வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



06/03/2013


இலங்கைக்கு எதிராக டெசோ போராட்டம்: எந்தக் கட்சிக்கும் கூடாத பெரும் கூட்டம்!

தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிட கூடியவர்கள், தூதரகத்தை அடையுமுன்னரே கைது செய்யப்பட்டனர். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருமாவளவன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டத்துக்காக பல்லாயிரம் பேர் கூடி இருந்தனர்.
ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். இலங்கை தமிழருக்காக போராட்டம் என்று அழைப்பு விடுத்தால், தி.மு.க.வுக்கு கூடும் கூட்டம்போல வேறு எந்தக் கட்சிக்கும் கூடுவதில்லை. இன்றைக்கு கூடியது, அந்தளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம்!
குறைந்தது பத்தாயிரம் பேர் என்று தாராளமாக சொல்லலாம். அப்படி ஒரு கூட்டம்! (கைதானவர்கள் சுமார் 5,000 பேர்தான்)
இன்றைக்குகூட, இலங்கை விவகாரத்தில் ஏதாவது செய்வதற்கு வல்லமையுள்ள கட்சி தி.மு.க.தான். செய்வார்களா, இல்லையா என்பதை, அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
காலை 9 மணிக்கு கருப்பு சட்டை அணிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வள்ளுவர் கோட்டம் அருகே குவிந்தனர். காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த சிறிய மேடையில் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இருந்தனர்.
அதன்பின், போலீஸார் கைது செய்யும்போது, எந்த ஒழுங்கில் கைதாக வேண்டும் என்ற அறிவிப்புகள் விடுக்கப்பட்டன. முதலில் தென் சென்னை மாவட்ட தி.மு.க.வினர் கைதாக வேண்டும் எனவும், அவர்கள் அனைவரும் வேனில் ஏற்றப்பட்ட பின்னரே வடசென்னை மாவட்ட கழகத்தினரும் மற்றவர்களும் போலீசார் கைதாக வேண்டும்“ எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒழுங்கின்படீ, முதல் கட்டமாக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், அதன்பின், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருமாவளவன் ஆகியோர் முன்னிலையில் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் இந்தளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை போலும், கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச்செல்ல அவர்களிடம் போதிய வாகனங்கள் இருக்கவில்லை. இதனால், கைது செய்யப்பட்ட சிலர் வள்ளுவர் கோட்டம் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட, சிலர் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கை தூதரகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள இலங்கை வங்கி, எழும்பூரில் உள்ள புத்தவிஹாரை ஆகிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


Labels