வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



31/10/2014

பெரம்பலூரில் பால் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 3ல் திமுக ஆர்ப்பாட்டம்!


பெரம்பலூரில்
பால் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 3ல் திமுக ஆர்ப்பாட்டம்!


 பெரம்பலூர், அக். 31:
பால்விலை, மின்கட்டண உயர்வுகளை கண்டித்து பெரம்பலூரில் நவம்பர் 3ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூரில் மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம், பாலக்கரையிலுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா முகாம் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.


மாவட்ட அவைத்தலைவர் வெள்ளச்சாமி தலைமை வகித் தார். நகர செயலாளர் ரா ஜேந்திரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் துரைசாமி சிறப்புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், குன்னம் எம்எல்ஏ சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜ்குமார், டாக்டர் தேவராஜ், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், தங்கராஜ், மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், துரைராஜ், பொருளாளர் ஜெகதீசன், துணைச்செயலாளர்கள் டாக்டர் அண்ணாதுரை, வெங்கடாசலம், மகாதேவிஜெயபால் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பால் விலை உயர்வு, மின்கட் டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து பெரம்பலூரில் நவம்பர் 3ம்தேதி தாலுகா அலுவலகம் முன் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
நவம்பர் 6ம்தேதி பெரம்பலூருக்கு வருகைதரும் திமுக பொ ருளாளர் ஸ்டாலினுக்கு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிப்பது. வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட் டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைந்து நிவாரணநிதி வழங்க கோருவது.
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவுக்கு மாவட்ட செயற்குழு சார்பாக பாராட்டு தெரிவித்துக்கொள்வது. 6ம் தேதிக்குப் பிறகு நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பின் நகலை வீடு வீடாக மக்களிடம் கொ ண்டுபோய் சேர்ப்பது. மேலும் வட்டார, ஒன்றிய அளவில், தமிழக அரசின் அவலங்களை விளக்கி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது. துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பிரபாகரன், குரும்பலூர் வெங்கடேசன், ஜாஹிர்உசேன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மாரிக்கண்ணன், முருகேசன், செல்வமோகன், சன்சம்பத், செந்தில்நாதன், ரமேஷ், சரவணன், வேணுகோபால், ரவி, முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஸ்வரன், கிருஷ்ணாபுரம் நல்லத்தம்பி, அத்தியூர் மதியழகன், பெரம்பலூர் நடராசன் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நன்றி  : தினகரன் நாளிதழ்.


No comments:

Post a Comment


Labels