வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



27/01/2013

மு.க.ஸ்டாலின் தலைமையில் 'டெசோ' அமைப்பினர் டெல்லி பயணம்

 Mk Stalin Meet Unhrc Memebers Envoys Delhi
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளின் தூதர்களை சந்திக்க திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 'டெசோ' அமைப்பினர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
டி.ஆர். பாலு அறிக்கை
திமுகவின் பார்லிமெண்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி ஈழத்தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டு சமத்துவம், அமைதி நிறைந்த வாழ்வு மேற்கொள்ள இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐ.நா. சபை தீவிர அழுத்தம் தரவேண்டும் என்று வற்புறுத்துவதற்காக, ஐ.நா. சபையை வலியுறுத்தும் வகையில் அதன் உறுப்பு நாடுகளை வற்புறுத்த கருணாநிதி தலைமையிலான "டெசோ" அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘டெசோ' அமைப்பை சார்ந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி சுப்புலஷ்மி ஜெகதீசன் மற்றும் தி.மு.க நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் டெல்லி புறப்பட்டு செல்வர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் தலைமையில் டெசோ அமைப்பினர் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளின் தூதர்கள் ஆகியோரை டெசோ குழுவினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருக்கின்றனர்.
டெசோ அமைப்பினர் கொடுக்கப்பட இருக்கிற கோரிக்கை மனுவில், ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழவும், ஈழத்தில் புணர்வாழ்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அரசியல் தீர்வு காணவும், ஜெனிவாவில் முன்மொழியப்பட்டு ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனே நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசை நிர்பந்திக்குமாறு அந்த உறுப்பு நாடுகளை கேட்டுக் கொள்ள இருக்கிறது.

No comments:

Post a Comment


Labels