வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

09/08/2014


தமிழகம் முழுவதும் தளபதி மு.க.ஸ்டாலின் 2 

மாதம் சுற்றுப்பயணம்:

தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் ‘‘தொடர்பு கொள்வோம்-வெளிப்படுத்துவோம்-கலந்துரைப்போம்’’ எனும் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் சென்று தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.

நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய தளபதி மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 2 மாதம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறார்.

இதுதொடர்பாக தி.மு.க. சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. பொருளாளர்-இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்களை நேரில் சென்று சந்திக்கிறார். தொண்டர்களுக்கும், தலைமைக்குமான நேரடி உறவு என்பது தி.மு.க.வின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரால் பலப்படுத்தப்பட்ட உறவாகும். அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், தலைமைக்கு தொண்டர்கள் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை பகிர்த்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கும் வகையில் இந்த முன்முயற்சியான நிகழ்வு நடைபெற உள்ளது.

தி.மு.க.வின் அரசியல் நிர்வாக மாவட்டங்களான ஒருங்கிணைந்த 35 மாவட்டங்களிலும் தொண்டர்களை சந்திக்கும் வகையில் ஆகஸ்ட்.7(நேற்று) தொடங்கி ஏறத்தாழ 2 மாதங்களுக்கு மு.க.ஸ்டாலின் பயணம் செய்கிறார்.

தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:-

* தி.மு.க.வில் கிளை கழக தொண்டர்கள் முதல் அனைத்து மட்டத்திலும் உள்ள தொண்டர்களை தளபதி மு.க.ஸ்டாலின் சந்திப்பதற்கும், அனைத்து நிலையிலும் உள்ள தொண்டர்கள் தங்கள் எண்ணங்களை மு.க.ஸ்டாலினிடம் வெளிப்படுத்தி, இயக்க நிலவரம் தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து கொண்டு, அதுகுறித்து கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பினை உருவாக்குகிறது.

* கட்சிப்பதவி ஏதுவுமின்றி தி.மு.க. உறுப்பினர் என்பதையே பெரும் பொறுப்பாகக் கருதும் சாதாரண தொண்டர்களின் குழு, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் குழு என மாவட்ட தலைமை வரை 7 வகையான வெவ்வேறு குழுக்களுடனும், தி.மு.க.வின் துணை அமைப்புகளான இளைஞரணி, மாணவரணி, மகளிரணி அடங்கிய குழுக்களுடனும் தனித்தனியாக 45 நிமிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.

தொண்டர்களுடன் மதிய உணவு

* கலந்துரையாடலின்போது அடிப்படை தொண்டர்களுடன் தளபதி் மு.க.ஸ்டாலின் மதிய உணவு சாப்பிடுகிறார்.

* தி.மு.க. தொண்டர்களை நேரில் சந்திப்பதன் மூலம் அவர்களின் கருத்துக்களை கேட்டறிதல், தி.மு.க.வினரின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல், வெளிப்படையான விவாதங்களை மேற்கொள்ளுதல், அதில் வெளிப்படும் ஆரோக்கியமான புதிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு தீர்வு காணுதல் ஆகியவையே ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும்.

* தி.மு.க.வின் சிறப்பம்சமான தலைமை-தொண்டர்கள் உறவை காலத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தும் வகையில், மு.க.ஸ்டாலினை நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க தொண்டர்களுக்கு வாய்ப்பையும், அதிகாரத்தையும் வழங்குவதே இந்த முன் முயற்சியின் இலக்கு ஆகும்

No comments:

Post a Comment

Labels