மாற்றுக்கட்சித் தலைவர்கள் கூட தொடர்பில் உள்ளார்கள்: ஸ்டாலின்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி பாசறைக் கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார்.
அப்போது அவர், ‘’மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதாக பரவலாக பேசி வருகிறார்கள். அவ்வாறு அது உண்மையானால் தேர்தலுக்கு தி.மு.க. தயாராக உள்ளது. கடந்த ஒன்னறை ஆண்டாக தி.மு.க.வுடன் தொடர்பில் இல்லாத மாற்றுக்கட்சித் தலைவர்கள் கூட தற்போது தி.மு.க.வின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க.வுடன் தொடர்பில் உள்ளார்கள்.
இது தேர்தலுக்கு நல்ல அறிகுறி. தி.மு.க. சிறந்த சக்தியாக உள்ளது. சட்டப் பேரவையில் தி.மு.க. எதிர்க ட்சியாக இல்லாவிட்டால்கூட, மக்கள் மன்றத்தில் தி.மு.க. எதிர் கட்சியாக உள்ளது.
ஆளும் கட்சியினருக்கே தெரியவில்லை, நாம் ஆளும் கட்சியா? அல்லது தி.மு.க. ஆளும் கட்சியா? என்று. அந்த அளவிற்கு தி.மு.க.வின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அண்ணா கூறினார்.
கடமை, கண்ணியத்தைவிட கட்டுப்பாடு இளைஞர் அணியினருக்கு மிகவும் முக்கியமானது.தற்போது தமிழகம் எங்கும் அடுத்து கருணாநிதிதான் முதல்வர் என பேசுகிறார்கள். மக்கள் உணராமல், தெரியாமல் செய்த தவறால் தற்போது இருளில் தவிக்கிறார்கள். சூரியன் உதித்தால் இந்த இருள் மறைந்துவிடும்’’ என்று கூறினார்.

No comments:
Post a Comment