வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



05/04/2014

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ச.பிரபு நேற்று வேட்பு மனு தாக்கல்!

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ச.பிரபு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தி.மு.க. வேட்பாளர்
பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.பிரபு என்கிற சீமானூர் பிரபு (வயது44) பெரம் பலூர் பாராளுமன்றதொகுதி உதவி தேர்தல் அலுவலரும், பெரம்பலூர் வருவாய் கோட்ட உதவி கலெக்டருமான மதுசூதன்ரெட்டியிடம் நேற்று மதியம் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப் பாளருமான கே.என்.நேரு, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் துரைசாமி, நகர செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் ரஷீத்அகமது ஆகியோர் உடனிருந்தனர்.
மாற்று வேட்பாளர்
பெரம்பலூர் பாராளு மன்றதொகுதி தி.மு.க. மாற்று வேட்பாளராக திருச்சி மாவட்டம் ஒ.கிருஷ்ணா புரத்தை சேர்ந்த என்.முத்துச்செல்வன் (38) வேட்பு மனு தாக்கல் செய்தார். எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் உப்பிலியபுரம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது பெரம்பலூர், வேப்பந்தட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், தங்கராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆக்கூர் செல்வராஜ், புதிய தமிழகம் கட்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.




No comments:

Post a Comment


Labels