வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



17/01/2013


மாங் கொல்லையில் தி.மு.க. சார்பில் வியாழக்கிழமை பொங்கல் விழா: கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி பங்கேற்பு

தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை சார்பில் 2 நாட்கள் பொங்கல் விழா நடக்கிறது. தென் சென்னை மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை (17-ந் தேதி) மற்றும் வெள்ளிக்கிழமை 2 நாட்கள் நடக்கிறது. மைலாப்பூர் மாங் கொல்லையில் மாலை 6 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
 தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் தலைமை தாங்குகிறார். கவிஞர் கனிமொழி எம்.பி. முயற்சியால் தமிழ்பண்பாட்டின் அடையாளங்களாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தஞ்சை தேன்மொழி ராஜேந்திரன் கலைக்குழுவின் நையாண்டி மேளம் நிகழ்ச்சி நடக்கிறது.
 
விழாவில் கூத்து, ஜிக்காட்டம், சிலம்பாட்டம் மற்றும் பாடகர்கள் இளையராஜா, லட்சுமி ஒவியா ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி, தேவராட்டம், தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்ட தி.மு.க. கலை இலக்கியம் பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் சண்முகநாதன், துணை அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment


Labels