தமிழர்களின் இந்த விருப்பமாவது நிறைவேறுமா? :
கலைஞர் கடிதம்
கலைஞர் கடிதம்
திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதத்தில்,’’மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் : அரசு உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு - தமிழக அரசுக்கு நோட்டீஸ்” என்ற தலைப்பில் அனைத்து நாளேடுகளிலும் ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்து, அந்த மனுவுக்குஜூன் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிக்கு மீண்டும் வந்ததும், சட்டப் பேரவையில் படிக்கப்பட்ட ஆளுநர் அறிக்கையிலேயே “பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் அனைவரும் வரும் கல்வி ஆண்டு முதல் கட்டாயமாக தமிழை ஒரு பாடமாகப் பயின்றிட எதிர்ப்படும் இடையூறுகளைக் களைந்து, விரைவில் கல்வி யாளர்களைக் கலந்து பேசி ஆணை பிறப்பிக்க இந்த அரசு உறுதி அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
ஏன்; அதற்கு முன்பே, கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், “தமிழகத் தில்செயல்படும் பலவகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழியை ஒரு பாடமொழியாகப் பயின்றிட ஏற்ற வழி காண்போம்” என்று அறிவித்திருந்தோம். இப்படிச் சொன்னதைச் செய்வதற்காகத்தான் ஆட்சிக்கு வந்ததும், ஆளுநர் உரையிலே அந்தத் தேர்தல் வாக்குறுதியை இடம் பெறச் செய்தோம்.
மீண்டும் அந்த ஆண்டு வைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில் பத்தி 40இல் “தேர்தல் அறிக்கை யைத் தொடர்ந்து ஆளுநர் உரையில் உறுதியளித்த வாறு, “தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ்தான் இல்லை” என்ற நாணமுறும் நிலையைப் போக்க நம் தமிழ் மொழியை, பள்ளிகளில் பயிலும்அனைத்து மாணவர்களும் கட்டாயமாக கற்பதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, அனைத் துப் பள்ளிகளிலும் இந்த ஆண்டிலேயே முதலாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிப்பது தொடங் கும். இது வரும் ஆண்டுகளில் படிப்படியாக பத்தாம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
மொழிக் கொள்கையைப் பொறுத்தவரை தமிழகத்திலே என்ன நடைமுறை பின்பற்றப்படு கின்றது? தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது என்ன செய்தது? தற்போது ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அ.தி.மு.க. அரசு தமிழ் மொழிக் கல்விக்கு என்ன செய்துள்ளது என்பதனை விளக்குவதற்காக சில கருத்துக்களை இக் கடிதத் தின் மூலம் எடுத்து வைத்திட விரும்புகிறேன்.
இந்த அறிவிப்பின்மீது எந்த நடவடிக்கையையும் அ.தி.மு.க. அரசு ஓராண்டுக் காலம் எடுக்காமல் இருந்து 2003ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21ஆம் நாள் ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. அந்த ஆணையில் பள்ளிகளில் அனைவரும் பயில ஏதுவாக 1 - 5 வகுப்புகளில் “அறிவியல் தமிழ்ப் பாடம்” கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது 24.1.1968இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 105இல் உள்ள வார்த்தைகளையே குறிப்பிட்டு, அதே கொள்கைதான் கடைப்பிடிக்கப் படுகிறது என்று ஜெயலலிதா அரசின் 21.4.2003 தேதியிட்ட அரசாணை கூறியது.ஆனால் தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது 27.12.1999 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 354ன்படி, 24.1.1968 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண். 105இல் உள்ள “வட்டார மொழி அல்லது தாய்மொழி” என்ற வார்த்தைகள் “தமிழ் அல்லது தாய்மொழி” என்று திருத்தப்பட்டது. இருமொழிக் கொள்கைக்கான அரசாணையில் தமிழ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை என்ற சில தமிழ்ச் சான்றோர்களின் குறைபாடு தி.மு.கழக அரசு 1999இல் பிறப்பித்த இந்தத் திருத்தத்தின் மூலமாக நீங்கியது.
ஆனால் ஜெயலலிதா 21.4.2003இல் பிறப்பித்த அரசாணையில் கழக ஆட்சியில் இருமொழிக் கொள்கை குறித்த ஆணையில் தமிழ் என்று திருத்தியதைப் பற்றியே கவனத்தில் கொள்ளாமல், தமிழ்நாட்டில் 68ஆம் ஆண்டு பிறப்பித்த ஆணை அப்படியே நடைமுறையில் இருப்பதைப் போலக் கருதிக்கொண்டு அரசாணை பிறப்பித்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 28.8.1997 அன்று தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில், மாணவர்கள் தங்கள் இளம் வயதில் தாய்மொழியிலே படிப்பதன் மூலம் எந்த அளவிற்குப் பயன்பெறுவார்கள் என்பதை பள்ளிகளின் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தும்படி பணிக்கப்பட்டார்கள். 27.11.1998இல் அரசாணை எண். 421இன்படி அனைத்து நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளில் தமிழைப் பயிற்றுமொழியாக அறிமுகப்படுத்த வேண்டு மென்று அறிவிக்கப்பட்டது. அதனை அமல்படுத்து வோருக்கு பதிவுக் கட்டணம் போன்றவற்றில் 350 சதவிகித சலுகையும் அறிவிக்கப்பட்டது. இது தமிழ்க் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக தி.மு. கழக ஆட்சியில் செய்யப்பட்ட செயல்தான்.
13.1.1999இல் அரசாணை எண்.6இன் படி கணக்கு, விஞ்ஞானம், சமூகவியல் ஆகிய மூன்றில் இரண்டு பாடங்களை தமிழிலே நடத்தும் பள்ளி களுக்கு மட்டுமே அங்கீகாரம் புதுப்பிக்கப்படும் என்றும், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு நடத்திடும் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கழக ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதுவும் தமிழ்க் கல்வியை ஊக்கப்படுத்தும் மற்றொரு அறிவிப்பாகும்.

3.5.1999இல் அரசாணை எண். 117இன்படி அரசாங்கம் நீதிபதி எஸ். மோகன் அவர்கள் தலைமை யில் நான்கு உறுப்பினர்களுடன் கொண்ட குழு ஒன்றை, நர்சரி வகுப்பு முதற்கொண்டு உயர்நிலைப் படிப்பு வரை தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வரவேண்டுமென்று தமிழ்ச் சான்றோர்கள் கொடுத்த கோரிக்கையைப் பரிசீலிப்பதற்காக நியமித்தது. இதுவும் தமிழுக்காக கழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைதான்.
13.1.1999 அன்று அரசாங்கம் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பல சங்கங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். உயர்நீதி மன்றம் 7.6.1999 அன்று அளித்த தீர்ப்பில் அரசாணை செல்லும் என்று தெரிவித்ததோடு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத மாணவர் களுக்கு அந்த ஆணை பொருந்தாது என்றும் தெரிவித்தது. இதன் காரணமாக 27.1.2000 அன்று அரசாங்கம் 13.1.1999 அன்று வெளியிட்ட அரசாணைக்கு ஒரு திருத்தம் வெளியிட்டது. அதிலே பயிற்று மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி என்று இருக்கலாம் என்று கூறியது.
நீதிபதி எஸ். மோகன் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 19-11-1999 அன்று அரசாணை எண். 324 பிறப்பிக்கப்பட்டது. அதன்படி (1) அரசாங்கத்தின் மொழிக் கொள்கைகள் பற்றிய ஆணைகள் தொடர்ந்து
அரசாணை கள் மூலமே அறிவிக்கப்படும்.
(2) அனைத்துப் பள்ளிகளிலும் (மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளிகள், உதவி பெறும், உதவி பெறாத அங்கீகாரம் பெற்ற பள்ளிகள்) முதல் மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி இருக்கும்.
(3) மெட்ரிகுலேஷன் மற்றும் மாநில அரசுப் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி இருக்கும்.
(4) 2000-2001 முதல் மூன்றாண்டு காலத்திற் குள் தமிழ் அல்லது தாய்மொழி பயிற்று மொழி என்பது முடிவடைய வேண்டும்.
27.12.1999 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 355இன்படி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி பயிற்று மொழியாக இருக்கும். 6ஆம் வகுப்பு முதல் தமிழ், தாய்மொழி அல்லது ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும்.
நீதிபதி மோகன் அவர்களின் பரிந்துரைகளின் பேரில் அரசாங்கம் 19.11.1999ஆம் தேதி பிறப்பித்த அரசாணை 324ஐ எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் பல்வேறு 4சங்கத்தினர் ரிட் மனுக்களை முதல் பெஞ்சில் தாக்கல் செய்தார்கள். உயர்நீதி மன்றத் தின் முழு பெஞ்ச் ரிட் மனுக்களை ஏற்றுக் கொண்டு அரசாணையை ரத்து செய்தது.
உயர்நீதி மன்ற முழு பெஞ்சின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை யிலே உள்ளது. எனவே மேலே தெரிவித்துள்ள உயர்நீதி மன்ற முழு பெஞ்ச் தீர்ப்பின் காரணமாகத்தான் தமிழை பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கொண்டுவரு வதற்காக செய்யப்பட்ட மாற்றங்கள் எல்லாம் செல்லா மல் போய் பழைய பாடத் திட்ட முறையே தொடர்ந்து அமுலில் இருந்து வந்தது. இது கழக ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சியில் என்ன நிலை தெரியுமா?
2003ஆம் ஆண்டு விடுதலை நாளில் தலைமைச் செயலகக் கோட்டையிலே கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையிலே என்ன சொன்னார் தெரியுமா? “2003-2004 கல்வி ஆண்டு முதல் அனைத்து வகைப் பள்ளி களிலும், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிப்படியாக அறிவியல் தமிழ் என்னும் பாடத்தைக் கற்பிக்க ஏற்கனவே எனது அரசு, ஆணை பிறப்பித்துள்ளது.'' என்று கூறிவிட்டு, ஆனால் அதற்கு மாறாக ஜெயலலிதாவே அதே நிகழ்ச்சியில் “இந்த ஆண்டிலிருந்தே அதாவது 2003-2004 லேயே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும், எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் அறிவியல் தமிழ் என்னும் பாடத்தைக் கற்பிக்க ஆணை பிறப்பித்துள் ளேன் என்பதை சுதந்திர திருநாளில் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக”
குறிப்பிட்டார்.

படிப்படியாகச் செய்யப்படும் என்று முதலில் கூறி, அரசாணையையும் பிறப்பித்து விட்டு, அதே முதலமைச்சர் “இந்த கல்வி ஆண்டிலேயே எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அறிவியல் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்க ஆணை பிறப்பித்துள்ளேன்” என்று கூறினார்.
அ.தி.மு.க. அரசு பதவியேற்றது முதலே பள்ளிக் கல்வித் துறையைப் பாழடிக்கின்ற செயல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வந்ததும் வராததுமாக, சமச்சீர் கல்விச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்ற ஒரு முடிவினை தன்னிச்சையாக எடுத்து, பாடப்புத்தகங்கள் எல்லாம் பல கோடி ரூபாய்ச் செலவில் தயாரான நிலையிலே, அவற்றை யெல்லாம் விநியோகிக்கக் கூடாது என்று கூறி, சமச்சீர் கல்விச் சட்டத்திற்கு எதிராக திருத்தச் சட்டம் ஒன்றினை தங்களுக்குள்ள பெரும்பான்மை காரணமாக நிறைவேற்றிவிட்டு - புதிய பாடப் புத்தகங்களை அச்சடித்துக் கொடுக்கப் போகிறோம் என்று கூறி, அதற்கான டெண்டர்களை அவசர அவசரமாக அறிவித்து, மாணவர்கள் மூன்று மாத காலம் எதையுமே படிக்காமல் வீணடிக்கின்ற அளவிற்கு நடந்து கொண்டு அதன் மூலமாக மாணவர்களின் கல்வியைப் பாழடித்தனர். மாணவர்களின் மொத்தம் 200 வேலை நாட்களில் 60 வேலை நாட்கள் வீணானது.
உச்ச நீதி மன்றம் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியதால் - ஆத்திர மடைந்ததோடு, வேறு வழியின்றி வேண்டா வெறுப் பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய 5கட்டாய நிலைக்கு ஆளான அ.தி.மு.க. அரசு, ஒட்டு மொத்தமாக மாணவர்களின் கல்வியிலேயே அக்கறையற்ற தன்மையோடு நடந்து கொள்கிறது. உச்ச நீதி மன்றம்
ஏதோ தவறு செய்து விட்டதைப் போல முதலமைச்சரே பேரவையிலே தெரிவித்தார்.
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் தவறு இருந்தால் அதனை அகற்றி விடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்ததை மனத்திலே வைத்துக் கொண்டு, தவறுகளைத் திருத்தாமல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தங்களுக்குப் பிடிக்காததை யெல்லாம் கிழித்தார்கள், அடித்தார்கள், மறைத்தார்கள்.

தமிழ் நாட்டிலே கல்வி கற்பவர்கள் தமிழைப் படிக்காமலேயே பல்கலைக் கழகம் வரை பட்டம் பெற்று வெளிவருகின்ற அடிப்படை முரண்பாட்டை அகற்றுவதற்காக, தி.மு.கழக ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட சட்டப்படிதான் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாகப் பெருகி, தற்போது பத்தாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது என்ற நிலை வந்துள்ளது. அதற்குத்தான் தடை விதிக்க வேண்டுமென்று யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் முறையிட்டு, அதற்கு அரசு ஜூன் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
கழக அரசு கொண்டு வந்து - நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களைக் கிடப்பிலே போட்டு, நடை முறைப்படுத்தாத இந்த ஜெயலலிதா அரசு தமிழ் மொழிப் பாடம் என்ற முக்கியமான கொள்கையில் என்ன பதில் அளிக்கப் போகிறது? சமச்சீர் கல்விக் கொள்கையிலே எடுத்த நிலையைப் போல இல்லாமல், தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியிருக்கும் எதிர் மறை நடவடிக்கையைப் போல இல்லாமல், தமிழ் மொழிக் கல்வியின்பால் அக்கறையோடு நல்ல முடி வெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இதுவே தமிழர்களின் விருப்பம்! தமிழர்களின்
இந்த விருப்பமாவது நிறைவேறுமா?’’என்று தெரிவித்துள்ளார்.
இந்த விருப்பமாவது நிறைவேறுமா?’’என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment