வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



16/01/2013

திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயர்.. கி.வீரமணி ஆதரவு

 Ki Veeramani Supports Stalin As Karunanidhi
சென்னை: கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க. ஸ்டாலினை முன்மொழிவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக என்பது உண்மையான இன உணர்வாளர்கள், திராவிட சமுதாய வளர்ச்சியில் ஆழமான பற்றும், பாசமும் கொண்ட பகுத்தறிவாளர்களுக்கு, ஒரு மாபெரும் இனப் பாதுகாப்பு அரண்.
பெரியார் தம் லட்சியங்களை, அண்ணா வழியில், அரசியலில் முடிந்த வரை அயராது செயலாக்கம் செய்யும் ஓர் அற்புதமான அரசியல் விஞ்ஞானம் திமுக. சமுதாய கொள்கை கொண்ட அரசியல் இயக்கம் என்பது திமுக மட்டுமே.
இது தி.மு.கவுக்கே உரித்தான தனி சிறப்பு. தாய் கழகமான திராவிடர் கழகத்திலிருந்து 1949-ல் திமுக பிரிந்த நிலையில் அதன் நிறுவனர் அறிஞர் அண்ணா கூறுகையில் திமுக தாய் கழகமான தி.க.வுக்கு வாழையின் கீழ் கன்று போல் அமையாது. மாறாக ஆல மரத்தின் விழுதாகவே இருக்கும். தி.க.வும், தி.மு.கவும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இயங்கும் என்று கூறினார்.
பின்னர் அண்ணா மறைவுற்ற நிலையில் திமுகவை கட்டிக் காப்பாற்றி கரை சேர்க்கும் ஆற்றல் கலைஞர் கருணாநிதி என்ற கப்பல் தலைவனுக்கே உண்டு என்பதை உணர்ந்தே அவர் தலைமையேற்க பெரியார் அவருக்கே ஆணையிட்டார்.
அதற்கு வாழும் சாட்சி உண்டு. இப்போது கலைஞரின் தலைமையால் பல்வேறு சாதனைகள் ஒரு புறம் என்பதை விட சோதனைகள் நெருக்கடி காலத்தில் இயக்கத்திற்கு ஏற்பட்ட போது அதை எதிர் கொண்ட நேர்த்தி, அரசியல் அணுகுமுறை, எதிர் நீச்சலில் வெற்றி கண்டு திமுக என்ற கலத்தை சேதாரம் இன்றி செலுத்தும் சிறந்த மாலுமியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் முதிர்ச்சி ஒரு புறம் என்றாலும் தவிர்க்க இயலாத இயற்கை முதுமையும் எவர்க்கும் இயற்கை என்பதால், அடுத்த கேள்வி எந்த இயக்கத்திலும் நிகழக் கூடியது தான். அத்தகைய கேள்வி எழுப்பியவர்களுக்கு ஆணி அடித்தது போல தி.மு.கழகத்தின் தலைவராக ஸ்டாலினை முன்மொழிவேன் என்று பதில் கூறியதும் வெறும் சொற்கோவைகள் அல்ல. திமுகதொண்டர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், நாட்டுக்கும் அறிவிக்கப்பட்ட செப்பேடு. சிலாசாசனம், சீரிய நல் கல்வெட்டு. எதிர்கால கேள்வி குறிக்கு கம்பீரமான விடையளித்த பகுதி இது.
கலைஞரின் இந்த அறிவிப்பின் மூலம் கட்சிக்குள்ளும் சரி, வெளியிலும் சரி, தேவையற்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து முத்திரை பதித்து விட்டார். தலைமையின் அறிவிப்பை ஏற்று கட்டுப்பாடு காத்து தி.மு.கவினர் வீறு கொண்டு களப்பணி செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. சருகுகளின் சலசலப்புகள் தானே அடங்கும்.
இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels