.2 லட்சத்தை அபராதமாக விதித்தார். உச்சநீதிமன்றத்தால் 
நியமிக்கப்பட்டஅரசு வழக்கறிஞருக்கு அபராதம் விதித்த‌து அதுவே 
முதல்முறை.டி குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 
ஆரம்பித்ததும் வாரத்தின்5நாட்களும் விசாரணையைதொடர்ந்து 
நடத்தினார். இதற்காக தினமும்18மணி நேரம்ஒதுக்கி வேலை 
செய்தார்.அதுவும் தீர்ப்பு தேதியை குறித்த பிறகு,நீதிமன்றத்தை சுத்தம் 
செய்பவர்கள்வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து 
விடுவார். தினமும் மாலை6மணிக்கு தான் வீட்டிற்கு திரும்புவார். வழக்கு 
குறித்த அனைத்துஆவணங்களையும் படித்து,அவ்வப்போது 
குறிப்பெடுத்துக்கொள்வார் என பெங்களூர்சிறப்பு நீதிமன்ற ஊழியர்கள் 
நீதிபதி டி'குன்ஹாவின் பாணி குறித்துவிவரித்தனர்.நீதிபதி 
டிகுன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு 
அளித்தால்,அந்தவழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங்களை 
அணுகினாலும் தோல்வியேஅடையும். அந்த அளவுக்கு தீர்ப்பு 
வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடகநீதித்துறை வட்டாரங்கள் 
கூறுகின்றன. தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே 
கடந்த4தினங்களாக திருத்தி,தட்டச்சு செய்துள்ளார்.இதனிடையே இசட் 
பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு 
உரியபாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் 
சிறப்பு 
நீதிமன்றம்பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 
உள்ள காந்தி பவனுக்குமாற்றப்பட்டது. 27ந்தேதி காலை 10.45க்கு தமிழக 
முதல்வராக இருந்த ஜெ, சசிகலா, சுதாகரன், இளவரசி சிறை 
வளாகத்துக்குள் உள்ள நீதிமன்றத்துக்கு சென்றனர். அதுவரை இது ஒரு 
பொய் வழக்கு என்றே அதிமுகவினர் நம்பினர். 2014 செப்டம்பர் 27ந்தேதி 
மதியம் 2.25மணியளவில் அந்த நம்பிக்கையை பொய்யாக்கியது 
நீதிபதியின் தீர்ப்பு. தமிழக முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான 
ஜெவுக்கு,4ஆண்டுகள்சிறைத் தண்டனையும்100கோடி ரூபாய் 
அபராதமும் 
விதிக்கப்பட்டது. அதோடு சசிகலா, சுதாகரன், இளவரசிஆகியோருக்கு 4 
ஆண்டு 6 மாதங்கள், தலா 10 கோடி மற்றும் 10 ஆயிரம் அபராதம் என 
தீர்ப்பை வாசித்தார். இந்த தீர்ப்பு ஜெவின் அரசியல் வரலாற்றில் ஒரு 
கரும்புள்ளியாகிவிட்டது. இந்தியாவில் முதல்வர் பதவியில் 
இருக்கும்போதே ஊழல்தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று 
தீர்ப்பளிக்கப்பட்டுசிறைத்தண்டனை பெற்ற நாட்டின்'முதல்'முதல்வர் 
என்ற பெயரை ஜெயலலிதா எடுத்துள்ளார். ( இதே சட்டத்தின் கீழ் பிகார் 
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாத்வ்பதவி பறிக்கப்பட்டு,சிறையில் 
அடைக்கப்பட்டார். ). தீர்ப்புக்கு பின் தமிழகம் முழுவதும் வன்முறை 
ஆட்டத்தை ஆடினர் ஆளும் அதிமுகவினர். கவர்னர் ரோசய்யா உயர் 
அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை 
நிலைநாட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment


Labels