வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

28/08/2014

நடிகர் விஷாலுக்கு நான் வலைவிரிக்கிறேனா? 
ஸ்டாலினை சந்திக்க மறுத்தேனா? : 
மனம் திறந்தார் கலைஞர்


திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி :- முல்லைப்பெரியாறு அணையின் மழை அளவைக் குறிக்கச் சென்ற தமிழகப் பொதுப்ப ணித் துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் அவதூறாகப் பேசி விரட்டி யடித்திருக்கி றார்களே?

கலைஞர் :- கேரள வனத் துறைக்குச் சொந்தமான முல்லைக்கொடி, வனக் காவலை, தாண்டிக்குடி  ஆகிய மூன்று இடங்களில் “மழைமானி” பொருத்தப்பட்டுள்ளது. வாரந் தோறும் வியாழக்கிழமை அன்று தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அங்கே சென்று மழை அளவு, அணையின் நீர்வரத்து ஆகியவற்றை ஆய்வு செய்து வருவது வழக்கம். அதன்படி தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் 21-8-2014 அன்று படகு மூலம் முல்லைக் கொடிக்குச் சென்ற போது, அங்கேயிருந்த கேரள வனத் துறையினர் அவர்களைத் தடுத்து, அவதூறாகப் பேசியிருக்கிறார்கள். 

தமிழக அதிகாரிகள் படகில் திரும்பவும் தேக்கடிக்கு வந்து கொண்டிருந்த போது, தேக்கடி வனத்து றை ரேஞ்சர் சஞ்சீலன் தலைமையிலான வனத்துறையினர் மற்றொரு படகில் வந்து, தமிழக அதிகாரிகளின் படகை வழி மறித்து முல்லைக் கொடிக்கு மீண்டும் வந்தால் கைது செய்வோம் என்று மிரட்டியனுப்பியதாகச் செய்தி வந்துள்ளது. 

தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கேரள அரசின் வனத் துறையினரால்  மிரட்டப்ப ட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடுமையாகத்  தாக்கப்ப டுவதோடு, அவர்களிடமிருந்து கைப் பற்றிய படகுகளைத் திரும்ப ஒப்படைக்கும் பேச்சு க்கே இடமில்லை என்று இலங்கை அமைச்சர் கூறி நான்கு நாட்களாகி விட்டது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக அரசு தனக்குத் தானே நன்றி பாராட்டும் விழாவினை நடத்திக் கொண்டிருக்கின்றது. அதற்காக மதுரை மாநகரில் வைக்கப்பட்ட 500க்கு மேற்பட்ட “ப்ளக்ஸ் போர்டு”களை அகற்ற வேண்டுமென்று உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. 

அனுமதி பெறாமல் அந்தப் போர்டுகளை வைத்திருந் தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் உறுதியளித் திருக்கிறார். மற்ற துறை சம்பந்தப்பட்ட அறிவிப்பு களைதானே பேரவையில் படித்து, அதற்காக கட்சித் தலைவர்களை பாராட்டச் சொல்லிக் கேட்பது - துறை மானியங்களின் மீதான விவாதங்களின் போது எதிர்க்கட்சியினர் சாட்டுகின்ற குற்றச்சாட்டு களுக்கு பதிலளிக்க வேண்டிய அமைச்சர்கள், முதலமைச்சரைப் பாராட்டி யாரோ எழுதிக் கொடுத்த புகழாரங்களை ஒவ்வொரு நாளும் பேரவையிலே படிக்க, அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவது, உச்ச நீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணை மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தர விட்டால், அது தன்னால்தான் கிடைத்தது என்று நன்றி பாராட்டும் விழா நடத்திக் கொள்வது - இவையெல்லாம் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடைமுறைகளாகிவிட்டன. 

கேள்வி :- தமிழகத்தில் நடைபெறும் சில வார, நாளேடுகள் அப்பட்டமாக தி.மு.கழகத் தைப் 
பற்றிய உண்மைக்கு மாறான செய்தி களையே தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்களே?

கலைஞர் :- அப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுடைய பிழைப்பு நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடல்தான் அந்தச் செய்திகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. அப்படிப்பட்ட செய்திகளை வெளியிட நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும்? இப்படிப் பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை வெளி யிட்டால்தான் தங்கள் பத்திரிகைக்கு அரசு விளம்பரம் கிடைக்கும் என்ற அளவுக்கு அந்தப் பத்திரிகையாளர்கள் ஆளாகியிருக்கிறார்கள்! இப்படித்தான் பிழைக்க வேண்டும் என்பது ஒரு ரகம்; எப்படியும் பிழைக்கலாம் என்பது இன்னொரு ரகம்! அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள்! உதாரணத்திற்கு “தினமலர்” நாளேடு வெளியிட்ட இரண்டு செய்திகளைக் கூறுகிறேன். “நடிகர் விஷாலுக்கு வலை, கருணாநிதி விருப்பம் நிறைவேறுமா?” என்ற தலைப்பில் ஒரு செய்தி. நடிகர் சங்கப் பொதுக் குழு கூட்டத்தில் அவர் பேசியதையொட்டி, அவரை கழகத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நான் கூறினேனாம்

 இது முழுக்க முழுக்க பொய்ச் செய்தி. அதுபோலவே திருமண நாளையொட்டி என்னிடம் ஆசி பெற என் மகன் ஸ்டாலினும், மருமகளும் கோபாலபுரம் வந்தார்கள்; வந்தவுடன் நேரே வந்து என்னிடம் ஆசி பெற்றுச் சென்றார்கள். அதைப்பற்றி என்னைச் சந்திக்க அவர்கள் விரும்பியபோது நான் மறுத்து விட்டதாக ஒரு பொய்ச் செய்தியை அந்த நாளேடு வெளியிட்டிருக்கிறது. 

நான் அவர்களைச் சந்திக் கவோ, ஆசி கூறவோ மறுத்து விட்டதாக அந்த நாளேடு நிரூபிக்க  முடியுமா? அந்தப் பத்திரிகை யின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குத் தெரிந்துதான் இப்படியெல்லாம் வெளியிடுகிறார்களா? அல்லது அவருடைய பார்வையில் அந்த நாளேடு தற்போது நடைபெறவில்லையா? உதாரணத் திற்கு 2 செய்திகளை மட்டும் கூறினேன். ஒவ்வொரு நாளும் அந்த நாளேடு கழகத்தைப் பற்றி இப்படி இட்டுக்கட்டி செய்திகளை வெளியிடுவதையே அண் மைக்கால வழக்கமாக கடைப்பிடித்து வருகிறது. நல்ல அளவிலே நடைபெறும்  அந்த நாளேட்டுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு பிழைப்பு? 

கேள்வி :- ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர் சென்னையில் தனது வீட்டு வாசலில் அன்றாடம் ஒரு திருக்குறளை, நீங்கள் எழுதிய உரையுடன் எழுதி வைப்பதாக செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- பாராட்டப்பட வேண்டிய - தமிழர்கள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய செய்தி. நான் 
ஆட்சிப் பொறுப்பிலே போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போதுதான், பேருந்துகளிலும், அரசினர் தங்கும் விடுதிகளிலும் திருக்குறளை எழுதி வைக்க ஆணை பிறப்பித்தேன். வள்ளுவர்கோட் டத்தை எழுப்பினேன். குமரியில் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை வடித்தேன். குறளோவியம் எழுதினேன். 

குறளுக்கு உரை எழுதினேன். அந்த வகையில் தற்போது ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர் தன் வீட்டு வாசலில் அன்றாடம் ஒரு குறளையும், அதற்கு நான் எழுதிய உரையையும் எழுதி வைக்கின்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. 

கேள்வி :- கழக ஆட்சியில் தொடங்கப் பட்டது என்பதற்காக கிடப்பில் போடப்பட்ட தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம் பற்றி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு என்ன ஆயிற்று?

கலைஞர் :- ராதாபுரம் தொகுதியின் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர், அப்பாவு அவர்கள் தான் 
இந்த வழக்கினை உயர் நீதிமன்றத்தில் தொடுத் திருந்தார். தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம் என்பது 2009ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத் தின் மொத்த மதிப்பீடு 369 கோடி ரூபாய். 2009இல் 65 கோடி ரூபாயும், 2010இல் 41 கோடி ரூபாயும், 2011இல் 107 கோடி ரூபாயும் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு, இந்தத் திட்டத்தின் இரண்டு கட்டப் பணிகள் 
முடிவடைந்தன. 

அதன்படி தாமிரபரணி ஆற்றிலிருந்து மூலக்கரைப் பட்டி வரை கால்வாய் வெட்டும் பணி முடிவடைந்தது. மூன்று மற்றும் நான்காம் கட்டப் பணிகளுக்காக தமிழகப் பட்ஜெட்டில் 2012-13ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாயும், 2013-2014ஆம் ஆண்டில் 119 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், அந்தப் பணிகள் மேம்படுத்தப்படாமல், அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்த 219 கோடி ரூபாயில் 25 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகையை பொதுப் பணித்துறை அரசுக்குத் திரும்ப அனுப்பிவிட்டது. தாமிரபரணி ஆற்றிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட பகுதிக்குத் திருப்பி விடும் இந்தத் திட்டத்தை செயல் படுத்த வேண்டுமென்றுதான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அப்பாவு கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது, நீதியரசர்கள் இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் எதற்காக நிறுத்தப்பட்டன என்றும், பணியை எப்போது தொடங்குவீர்கள் என்றும், எவ்வளவு காலத்திற்குள் முடிப்பீர்கள் என்றும், இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப் பட்ட நிதியை ஏன் திரும்ப அரசுக்கு அனுப்பினீர்கள் என்றும், இத்திட்டம் 6 கிடப்பில் போடப்பட்டதால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு யார் பொறுப் பேற்பது என்றும், இதற்கு மூன்று வாரங்க ளுக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள். 

கேள்வி :- பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்  தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதியே கூறியிருக்கிறாரே?

கலைஞர் :- அவருடைய பொறுமையையும் சோதிக்கக் கூடிய அளவுக்கு செயல்கள் நடத்தப் படுவதால், அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கை மேலும் இழுத்தடிக்க முயற்சித்தால், இறுதிக்கட்ட வாதம் முடிந்ததாகக் கருதி தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே சொத்துக் குவிப்பு வழக்கை மேலும் மேலும் ஜெயலலிதா தரப்பினர் இழுத்தடிக்க முயற்சிக் கிறார்கள் என்பது திட்டவட்டமாகத்தெளிவாகி விட்டது. குற்ற அறிக்கையினை போலீசார் தாக்கல் செய்து 15 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்று, தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 

இந்த நிலையில் குற்றம் சாற்றப்பட்டோர், குற்ற அறிக்கையில் கூட்டுச் சதி செய்ததாகக் கூறப்பட்டி ருப்பதை நீக்கும்படி மனு செய்கிறார்கள் என்றால், இத்தனை ஆண்டுக் காலம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 

இந்த மனுவுக்கு, இறுதித் தீர்ப்புடன் சேர்த்து தீர்ப்பு வழங்குவதாக சிறப்பு நீதிபதி கடந்த 20ஆம் தேதியன்று தெரிவித்துவிட்டார். ஆனால் அத்துடன் திருப்தி அடையாமல், கர்நாடக உயர் நீதி மன்றத்தில் இந்த மனு குறித்து ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள். ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தவறில்லை, மூல வழக்கிற்குத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறார். இப்படியெல்லாம் தாமதம் செய்வதால் இறுதிக் கட்ட வாதத்தை மேலும் இழுத்தடிக்க முயற்சித்தால், தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிபதிகூறியிருக்கிறார். 
 
Nandri nakkherran
 
 

No comments:

Post a Comment

Labels