வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



05/04/2014

"ஒவ்வொருவரும் ஒரு வாக்கு ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு"-திமுகவினருக்கு கலைஞர் வேண்டுகோள்!

 

 
 
சென்னை, ஏப். 5:
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஏப்ரல் 5ம் தேதி கோவையில் தொடங்கி, 21ம் தேதி சென்னை வரை என்னுடைய தேர்தல் சுற்றுப்பயணம் வரையறுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய உடல் நலம் இந்தச் சுற்றுப் பயணத்தைத் தாங்குமா, அன்றாடம் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர், வேனில் அமர்ந்து பயணம் செய்ய முடியுமா என்று என்னை நாள்தோறும் சந்திக்கும் கட்சியினர் கவலையோடு கேட்கிறார்கள்.
உடல் நலத்தைப் பற்றி நான் என்றைக்கு அக்கறை கொண்டேன்? நான் சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பே நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் தனது பிரச்சாரத்தைத் தொடங்கி கடந்த 2, 3 நாட்களாக தென்சென்னை, திருப்பெரும்புதூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். பொருளாளர், ஸ்டாலினைப் பற்றியோ கேட்கவே வேண்டியதில்லை. இதற்குள் 20 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து விட்டார். அவரது உழைப்பைப் பற்றியும், அவர் வாக்காளர் களைச் சந்தித்து பேசுவது பற்றியும் நேரிலும், தொலைபேசியிலும் பல நண்பர்கள் என்னிடம் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், முன்னணியினரும் இடைவெளியின்றி தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். குறிப்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஒரு மாத காலத்திற்குச் சுற்றுப்பயணத் திட்டம் வகுத்துக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதுபோலவே சுப. வீரபாண்டியன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா போன்றவர்களின் நிகழ்ச்சி களும் ஏற்பாடாகியுள்ளன.
தொல். திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் தங்கள் தொகுதிகளில் வாக்குகளைக் கேட்கின்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, மற்றத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நமக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
தான் செய்யாததை எல்லாம் செய்ததாகவும், திமுகவின் சாதனைகளை தான்தான் நிறைவேற்றியதாகவும், பொய் மூட்டைகளை ஆங்காங்கே அவிழ்த்து விடுவதற்குப் பாதி நேரம் இதற்குத்தான் முதல்வர் நேரத்தைச் செலவிடுகிறாரே தவிர, கடந்த 3 ஆண்டு கா லத்தில், அவருடைய ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்தோம், நாள்தோறும் பேரவையில் 110 விதியின் அறிக்கை களைப் படித்தோமே, வேறு எந்த அமைச்சரையும் படிக்க அனுமதிக்காமல், தானே படித்து, அதனை கூட்டணிக் கட்சித் தலைவர் கள் பாராட்டி பத்திரிகைகளில் இடம் பெறச் செய்து விளம்பரம் தேடிக் கொண்டோமே, அந்த அறிவிப்புகள் என்ன ஆயிற்று?
வண்டலூரில் பேருந்து நிலையம் வரும் என்று சொன்னோமே, முதியோருக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்குவோம் என்று சொன்னோமே, மோனோ ரயில் வரப் போகிறது என்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோமே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குவோம் என்று சொன்னோமே, விலைவாசியைக் குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னோமே, மின்வெட்டே இல்லாத மாநிலமாக, மின்மிகை மாநிலமாக தமிழகத்தை ஆக்குவோம் என்று பலமுறை சொன்னோமே, 5.6 லட்சம் பேருக்குப் புதிதாக வேலை வாய்ப்பினை உருவாக்கப் போவதாகச் சொன்னோமே,
20 ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாக்கிடப் போவதாக அறிவித்தோமே, அவற்றை செய்தோமா? ஏன் செய்யவில்லை என்று அந்த கூட்டங்களில் சொல்ல வேண்டியதுதானே? கடந்த 3 ஆண்டு காலத்தில், அதற்கு முன்பிருந்த திமுக ஆட்சியில் நிறைவேற் றப்பட்ட சாதனைத் திட்டங்களை முட்டுக்கட்டை போட்டு, மூடு விழா நடத்திக் கொண்டிருப்பதைப் பற்றி மக்களிடம் சொல்ல வேண்டியதுதானே? மாநிலத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசிடம் திட்டங்களைக் கேட்டுப் பெற்று செயலாக்கம் செய்யும் காலமெல்லாம் மாறி, மத்திய அரசே முன்வந்து தமிழகத்திற்கு வழங்கிய அடிப்படை கட்டமைப்பு வசதி அளிக்கும் திட்டங்களுக்கு தடை போட்டதற்கான காரணம் என்ன? என்பதைப் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதுதானே?
தஞ்சை நகர்மன்ற முன்னாள் தலைவரும், திமுக சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினருமான சி. இறைவன் நேற்று எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் திமுக உறுப்பினர்களாக தற்போது 80 லட்சம் பேர் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் தவறாமல் நமது அணியினருக்கு வாக்களிக்க வேண்டும். அதே நேரத்தில் திமுக உறுப்பினர்கள் 80 லட்சம் பேரும், ஒவ்வொருவரும் திமுக உறுப்பினர் அல்லாத மற்றொருவரை தன்னுடன் அழைத்துச் சென்று, நமது அணியின் வேட்பாளருக்கு வாக்கு அளிக்கச் செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரும் அந்தப் பணியினை முறையாகவும், சரியாகவும் செய்வார்களானால், மேலும் 80 லட்சம் வாக்குகள் நமக்குக் கிடைக்கும். இரண்டையும் சேர்த்தால் திமுக சார்பில் மட்டுமே தமிழகத்தில் மொத்தம் நமது அணிக்கு ஒரு கோடியே 60 லட்சம் வாக்குகளை மிகச் சுலபமாகப் பெற்று விடலாம். நமது அணிக்கு இந்த வாக்குகள் கிடைக்குமேயானால் மிகப் பெரும் வெற்றி உறுதி என்று எழுதியிருக்கிறார்.
இறைவன் எழுதியுள்ள கணக்கு சரியான கணக்காகவே எனக்குத் தோன்றுகிறது. எனவே திமுக உறுப்பினராக உள்ள ஒவ்வொரு வருக்கும், என்னுடைய அன்பான வேண்டுகோள் இதுதான்; நீங்கள் ஒவ்வொருவரும் திமுக உறுப்பினர் அல்லாத மேலும் ஒருவரை அணுகி, அவரையும் நம்முடைய அணிக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வாக்கு, அதற்கு மேல் நீங்கள் எத்தனை வாக்குகளை வேண்டுமானாலும் சேர்க்கலாம். அப்படியானால் வெற்றி நமதே. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels