வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



21/01/2013

ஜெய்ப்பூரில் ராகுலின் உணர்ச்சிகரமான பேச்சு- கண்ணீரில் மிதந்த காங்கிரஸ் பெருந்தலைகள்


 Rahul Seeks Sweat Congress Has Tears


ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த ஜெய்ப்பூர் சிந்தனை அமர்வின் கூட்டத்தில் அக்கட்சியின் துனைத் தலைவர் ராகுல்காந்தி உருக்கமாக பேசிய பேச்சு காங்கிரஸின் பெருந்தலைவர்களையும் உருக வைத்துவிட்டது. ராகுல் பேசிய போது காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர் என்பது மிகையல்ல...
காங்கிரஸ் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் பேசிய ராகுல்காந்தி தனது உரையின் போது காங்கிரஸ் கட்சிக்கும் நேரு குடும்பத்துக்குமான உறவை விவரித்துக் கொண்டு வந்தார். பாட்டி இந்திரா காந்தியின் பாதுகாவலர்களாக இருந்தவர்கள்தான் தமக்கு பாட்மிண்ட்டன் விளையாடக் கற்றுக் கொடுத்தனர் என்று அவர்களே பாட்டியை சுட்டுக் கொன்றனர் என்ற சம்பவத்தையும் உருக்கமாக பேச ஒட்டுமொத்த கூட்டமும் கண்ணீரில் மிதந்தது.
இதேபோல் தமது பாட்டி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளில் என்னுடைய தந்தை கதறி அழுததை என்னால் பார்க்க முடிந்தது. அப்படி ஒரு தைரியமான மனிதர் அழுவதை அப்போதுதான் பார்க்கிறேன். ஆனால் அதே மாலை நேரம், அவர் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தாலும் நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சியில் உரையாற்றிய போது எனக்கு நம்பிக்கை விதை விழுந்தது என்றும் ராகுல் பேசினார்.
"நேற்று இரவு ஒவ்வொருவரும் என்னை வாழ்த்திக் கொண்டிருந்தீர்கள்.. அப்போது என் தாயார் என்னுடைய அறைக்கு வந்து அழுதார். அவர் ஏன் அழுதார்? அவருக்குத் தெரியும்.. அதிகாரம். பதவி என்பது ஒரு விஷம்... மக்கள் இந்தப் பதவிக்காக எப்படி ஓடி அலைகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர் அதனை விரும்பியது இல்லை. இந்த அதிகாரத்தை மக்களின் குரலாக வெளிப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம்" என்றும் உணர்ச்சியின் உச்சத்தில் பேசினார் ராகுல்.
ராகுல் தனது பேச்சை முடித்துக் கொண்டு இருக்கைக்குத் திரும்பிய போது தனது தாய் சோனியாவை கட்டிப் பிடித்து முத்தமிட்ட காட்சியை ஒட்டுமொத்த அரங்கமே அப்படி ஒரு உணர்வோடு ஒன்றிப் பார்த்தது. அதேபோல் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் ராகுலை கட்டி அணைத்து சோனியாவின் கைகளில் முத்தமிட்டபடியே ராகுலின் கைகுட்டையை வாங்கி தனது கண்ணீரை துடைத்துக் கொண்ட காட்சி காங்கிரசாரை நெகிழ வைத்தது.
ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட்டின் கண்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்தன! காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி, ராகுல்காந்தியை புகழ்ந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தவர் சோனியாவை இறுதி உரை ஆற்ற வருமாறு அழைக்க முடியாமல் உணர்வுவயப்பட்டார். ஒரு காங்கிரஸ் தலைவர் ராகுலை கட்டிப் பிடித்துக் கொண்டு அவரது தோள்மீது சாய்ந்து குழந்தையைப் போல் அழுது கொண்டிருக்க அவரை பிடித்து இழுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.!

No comments:

Post a Comment


Labels