வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

15/10/2013

சிலர் பெறுவதோ "லாபம்"; பலர் தருவதோ 

"சாபம்!" - கலைஞர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலுகக் கட்டிடத் திறப்பு விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்வது பற்றி அ.தி.மு.க.விற்கு வேண்டிய முக்கியப் பத்திரிகைகளில் எல்லாம் முழுப்பக்க விளம் பரங்கள் வெளிவந்துள்ளன. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்வது பற்றியும் அந்தக் கட்டிடத்தைத் திறந்து வைப்பது பற்றியும், காவல் துறையில் பணியாற்றும் இருபது பேருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பரிசளித்தது பற்றியும் நாளேடுகள் பக்கம் பக்கமாக வெளியிட்ட செய்திகளுக்கு நல்ல பயனாக இன்று முழுப்பக்க விளம்பரங்கள் கிடைத்துள்ளன. அந்தச் சாலையில் யாரும் நடந்து செல்ல முடியாத அளவிற்கு இரண்டு பக்கங்களிலும் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததாம்!

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தைத் திறந்து வைக்கின்ற விளம்பரத்தைப் பார்க்கும் அனைவருக்கும் குறிப்பாக காவல்துறை நண்பர்களுக்கு அந்தக் கட்டிடம் பற்றிய அனைத்து விவரங்களும் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தே தீரும். 23-3-2007 அன்று தி.மு. கழக ஆட்சியில் பேராசிரியர் படித்த நிதிநிலை அறிக்கையில் பக்கம் 12இல், ""ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் காவல் துறைத் தலைவர் அலுவலகத்திற்குக் கூடுதல் கட்டடம் மற்றும் ரூபாய் 21 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றைக் கட்டுவதற்கு இந்த அரசு அனுமதி அளித்துள்ளது"" என்று அப்போதே கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஒரு கட்டிடம் மாத்திரமல்ல; காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் 1.61 இலட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய இணைப்புக் கட்டடம் 24 கோடியே 50 இலட்சம் ரூபாய்ச் செலவில் கழக ஆட்சியில் கட்டப்பட்டு காவல் துறையிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டது.

அதுபோலவேதான் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குப் புதிய கட்டடம் ஒன்று வேப்பேரி, போக்குவரத்துக் காவல் அலுவலக வளாகத்தில் 25 கோடியே 46 இலட்சம் ரூபாய்ச் செலவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று, ஒரு சில மாதப் பணிகளே இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டிலேயே திறப்பு விழா நடத்துவது பற்றி யோசிக்கப்பட்ட போதுதான் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட தால், திறப்பு விழா நடைபெறவில்லை. தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதால், அதன் திறப்பு விழாவினை இத்தனை மாதங்களாக நடத்தாமல் இருந்தார்கள்.

நான் சென்ற மாதம் 6-9-2013 அன்று முத்தியால்பேட்டை காவல் நிலையக் கட்டிடம், செம்பியம் காவல் நிலையக் கட்டிடம் போன்ற பல காவல் நிலையக் கட்டிடங்கள் பல மாதங்களாக முதல்வரின் தேதிக்காகத் திறக்கப் படாமல் இருக்கின்றன என்று எழுதிய பிறகு,
17-9-2013 அன்று தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்த பல காவல் நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்ததாகச் செய்திவந்தது.

புதிய காவல் நிலையங்கள் கட்டப்பட்ட பிறகும், முதலமைச்சரின் தேதி கிடைக்காத காரணத்தால், பல்வேறு இடிந்த கட்டிடங்களில் உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு பணியாற்றிய காவலர்கள்; நான் அது பற்றிக் குறிப்பிட்டு எழுதியதற்காக எனக்குத் தான் மனதளவில் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். அதுபோலவேதான் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கான கட்டிடம் முடிவுற்று பல மாதங்களாக அதைப் பற்றியே சிந்திக்காமல் இருந்து வந்தார்கள். அதைப்பற்றி பல முறை நான் குறிப்பிட்டு எழுதிய பிறகு, அதற்கும் தற்போது ஒரு விடிவு காலம் வந்திருக்கிறது.

அந்தக் கட்டிடத்தை முதல்வர் திறந்து வைப்பதற்கான முழுப் பக்க விளம்பரங்களும், அந்த நிகழ்ச்சி பற்றிய செய்திகளும் ஏடுகளில் வெளிவந்துள்ளன. ஆனால் எந்தவொரு ஏட்டிலாவது, அந்தக் கட்டிடம் எந்த ஆட்சிக் காலத்திலே கட்டத் திட்டமிடப்பட்டது, எப்போது பணிகள் முடிந்தது, எத்தனை மாதங்களாக அது திறக்கப்படாமல் உள்ளது என்பது பற்றி ஒரு வரியாவது எழுதியிருக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக ஆட்சியில் இந்தக் கட்டிடங்கள் மாத்திரமல்ல; எழும்பூர், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறைக்காக 10 கோடியே 17 இலட்சம் ரூபாய்ச் செலவில் புதிய பலமாடிக் கட்டடம் - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும அலுவலகத் திற்காகச் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில், 6 கோடியே 54 இலட்சம் ரூபாய்ச் செலவில் சொந்தக் கட்டடம் - 18 கோடியே 82 லட்சம் ரூபாய்ச் செலவில் சேலம், திருவாரூர், நீலகிரி, மதுரை மற்றும் கடலூர் மாவட்டங்களுக் கான புதிய மாவட்ட காவல் அலுவலகங்கள் - 3 கோடியே 85 இலட்சம் ரூபாய்ச் செலவில் திருநெல்வேலி நகர காவல் அலுவலகக் கட்டடம்

வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 1 கோடியே 75 இலட்சம் ரூபாய்ச் செலவில் குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறைக்கான புதிய அலுவலகக் கட்டடங்கள் - காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் தனிப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறைக்கான அலுவலகக் கட்டடங்கள் - ஆவடியில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 2ஆம் அணி நிர்வாக அலுவலகக் கட்டடம், பாளையம் மற்றும் கிடங்குக் கட்டடங்கள் அனைத்தும் தி.மு. கழக ஆட்சியில்தான் கட்டப்பட்டன.

67 கோடியே 24 இலட்சம் ரூபாய்ச் செலவில் 219 புதிய காவல் நிலையக் கட்டடங்கள் - மேலும், வாடகைக் கட்டடங்களில் இயங்கிய 92 காவல் நிலையங்களுக்குப் புதிய கட்டடங்கள் - ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கெனக் கட்டடங்கள் - அனைத்தும் கழக ஆட்சியில்தான்!

கடந்த ஐந்தாண்டுகளில் மொத்தம் ரூ.683 கோடியே 19 இலட்சம் செலவில் 11,029 காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்கு கழக ஆட்சியில் அனுமதிக்கப்பட்டு; 8,254 குடியிருப்பு கள் ரூ. 411 கோடியே 85 இலட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வந்தன.திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, திண்டுக்கல் மாவட்டத்தில் கீரனூர், சத்திரப்பட்டி, வேலூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி, சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 2010-2011ஆம் ஆண்டில் கழக ஆட்சியில் 136 கோடியே 94 இலட்சம் ரூபாய்ச் செலவில் 2,000 குடியிருப்புகள் - இதுவும் கழக ஆட்சியிலேதான்!

சென்னை, மருதம் வளாகத்தில் 1 கோடியே 44 இலட்சம் ரூபாய்ச் செலவில் மகளிர் அதிரடிப் படையினருக்கான பயிற்சிக் கூடம் கட்டி முடிக்கப் பட்டு, காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவலர் பயிற்சியகம் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்து காவல்துறைவசம் கழக ஆட்சியில் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வளவும் கழக ஆட்சியில் காவல் துறையினருக்கு வேண்டிய கட்டிடங்களை எழுப்புவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள். காவல் துறையினருக்கு கழக ஆட்சியில் கட்டிடங்கள் மட்டுமா கட்டப்பட்டன? காவல் துறையினருக்கு கழக ஆட்சியில் செய்யப்பட்ட ஒருசில சாதனை களின் பட்டியலை சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டவா?

காவலர்களின் நலன்களுக்காக இந்தத் துறையிலே காவல் ஆணையம் அமைக்கப்பட்டது என்றால், அது தி.மு.கழக ஆட்சிக் காலங்களில் மட்டும்தான். 1969ஆம் ஆண்டு முதன்முதலாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நான் திரு. ஆர்.ஏ. கோபாலசாமி ஐயங்கார், ஐ.சி.எஸ்., அவர்கள் தலைமையில் இந்தியாவிலேயே மாநில அரசு சார்பில் முதல் முறையாகக் காவல் ஆணையம் ஒன்றை அமைத்து, அந்த ஆணையம் தந்த 133 பரிந்துரைகளில் 115 பரிந்துரைகளை உடனே ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

1989ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக கழக அரசு அமைந்தபோது, திரு. பி. சபாநாயகம், ஐ.ஏ.எஸ்., அவர்கள் தலைமையில் இரண்டாவது காவல் ஆணையத்தை அமைத்து 112 பரிந்துரைகளைப் பெற்று, இரண்டாண்டுகளில் கழக ஆட்சி கலைக் கப்பட்ட போதிலும், அதற்குள் - 87 பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டன. மீண்டும், 2006 கழக ஆட்சியிலேதான் திரு. பூரணலிங்கம், ஐ.ஏ.எஸ்., அவர்கள் தலைமையில் மூன்றாவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் பரிந்துரைத்த 444 பரிந்துரைகளில் 278 பரிந்துரை கள் கழக அரசால் கொள்கையளவில் ஏற்கப் பட்டன. அவற்றுள் 48 பரிந்துரைகள் மீது ஆணை கள் வெளியிடப்பட்டன. மேலும் 166 பரிந்துரைகள் துறைத் தலைவர்களால் செயல்படுத்தப்பட்டு வந்தன.

கழக ஆட்சியைத் தவிர வேறு எந்த ஆட்சி யிலாவது காவலர்களின் நலன் களுக்காக காவல் துறை ஆணையம் அமைக்கப்பட்டது உண்டா? கிடையாது.

காவலர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் 50 சதவீத விலையில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் முறை 1.10.2008 முதல் கழக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஏறத்தாழ 60 ஆயிரம் காவலர் குடும்பங்கள் இப்போதும் பயனடை கின்றன.

1973ஆம் ஆண்டு முதன் முதலாக மகளிரை காவல் துறையிலே சேர்ப்பதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்ததும் கழக ஆட்சியிலேதான். காவல் துறையிலே மகளிர் அப்போது சேர்க்கப்பட்ட காரணத்தால், அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா மகளிர் காவல் நிலையங்களை அவருடைய ஆட்சிக் காலத்தில் முதன் முதலாகத் தொடங்கினார். நான் அதை மறைக்க விரும்பவில்லை. எதிர்க்கட்சி செய்தது என்றால், அதை அப்படியே மூடி மறைக்க நான் என்றைக்கும் விரும்ப மாட்டேன்.

காவல் துறையினருக்கு நிதியளிப்பு, பதவி உயர்வு என்றெல்லாம் தற்போது பக்கம் பக்கமாகச் செய்தி வருகிறதே; நான் இதற்கு முன்பு நடைபெற்ற ஒரேயொரு சம்பவத்தை மட்டும் நினைவூட்டு கிறேன்.
12-9-2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்தார். அதில், ஈரோடு மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றிய மயில் சாமி என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையொட்டி அவருடைய குடும்பத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். பாதுகாப்புப் பணி என்று கூறப்பட்ட போதிலும், அது முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியிலே ஈடுபட்டிருந்தார் என்பது தான் சரி. அந்த ஒரு இலட்ச ரூபாய் நிதி எப்போது வழங்கப்பட்டது தெரியுமா?

முதல்வர் அறிவிப்புக்கு 15 மாதங்களுக்குப் பிறகு 22-12-2004 அன்று இதற்கான கோப்பு முதல்வரின் அலுவலகத்திற்கு உத்தரவிற்காக அனுப்பப்படுகிறது. கோப்பு கையெழுத்தானதா? 22.12.2004 அன்று அனுப்பப்பட்ட கோப்பு முதலமைச்சர் அலுவலகத்திலே இருந்து மீண்டும் திரும்ப வரவில்லை என்றும் இறந்துபோன மயில்சாமியின் தாயார் அந்தத் தொகையைக் கேட்டு வலியுறுத்துவதாகவும், கோப்பினைத் திரும்ப அனுப்பக் கேட்டு, ஒரு குறிப்பு முதல்வர் அலுவலகத்திற்கு 14-9-2005 அன்று அனுப்பப்படுகிறது. அப்போதும் கோப்பு கையெழுத் திடப்பட்டதா? இல்லை. 24-1-2006 அன்று மீண்டும் உள் துறையிலே இருந்து ஒரு கோப்பு தயாரிக்கப்பட்டு, ஒரு இலட்ச ரூபாய் பாதிக்கப் பட்டவர்களுடைய குடும்பத்திற்கு வழங்க, ஒப்புதல் கோரி முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டது.

அந்தக் கோப்பில் நிதித் துறைச் செயலாளர் 27-1-2006 அன்று கையெழுத்திட்டு, முதல்வர் அலுவலகத்திற்கு கோப்பு அனுப்பிய போதிலும் அதில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டு ஆட்சியிலே இருந்த வரை திரும்ப அனுப்பவே இல்லை. 2006ஆம் ஆண்டு மே திங்களில் பொதுத் தேர்தல் முடிந்த பிறகு அந்தக் கோப்பு முதல்வராக இருந்த எனக்கு அனுப்பப்பட்டு 11-6-2006 அன்று நான் ஒப்புதல் கையெழுத்திட்டு அனுப்பினேன்.

இந்த விவரத்தை நான் 30-8-2006 அன்றே காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேரவையிலேயே எடுத்துக் குறிப்பிட்டு, அது நடவடிக்கைக் குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. இன்றுகூட ஒரு செய்தி வந்துள்ளது. 2002ஆம் ஆண்டு போலீஸ் பக்ருதீன் குருவான இமாம் அலியை சுட்டுப் பிடித்த காவலர்களில் சிலருக்கு மட்டும் அப்போது சிறப்புப் பரிசும், பதவி உயர்வும் அளித்த ஜெயலலிதா 12 போலீசாருக்கு பதவி உயர்வு தரவில்லையாம்.

இந்தச் செய்திகளை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு தான், காவலர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு, பதவி உயர்வு என்றெல்லாம் சிலருக்கு அறிவித்து ஏமாற்ற நினைக்கிறார்கள்.

ஆனால் அதைக்கூட முறையாக அந்தச் சம்பவத்திற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் வழங்காமல், ஒரு சிலருக்கு மட்டும் வழங்கி, மற்றவர்களின் ""சாபத்தை""த்தான் சம்பாதித்துக் கொண்டிருக் கிறார்கள்! சிலர் பெறுவதோ "லாபம்"; பலர் தருவதோ "சாபம்!"
Photo: சிலர் பெறுவதோ "லாபம்"; பலர் தருவதோ "சாபம்!" - கலைஞர்

No comments:

Post a Comment

Labels