வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



21/01/2014

கலைஞரின் உண்மையான பலம் எது ? என்ற கேள்விக்குக் கலைஞரே பதிலளித்திருக்கிறார்.

1976 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது கழகத்தின் மீது இந்திரா அரசின் அடக்குமுறைக் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.

அப்பொது கலைஞரை வெளியூர்க் கழக தொண்டர்கள் லாரிகள் பஸ்கள் வேன்களில் வந்து சந்திக்கக்கூட முடியாதபடிக்கு அன்றைய கவர்னர் ஆட்சி தடுத்தது. பஸ் வேன் உரிமையாளர்கள் மிரட்டப்பட்டார்கள்.

அப்போது தி.மு.கழகத் தொண்டர்கள் திருப்பதி திருத்தணிக்குப் போகிறோம் என்று கூறி பஸ்கள் வேன்களை வாடகைக்கு எடுத்து திருப்பதிக்குப் போகிறவர்கள் போல தலையை மொட்டை அடித்து கொண்டு சந்தனத்தை தலைநிறைய அப்பிக்கொண்டு திருப்பதி, திருத்தணி சாலைகள் மூலம் சென்னை வருவார்கள்.

அந்தத் தொண்டர்கள் பற்றி கலைஞரே கூறுகிறார்:-
”பழுத்த பக்தசிரோன்மணிகளைப்போல என் வீட்டுக்கு வந்து சேருவார்கள். எனக்கு தைரியம் கூறுவார்கள்.’கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம்’ என்று கண்கலங்க என் கைகளை பிடித்துக்கொண்டு உறுதி முழக்கம் செய்வார்கள். வழக்கு நிதி தருவார்கள்.

கூட்டமாக என்னுடன் நின்று குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுத்து கொண்டார்கள். கூட இருந்த மேலிடத்துத் தலைவர்கள் சிலர் கலங்கிப்போய் கைபிசைந்து செய்வதறியாது திகைத்துப்போய் என்னையும் செயலற்றவனாக ஆக்க முனைந்தபோது

அந்த கழக கண்மணிகள் மொட்டைத் தலையுடன் வந்து எனக்கு அளித்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. ஏஅப்பா அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் இன்றைக்கு இந்த கழகம்ஏது?”.

*** என்று தொண்டர்களின் பலமே தி.மு.கழகத்தின் பலம்;தமது சொந்த பலம் அதுவே என்பதை நன்றி பொங்கிட குறிப்பிட்டிருக்கிறார். ***

No comments:

Post a Comment


Labels