வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



13/10/2013



தி.மு.க. ஆட்சியில்தான் பெண்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டனர்





சென்னை, அக்.13- தி.மு.க. ஆட்சியில்தான் பெண்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டனர் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குப் புதிய கட்டடம் ஒன்று வேப்பேரி, போக்குவரத்துக் காவல் அலுவலக வளாகத்தில் 25 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று, ஒரு சில மாதப் பணிகளே இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டிலேயே திறப்பு விழா நடத்துவது பற்றி யோசிக்கப்பட்ட போதுதான் பொதுத் தேர்தலுக் கான தேதிகள் அறிவிக்கப்பட்டதால், திறப்பு விழா நடைபெறவில்லை. தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதால், அதன் திறப்பு விழாவினை இத்தனை மாதங்களாக நடத்தாமல் இருந்தார்கள். சென்னை மாநகரப் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கான கட்டடம் முடிவுற்று பல மாதங்களாக அதைப் பற்றியே சிந்திக்காமல் இருந்து வந்தார்கள். அதைப்பற்றி பல முறை நான் குறிப்பிட்டு எழுதிய பிறகு, அதற்கும் தற்போது ஒரு விடிவு காலம் வந்திருக்கிறது. கடந்த அய்ந்தாண்டுகளில் மொத்தம் ரூ.683 கோடியே 19 லட்சம் செலவில் 11,029 காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்கு தி.மு.க. ஆட்சியில் அனுமதிக்கப்பட்டு; 8,254 குடியிருப்புகள் ரூ.411 கோடியே 85 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சிய குடியிருப்புகள் கட்டப்பட்டுவந்தன.  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, திண்டுக்கல் மாவட்டத்தில் கீரனூர், சத்திரப்பட்டி, வேலூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி, சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 2010-2011ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் 136 கோடியே 94 லட்சம் ரூபாய்ச் செலவில் 2 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டன. சென்னை, மருதம் வளாகத்தில் 1 கோடியே 44 லட்சம் ரூபாய்ச் செலவில் மகளிர் அதிரடிப் படையினருக்கான பயிற்சிக் கூடம் கட்டி முடிக்கப் பட்டு, காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவலர் பயிற்சியகம் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்து காவல்துறைவசம் தி.மு.க. ஆட்சியில் ஒப்படைக்கப் பட்டது. காவலர்களின் நலன்களுக்காக இந்தத்துறையிலே காவல் ஆணையம் அமைக்கப்பட்டது என்றால், அது தி.மு.க. ஆட்சிக் காலங்களில் மட்டும்தான். 1969ஆம் ஆண்டு முதன்முதலாக முதல்-அமைச் சராகப் பொறுப்பேற்ற நான் ஆர்.ஏ.கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் இந்தியாவிலேயே மாநில அரசு சார்பில் முதல் முறையாகக் காவல் ஆணையம் ஒன்றை அமைத்து, அந்த ஆணையம் தந்த 133 பரிந்துரைகளில் 115 பரிந்துரைகளை உடனே ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1989ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தி.மு.க. அரசு அமைந்தபோது, பி.சபாநாயகம் தலைமையில் இரண்டாவது காவல் ஆணையத்தை அமைத்து 112 பரிந்துரைகளைப் பெற்று, இரண்டாண்டுகளில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட போதிலும், அதற்குள் 87 பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மீண்டும், 2006 தி.மு.க. ஆட்சியிலேதான் பூரண லிங்கம் தலைமையில் மூன்றாவது காவல் ஆணை யம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் பரிந் துரைத்த 444 பரிந்துரைகளில் 278 பரிந்துரைகள் தி.மு.க. அரசால் கொள்கையளவில் ஏற்கப்பட்டன. அவற்றுள் 48 பரிந்துரைகள் மீது ஆணைகள் வெளியிடப்பட்டன. மேலும் 166 பரிந்துரைகள் துறைத் தலைவர்களால் செயல்படுத்தப்பட்டுவந்தன.  தி.மு.க. ஆட்சியைத் தவிர வேறு எந்த ஆட்சி யிலாவது காவலர்களின் நலன்களுக்காக காவல் துறை ஆணையம் அமைக்கப்பட்டது உண்டா?, கிடையாது. காவலர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் 50 சதவீத விலையில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் முறை 1.10.2008 முதல் தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஏறத்தாழ 60 ஆயிரம் காவலர் குடும்பங்கள் இப்போதும் பயனடைகின்றன. 1973ஆம் ஆண்டு முதன் முதலாக மகளிரை காவல் துறையிலே சேர்ப்பதற்கான வர லாற்றுச் சிறப்புமிக்க ஆணையைப் பிறப்பித்ததும் தி.மு.க. ஆட்சியிலேதான். காவல்துறையிலே மகளிர் அப்போது சேர்க்கப்பட்ட காரணத்தால், அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மகளிர் காவல் நிலையங்களை அவருடைய ஆட்சிக் காலத்தில் முதன் முதலாகத் தொடங்கினார். நான் அதை மறைக்க விரும்பவில்லை. எதிர்க்கட்சி செய்தது என்றால், அதை அப்படியே மூடிமறைக்க நான் என்றைக்கும் விரும்ப மாட்டேன். - இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels