வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



22/03/2014

பட்டுக்கோட்டையில் பாங்கு ஒலிக்கப்பட்டதால்,பேச்சை நிறுத்தினார் மு.க ஸ்டாலின்.....!!


தஞ்சை தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் திமுகவின் வெற்றி வேட்பாளர் T.R. பாலுவுக்கு ஆதரவாக அனல் பறக்கும் பிரச்சாரத்தை மு.க ஸ்டாலின் செய்து வருகிறார்.

தஞ்சை மாவட்டம் என்பது முஸ்லிம்களால் நிரம்பி வழியும் மாவட்டம் என்பதால் மு.க ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அணிவகுத்து வருகின்றனர்.

இந்நிலையில்...

பட்டுக்கோட்டையில் மு.க ஸ்டாலின் கார சாரமாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அருகிலுள்ள பள்ளிவாசலில் பாங்கு சொல்லியதால் மு.க ஸ்டாலின் பேச்சை அப்படியே நிறுத்தி விட்டார்.

முழுமையாக பாங்கு சொல்லி முடிக்கப்பட்ட பிறகே தனது உரையை தொடர்ந்தார். 
பின்பு அங்கிருந்து தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

நல்ல உதாரணம் , சபை நாகரீகம் அறிந்த பண்பாளர்

தொழுகைக்கான அழைப்பு(பாங்கு)கொடுக்கும் போது ஸ்டாலின் பேச்சை நிறுத்தியதால் அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கான பொதுமக்களும் தொழுகைக்கான அழைப்பு கொடுக்கும் போது இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று அறிந்து கொண்டனர்...

தலைவர்கள் பொது இடங்களில் நல்ல பண்புகளை வெளிப்படுத்துவது வரவேற்கதக்கது.
தொழுகைக்கான அழைப்பு(பாங்கு)கொடுக்கும் போது ஸ்டாலின் பேச்சை நிறுத்தியதால் அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கான பொதுமக்களும் தொழுகைக்கான அழைப்பு கொடுக்கும் போது இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று அறிந்து கொண்டனர்...

தலைவர்கள் பொது இடங்களில் நல்ல பண்புகளை வெளிப்படுத்துவது வரவேற்கதக்கது
.

நன்றி : ஜலால் இம்ரான்.

No comments:

Post a Comment


Labels