வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

03/03/2013

விவசாயப் பாதிப்பு தொடர்பாக மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் : கலைஞர்

விவசாயிகளின் பாதிப்பு தொடர்பாக அரசு மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,  ‘’காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் தஞ்சையில் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்த உள்ளனராம்.கர்நாடகம் காவிரி நீரைத் தரவில்லை என்பதற்காக முதல்வர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு நடுவே, தமிழக அரசின் முறையீடு இல்லாமலேயே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் ஏன் வெளியிடவில்லை என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்.
இறுதித் தீர்ப்பை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். இப்படி உச்சநீதிமன்றமே முன் வந்த பிறப்பித்த உத்தரவுக்காகத்தான் ஜெயலலி தாவுக்குப் பாராட்டு விழா என்கின்றனர்.
காவிரி டெல்டா பகுதியில் 17 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதில் 9 பேரின் குடும்பத்தினருக்கு மட்டுமே தலா ரூ.3 லட்சம் அரசு அறிவித்தது.ஏக்கருக்கு ரூ.25 நிவாரணம் கேட்டதற்கு அரசு ரூ.15 ஆயிரம் மட்டுமே அறிவித்தது. அதுவும் 50 சதவீதத்துக்கும் மேல் மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரணத்தைக் கூட முறையாக வழங்கவில்லை என்று கூறி, போராட்டங்களும், சாலை மறியல்களும் நடக்கத் தொடங்கியுள்ளன.
விவசாயிகள் இடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி அவர்களுக்கு ஏமாற்றத்தையே அரசு கொடுத்துள்ளது. எனவே, தற்போது நிவாரணத் தொகை வழங்கிக் கொண்டிருக்கும்போதே, விவசாயப் பாதிப்பு தொடர்பாக மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

பாதிப்பு விவரங்களை ஒரு சில அமைச்சர்களை மட்டும் அனுப்பி அறிந்துகொள்ள முடியாது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு குழு அமைத்து எவ்வித பாரபட்சமுமில்லாமல் பாதிக்கப் பட்ட வர்கள் பற்றிய முழுமையான புள்ளி விவரங்களை அறிந்து, அதற்கேற்ப நிவாரணம் வழங்க வேண் டும். நிவாரணத் தொகையை அனைத்துக் கட்சிக் குழு அமைத்து, அந்தக் குழுவின் முன்னிலையில் வழங்க வேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Labels