வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



07/03/2013

நாளை டெசோ மாநாடு.. டெல்லியில் ஸ்டாலின்

சென்னை: டெல்லியில் நாளை திமுக தலைமையில் செயல்படும் டெசோ அமைப்பின் முக்கிய மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஈழத்தமிழர் வாழ்வில் விடியலை ஏற்படுத்தவும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் டெசோ அமைப்பு பல்வேறு வகைகளில் போராடுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் செயல்படும் டெசோ அமைப்பு நேற்று சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் பல ஆயிரம் பேர் கைதானார்கள். இந்த நிலையில், அகில இந்திய அளவில் இந்த பிரச்சினையை கொண்டு சென்று ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் டெல்லியில் நாளை 7-ம் தேதி டெசோ மாநாடு கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க, அகில இந்திய அளவில் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பல்வேறு மனிதநேய அமைப்புகளுக்கும் டெசோ அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெசோ மாநாட்டில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா, தயாநிதி மாறன் எம்.பி., சுகவனம் எம்.பி. ஆகியோரும் உடன் சென்றனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், டெல்லியில் நாளை நடைபெறும் டெசோ மாநாட்டில் சர்வதேச அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என எதிர்பார்க்கிறோம். அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளி ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.



No comments:

Post a Comment


Labels