ஜெ'' டெல்லி விசிட்! வெற்றியும் தோல்வியும்!
எப்பொழுதும் ஜெ.வின் டெல்லி பயணம் தமிழ் நாட்டுக்கு மட்டுமே முக்கியத் துவம் அளிக்கும் நிகழ்வாக நடைபெறாது. கடந்தமுறை முதல்வர்கள் மாநாட்டில் பேசச் சென்ற ஜெ., அந்தக் கூட் டத்திலிருந்து வெளிநடப்பு செய்து தேசிய மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தமுறை ஜெ. புறப்படுவதற்கு முன்பே மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் அடைந்த செய்தி இடியென வர... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அந்த மரணம் தொடர்பான செய்தியைச் சுற்றியே வர... ஜெ.வின் விசிட் முந்தைய விசிட்டுகளைப் போல முக்கியத்துவம் பெறவில்லை.
டெல்லியை ஜெ. அடைந்தவுடன் பிரதமர் அலுவலகம், "கோபிநாத் முண்டே மறைவால் பிரதமரின் அனைத்து அலுவல்களும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது' என அறிவித்தது. அதிர்ந்துபோன ஜெ.வின் உதவியாளர்கள், நரேந்திர மோடி அலுவல கத்தைத் தொடர்புகொண்டு "ஜெ. புறப்பட்டு வந்துவிட் டார்' என அறிவித்தார்கள். "அப்படியா' என யோசித்த மோடியிடம், "கடந்த ஐந்தாண்டு களாக டெல்லிக்கு வந்து ஏதாவது ஒரு பிரச்சினை செய்து செல்வார் ஜெ. நீங்கள் சந்திக்கவில்லையென்றால் அதையே ஒரு பிரச்சினை யாக்கிவிடுவார்' என ஆலோ சகர்களும் சொல்ல... ஜெ.வை மாலையில் சந்திப்பதாகச் சொல்லச் சொன்னார்.
முண்டேவின் உடலுக்கு டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்திவிட்டு பிரதமர் அலு வலகத்திற்கு வந்த மோடி, ஜெ.வை சந்திக்க தயாரானார். ஜெ.-மோடி சந்திப்பு 50 நிமிடம் நீடித்தது. முதலில் பேச்சு கோபிநாத் முண்டே மரணத்தில் தொடங்கியது. அதன்பிறகு தேசிய அரசியலில் பா.ஜ.க. அடைந்த வெற்றி பற்றி திரும்பியது. ""நான் அமித்ஷாவை கூட அமைச்சராக்கவில்லை. தமிழகத்தில் இருந்து அன்புமணியை அமைச்சராக்கச் சொல்லி தமிழக பா.ஜ.க. கூட கேட்டது. இவர்கள் பெயரிலெல்லாம் வழக்குகள் இருக்கிறது. வழக்குகள் இருக்கும் நபர்களை அமைச்ச ராக்கினால் அந்த வழக்குகளில் அமைச்சர் என்ற முறையில் அவர்கள் தலையிடுவார்கள். காங்கிரஸ் என்மீது பழிசுமத்த காத்துக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்'' என வழக்குகள் பற்றிய தனது பார்வையை மோடி, ஜெ.விடம் பகிர்ந்திருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி பேசுவதற்கு பிடிகொடுக்காமல் மோடி பேசுவதைப் புரிந்துகொண்ட ஜெ., தம்பிதுரையை பாராளுமன்றத் துணை சபாநாயகராக்கும் விஷயத்தை எடுத்துச் சொன்னார். அதை உடனடியாக மோடி ஏற்றுக்கொண்டு, அதற்கான உறுதியையும் அளித்திருக்கிறார்.
""பாராளுமன்றத்தில் பா.ஜ.க.விற்கு அடுத்தபடியாக பெரும்பான்மை பெற்ற தனிக்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இந்தமுறை மக்கள், காங்கிரசுக்கு எதிராகத்தானே ஓட்டுப் போட்டார்கள். எனவே காங்கிரசுக்கு எதிராக நின்று வெற்றி பெற்ற கட்சியைச் சேர்ந்த தம்பிதுரையை துணை சபாநாயகராக்கலாம்'' என்ற தன்னுடைய விருப்பத்தையும் ஜெ.விடம் மோடி கூறியுள்ளார்.
அத்துடன் ""ராஜ்யசபாவில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் அனைத்து வேலைகளையும் செய்யும். அதை சமாளிக்க உங்களது ஒத்துழைப்பு தேவை'' என்றும் ஜெ.விடம் மோடி தெரிவித்தார்.
""நவீன் பட்நாயக் நேற்று (ஜூன் 2) என்னை சந்தித்த போதும் தம்பிதுரை விஷயத்தைப் பற்றிப் பேசினார். நான் அவரிடம் ராஜ்யசபா ஒத்துழைப்பைப் பற்றிப் பேசினேன். இனி மம்தாவிடம் பேசவேண்டும்'' என்றிருக்கிறார் மோடி. அதன்பின் ஜெ., தமிழக திட்டங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட மனு பற்றி பேசினார்.
அடுத்து அருண்ஜெட்லியை சந்தித்தார் ஜெ. அப்போது ஜெட்லி, ""தமிழக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்புங்கள். நான் அவர்களுடன் பேசி எவ்வளவு தொகையை உடனடியாக தரமுடியுமோ அதை வரும் பட்ஜெட்டிலேயே தந்துவிடு கிறேன்'' என உறுதியளித்ததாக நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜெட்லியின் சந்திப்பு முடிந் தவுடன் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஜெ.வின் லைனுக்கு வந்தார். அவரை தமிழ்நாடு இல்லத்துக்கு வர வைத்துப் பேசினார் ஜெ. ரவி சங்கர் பிரசாத்திடம் சொத்துக் குவிப்பு வழக்கில் மத்திய அரசின் நிலை பற்றி ஜெ. விளக்கம் கேட்டார்.
ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி பா.ஜ.க.வின் உயர் மட்டத்தில் நடந்த விவாதத்தை ரவிசங்கர் பிரசாத் விளக்கினார். ""சொத்துக்குவிப்பு வழக்கில் மத்திய அரசு தலையிட முடி யாது. கர்நாடகாவில் இருப்பது காங்கிரஸ் அரசு. கர்நாடக அர சின் சட்டத்துறையிடம் மத்திய சட்டத்துறை சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி விசாரித்தாலே அதைப் பெரிய செய்தியாக ஊதிப் பெரிதாக்க தயாராக உள் ளனர்'' என ரவிசங்கர் பிரசாத் விளக்க, இறுகிய முகத்துடன் கேட்டுக்கொண்டார் ஜெ. ""அந்த வழக்கை சட்ட ரீதியாக சமா ளிக்க என்னால் முடியும்'' என வும் ரவிசங்கரிடம் சொன்னார்.
""நிதித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட அமைச்சகங்கள் ஜெ. முன்வைத்த தமிழகம் தொடர் பான கோரிக்கைகளை வேகமாய் பரிசீலிக்கின்றன. இது ஜெ.வின் டெல்லி பயணத்திற்குக் கிடைத்த வெற்றி என அ.தி.மு.க. தரப்பு பெருமைப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் பா.ஜ.க. எடுத்துள்ள நிலைப்பாட்டினால் இந்த டெல்லி பயணம் முழுமை பெற வில்லை'' என்கிறது எம்.பி.க்கள் வட்டாரம்.
-டெல்லியிலிருந்து அக்பர்
Courtesy : நக்கீரன், Dated 10-06-2014
No comments:
Post a Comment