வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

02/11/2014

2016-ல் திமுக: ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி ஃபேஸ்புக்கில் பிரச்சாரம்!'தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016'-க்கான களத்தில், மிகத் தீவிரமாக பிரச்சாரத்துக்கு இப்போதே பணிகளைத் தொடங்கியிருக்கிறது திமுக.

குறிப்பாக, திமுக ஃபேஸ்புக் மூலம் பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பது, மக்கள் மத்தியில் இணையம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தைக் காட்டுகிறது.

'2016-ல் திமுக' என்ற நோக்கத்துடன் 'DMK for 2016' என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் தனிப் பக்கம் ஒன்றை அக்கட்சி உருவாக்கியுள்ளது. அதில், திமுகவின் வரலாறு தொடங்கி, தற்போதைய செய்லபாடுகள் வரையில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்சாரத்தை, 2016 தேர்தலுக்காக 'தமிழக மக்கள் நலன் அரசுக்கான இயக்கம்' என்று திமுக அறிமுகக் குறிப்பை வழங்கியிருக்கிறது.

ஃபேஸ்புக்கில் கட்டணம் செலுத்தி, தனது '2016-ல் திமுக' பக்கத்தை விளம்பரப்படுத்தி வரும் அக்கட்சி, அந்தப் பக்கத்துக்கு லைக்-குகளைக் குவிப்பதில் முழு கவனம் செலுத்தியுள்ளது. மேலும், #DMKfor2016 என்ற ஹேஷ்டேக்-கையும் பிரபலப்படுத்தி வருகிறது.

இந்தப் பிரச்சாரத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்தான் முழுக்க முழுக்க முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்பது மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம்.

மு.க.ஸ்டாலின் படங்கள், அவரது நடவடிக்கைகளையொட்டிய பதிவுகள்தான் இந்தப் பக்கத்தில் அதிகம் பகிரப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி குறித்த பதிவுகள்கூட எப்போதாவதுதான் பதியப்படுகிறது.

No comments:

Post a Comment

Labels