வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



16/10/2013

ஜெயலலிதாவிற்கு குட்டிக் கதை சொன்ன தளபதி
******************************************

பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் இரண்டு மாணவர்களை முன்வைத்து குட்டிக் கதை ஒன்றை தளபதி அவர்கள் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்த முப்பெரும் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், தமிழக முதல்வர் அம்மையாரின் கவனமெல்லாம் இப்போது பெங்களூரில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கின் மீது தான் உள்ளது.

உலகத்தில் தன் வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அரசு வழக்கறிஞர் இன்னார் தான் இருக்க வேண்டும் என கேட்கும் அவலம் இங்கு தான் உள்ளது.

அம்மையார் பேச தொடங்கினால் கதை படிப்பார். கதை என்பது சொல்வதற்கு ஆனால் இவர் படிப்பார். அவரைப்போன்று நான் கதை படிக்கமாட்டேன் சொல்கிறேன்.

இரண்டு மாணவர்களின் வீடும் எதிர் எதிரே இருந்தது. அதில் ஒருவன் நல்லவன், மற்றொருவன் கெட்டவன். நல்லவன் ஒழுங்காக படிப்பான், அதிக மதிப்பெண் பெறுவான். கெட்டவனோ ஊரை சுற்றுவது, வீண் வம்புக்கு போவது, சரியாக படிக்காதது இதனால் மதிப்பெண் குறைவாக பெறுவான்.

நல்லவனை முந்த வேண்டும் என்பது கெட்டவனின் எண்ணம். ஆனால் அது அவனால் முடியவில்லை.

அதனால் அவன் அந்த பள்ளியின் தலைமையாசிரிடம் டியூஷன் சென்றான். தலைமையாசிரிடம் டியூஷன் சென்றால் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் கெட்ட மாணவனுக்கு அதிக மதிப்பெண் தர தொடங்கினார்கள்.

அவன் நல்ல மாணவனை விட அதிக மதிப்பெண் பெற்றுக்கொண்டு இருந்தான். காலாண்டு, அரையாண்டு தேர்விலும் முதல் மாணவனாக அந்த கெட்ட மாணவன் வந்தான்.

பொதுத்தேர்வு வரும் போது தலைமையாசிரியர் ஓய்வு பெற்றுவிட்டார். உடனே கெட்ட மாணவன் அவர் ஒய்வு பெற அனுமதிக்கமாட்டேன் என சத்தமிட்டான். இது அம்மையாருக்கு நாம் சொல்லும் கதை. இந்த கதை பெங்களுர் சொத்து குவிப்பு வழக்குக்கான கதை. இந்த கதையில் உள்ள கெட்ட மாணவனை போன்று தான் அம்மையார் செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels