வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



17/10/2013

இனி வரும் எந்த தேர்தலிலும் திமுக வெல்வது உறுதி....தளபதி! 





திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா, தேர்தல் நிதியளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம், திருவண்ணாமலை – திருக்கோவிலூர் சாலையில் உள்ள அண்ணா திடலில் நேற்று இரவு நடந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்து தேர்தல் நிதியை திமுக பொருளாளரும், இளைஞரணிச் செயலாளருமான தளபதி அவர்கள் பெற்றுக் கொண்டார்.பின்னர் தளபதியார் பேசியதாவது:–

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதியாக ரூ.7 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரத்து 777 வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பிற மாவட்டங்களில் வழங்கப்பட்ட தேர்தல் நிதிகளைவிட இதுதான் அதிகப்படியான நிதி. இன்னும் 2 மாவட்டங்கள் சார்பில் நிதி வழங்க வேண்டியுள்ளது. இருப்பினும் இதுதான் அதிகப்படியான நிதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

அதிகப்படியான நிதி வழங்கிய திருவண்ணாமலை மாவட்ட திமுகவுக்கும், எ.வ.வேலு, கு.பிச்சாண்டி மற்றும் அனைத்துப் பிரிவு நிர்வாகிகளுக்கும் என்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமுதாயத்திலோ, மத ரீதியாகவோ எத்தனை பிரிவுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கல்வியில் மட்டும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். இக்கல்வி முறையால் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

திமுக ஆட்சியின் போது ரூ.100 கோடியில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, ரூ.36 கோடியில் திருவண்ணாமலை நகராட்சிக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலம் (சிப்காட்), செங்கம் அருகே பால் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை கொண்டு வரப்பட்டன.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுகதான். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களை போல இனி எந்த முதல்வராலும், எந்த மாநிலத்திலும் செய்ய முடியாது.

அப்படி யாரும் பிறந்து வரவும் முடியாது., தேர்தலில் தோற்றுவிட்டோம் என்பதற்காக துவண்டுவிடவில்லை. வெற்றி பெற்றால் கோட்டை, இல்லையென்றால் கொட நாடு என்றிருக்கவில்லை. எந்த நேரத்தில் மக்களவைத் தேர்தல் வந்தாலும், அதைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் இவ்வாறு தளபதி பேசினார்.

No comments:

Post a Comment


Labels