பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சீமானூர் பிரபு, கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அவரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் கட்சி நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்து வைத்து, அவரது வெற் றிக்கு தீவிர தேர்தல் களப்பணி ஆற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
தி.மு.க. வேட்பாளர்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தொட்டியத்தை சேர்ந்த சீமானூர் பிரபு பெரம்பலூர் வந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகளை முதல்கட்டமாக சந்தித்து தமக்கு ஆதரவாக தீவிர தேர்தல் களப்பணி ஆற்றுமாறு கேட்டுக்கொண்டார். அவருக்கு தி.மு.க.நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் வரவேற்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ராசா அலுவலகத்தில் நடந்த தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலாளரு மான கே.என்.நேரு கட்சி நிர்வாகிகளிடம் சீமானூர் பிரபுவை அறிமுகம் செய்து வைத்தார்.
நிர்வாகிகள் சந்திப்பு
இந்த நிகழ்ச்சியில் எம்.பி. தொகுதி பொறுப்பாளர் சுபா.சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அட்சயகோபால், மாவட்ட அவைத்தலைவர் வெள்ளைச்சாமி, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வா கிகள் வெங்கடாசலம், மகா தேவி ஜெயபால், ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ் குமார்(பெரம்பலூர்), கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), தங்கராசு (வேப்பந்தட்டை), ராஜேந்திரன் (வேப்பூர்), உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment