வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

08/08/2014

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை! கலைஞர் கண்டனம்!!


சென்னை, ஆக. 8:
தமிழ்நாட் டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கலைஞர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சி வந்தாலும் வந்தது; சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளை, வாரம் ஒரு கற்பழிப்பு என்று செய்திகள் செந்தேளாய்க் கொட்டுகின்றன.

பெண்கள் எந்த அளவுக்கு தமிழகத்தில் பாதுகாப் பாக இருக்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்.
?
அதிமுக ஆட்சியில், பொள்ளாச்சியில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
?
நன்னிலம் அருகே விமலா கோயம்பேட்டில் இளம் பெண் மலர் என நீளும் பட்டியலில் கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வெற்றிலைக் கொடிக்காலுக்குள் பிளஸ் 2 படித்து முடித்த தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவி வினிதா கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
?
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்து ஆண்டியப்பன் கிராமத்தில் 9 வயது சிறுமி காயத்ரி, பாலி யல் பலாத்காரம் செய்து படுகொலை.
?
சிவகிரியில் நந்தினி என்ற பெண் கற்பழித்துக் கொலை. சைதாப்பேட்டை யில் விஜயா என்ற பெண் ணின் சடலம். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 13 வயது சிறுமி, பள்ளி மாணவி புனிதா கற்பழிக்கப்பட்டுக் கொலை.
?
நாகை மாவட்டத்தில் 11 வயது தலித் இனத்தைச் சேர்ந்த சிறுமியை 2 பேர் கற்பழித்தனர். விருதாசலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் சுகந்தி என்கிற இளம் பெண் கற்பழிக்கப்பட்டார்.
?
சிதம்பரம் அருகில் மஞ்சக்குழி கிராமம், சந்தியா என் கிற இளம்பெண், கற்பழிக்கப்பட்டு 3ம் மாடியிலிருந்து வீதியில் எறியப்பட்டாள்.
?
தர்மபுரியில் அரூர் தாலுக்காவில் தாதரா வலசை கிராமத்தில் மேனகா என்கிற இளம்பெண் திருமணமான வர் கற்பழித்துப் படு கொலை. தூத்துக்குடியில், மாதாநகர் 2ம் தெருவில் மாரியம்மாள் என்கிற இளம்பெண் வீடு புகுந்து கற்பழிக்கப்பட்டாள். விழுப்புரம் வானூர் ருக்மணிபுரம் பள்ளி மாணவி கல்கி கற்பழிக்கப்பட்டு சவுக்குத் தோப்பில் பிணமாகத் தொங்க விடப்பட்டாள்.
?
உடுமலையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவமா னம் தாங்க முடியாமல் தீக்குளித்தாள். நாமக் கல்லில் 18 வயது இளம்பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்
?
வேலூர் மாவட்டம், திமிரி என்கிற ஊரில் அபிநயா என்கிற 17 வயது பெண், அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாக, கற்பை காப்பாற்றிக் கொள்ள தீக்குளித்து தற்கொலை.
பாலியல் குற்றங்கள் மட்டுமா? அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு கொள்ளைகள் நடைபெறுகின்றன என்பதைப் பற்றி ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டு ள்ளது. கவனத்தைத் திசை திருப்பி, கொள்ளையடித்து வரும் கும்பலை தமிழ்நாடு போலீசாரால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் குழுவினர் 2013 முதல் இதுவரை 180க்கும் அதிகமான சம்பவங்களில் நகைக ளையும்,
^20
லட்சத்துக்கும் அதிகமான பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த வகையில் 2013ல் நடத்தப்பட்ட வழக்குகளில் 85 வழக்குகள் வரை இன்னமும் கண்டுபிடிக்கப்பட முடியாமல் உள்ளன. சென்னையில் அப்பாவிகள் கவனத்தை திசை திருப்பி நடத்தப்பட்ட 25 கொள்ளைகளில் ஒன்று கூடத் தீர்வு காணப்பட வில்லை என்று செய்தி வெளியிட் டுள்ளது.
2013, நவம்பர் முதல் வாரத்தில், திருச்சி, தஞ்சை, நாகையில் மட்டும் ஒரே நாளில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டதாக செய்தி வந்தது. எந்த அளவுக்கு இந்த ஆட்சியில் தாராள மனதுடன் அனுமதி தருகிறார்கள் என்பதற்கும் சில உதாரணங்கள் இதோ:
?
தேமுதிக சார்பில் கடலூரில் 2013 நவம்பர் மாதத் தில் பொதுக்குழுத் தீர்மானங்களை விளக்குவதற்காகப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய போது போலீசார் சட்டம், ஒழுங்கைக் காரணமாகக் காட்டி அனுமதி மறுத்து விட்டனர். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நேரத்தில், நீதிபதி சசிதரன், சட்டம், ஒழுங்கைக் காரணம் காட்டி பொதுக் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தது தவறானது. பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்புத் தருவது போலீசா ரின் கடமை; எனவே பொதுக் கூட்டம் நடத்த அனுமதி தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
?
மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர் ராமதாஸ் நுழையக்கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஓர் உத்தரவு பிறப்பித்தார்; கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்டத்திற்குள் அவரை நுழையக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
?
விடுதலைச் சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல். திருமாவளவனை விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தர்மபுரி மாவட்டத்திற்கே 144 தடை என்று இந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு, ஜனநாயக நடவடிக்கைகள் முழுவதுமாய் நசுக்கப்பட்டன.
கருணாநிதி கண்டனம்
?
விடுதலைச் சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல். திருமாவளவனை விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தர்மபுரி மாவட்டத்திற்கே 144 தடை என்று இந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு, ஜனநாயக நடவடிக்கைகள் முழுவதுமாய் நசுக்கப்பட்டன.
?
16&2&2013ல் சேலம் நாடாளுமன்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்காகவும், இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிட வும், காவல்துறை அனுமதி வேண்டி 30&1& 2013ல் மனுக் கொடுக்கப்பட் டது. அனுமதி கொடுக்க வில்லை. நீதிமன்றத்தில் முறையிட்டு, நீதிபதி ரவிச்சந்திர பாபு, குறிப்பிட்ட இடத் தில் செயல் வீரர்கள் கூட்டம் நடத்திட அனுமதி அளித் தார்.
திமுக நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமல்ல ரஜினிகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டதா? நடிகர் விஜய் பிறந்த நாள் கூட்டத்திற்கு அனுமதி தரப்பட்டதா? டெசோ மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டதா? கிடை யாது. நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற முடிந்தது.
தர்மபுரியில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் 3 பேர் பேருந்தில் சென்ற போது, தீ வைத்துக் கொல்லப்பட்ட வழக்கில், தர்மபுரி செஷன்ஸ் நீதிபதி கடுமையாகக் கூறிய போது, வழக்கில் தொடர்புடையவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவ்வழக்கை அனாதைக் குழந்தையைப் போல போலீஸ் அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
திருச்சியில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரஞ்சோதி என்பவர் மீது டாக்டர் ராணி கொடுத்த வழக்கில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப் பணித்தும், பல நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதிமுக ஆட்சியில் இன்னும் பரி காரம் கிடைத்தபாடில்லை.
முதல்வர் அறிவித்துள்ள 13 அம்சத் திட்டங்களில் முதல் 3 திட்டங்கள் பாலியல் வன்முறை வழக்குகளை இனி நடப்பவை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை யார் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றிய நிர்வாக அறிவிப்புகளாகும். 4ம் அம்சம்தான் குண்டர் தடுப்புச் சட்டம் ஏற்கனவே இந்த ஆட்சியில் இந்தச் சட்டம் முறை தவறிப் பயன்படுத்தப்பட்டுப் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. தங்களுக்குப் பிடிக்காதவர்களை இந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, அவர்கள் நீதிமன்றங்களின் மூலமாக நியாயம் பெற்று வருகிறார்கள். பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம். இது முதல்வரின் அறிவிப்பில் ஒரு அம்சம். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களு க்கு மருத்துவச் சிகிச்சைக்கான செலவை ஏற்பதும் ஒரு திட்டமாகும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட அந்த 13 அம்சத் திட்டங்கள் பிறகு என்னவாயிற்றோ? மற்ற பல அறிவிப்புக ளைப் போல, இந்த அறிவிப்புகளும் ஏட்டுச் சுரைக்காய் என்ற அளவில் நின்றுவிட்டதோ என்னவோ?
இவ்வாறு கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Labels