வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



22/03/2014

அடிக்கடி அமைச்சர்களை மாற்றியதுதான் அதிமுக அரசின் சாதனை!மு.க.ஸ்டாலின்!

.
 
கும்பகோணம், மார்ச் 22:
அடிக்கடி அமைச்சர்களை மாற்றியதுதான் அதிமுக அரசின் சாதனை என்று குடவாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நேற்று இரவு திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாகை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜ யனை ஆதரித்து கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது:
தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா மக்களை தேர்தலுக்கு தேர்தல் தான் சந்திப்பார். கோட்டைக்கு செல்வார். இல்லையென்றால் கொடநாடு செல்வார். மக்களை பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவதில்லை.
2011ம் ஆண்டு ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா. 60 வயது முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என கூறினார். ஆனால் ஒருவருக்கு கூட பஸ் பாஸ் வழங்கவில்லை. அதேபோல் வீட்டுக்கு வீடு வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நாள்தோறும் 20 லிட்டர் மினரல் வாட்டர் தருவேன் என்றார். ஆனால் 10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் என குடிநீரை விற்கிறார்.
திமுக ஆட்சியில் மட்டுமே தொழிற்சாலைகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் தமிழகத்துக்கு வந்து லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக ஒரு இளைஞருக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.
3 சென்ட் பட்டா இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதுவும் வழங்கவில்லை. இவற்றை நான் ஆதாரத்துடன் கூறுகிறேன். தெம்பு இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள். அதை எதிர்கொள்கிறேனன். வாய்தா வாங்க மாட்டேன்.
கடந்த 3 ஆண்டுகளாக விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் உள்ளது. பால் விலை 3 மடங்காகவும், மின் கடடணம் 4 மடங்காகவும், பஸ் கட்டணம் 3 மடங்காகவும் உயர்ந்துள்ளது. 2006 முதல் 2011 வரை கருணாநிதியை போக்குவரத்து துறை அதிகாரிகள் சந்தித்து போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணத்தை உயர்த்துமாறு வலியுறுத்தினர். ஆனால் கருணாநிதி கட்டணத்தை உயர்த்த மாட்டேன் எனக்கூறி ஒரு காசு கூட உயர்த்தவில்லை.
முன்பெல்லாம் மின்சாரத்தை தொட்டதால்தான் ஷாக் அடிக்கும். இப்போது கரன்ட் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்குது. கடந்த ஆட்சியில் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. அதற்கு பெரிய தண்டனைனயை கொடுத்தீர்கள். இப்போது 18ல் இருந்து 20 மணி நேரம் தமிழகம் முழுவதும் மின்வெட்டு உள்ளது. இதற்கு என்ன மாற்றத்தை தரப்போகிறீர்கள். முன்பெல்லாம் மின்வெட்டு தான் இருந்தது. இப்போது மின்சாரமே இல்லை. இதை நினைத்தால் சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா என்ற கிராமத்து பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
கடந்த தேர்தலில் ஜெயலலிதா தாலிக்கு தங்கம் வழங்குவதாக தெரிவித்தார். விண்ணப்பம் செய்த பெண்களுக்கு குழந்தை கூட பிறந்து விட்டது. இதுவரை தங்கம் வழங்கவில்லை. தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வரு கிறேன் என கூறிதான், ஆட் சியை பிடித்தார் ஜெயலலிதா. ஆனால் எநத மாற்றமும் கிடைக்கவில்லை. அடிக்கடி அமைச்சர்க�ளை தான் மாற்றி வருகிறார். கல்வித் துறை அமைச்சரை 6 முறை யும், சட்டத்துறை அமைச்சரை 6 முறையும், வணிகவரித்துறை அமைச்சரை 5 முறையும், சுற்றுச்சூழல் துறை அமைச் சரை 5 முறையும், வருவாய்த் துறை அமைச்சரை 5 முறையும், சுற்றுலாத்துறை அமைச்சரை 4 முறையும், ஊரக தொழில் துறை அமைச்சரை 4 முறையும், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரை 4 முறையும் மாற்றி சாதனை புரிந்துள்ளார்.
காவிரி பிரச்னை என்பது இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வழ்வாதாரமான பிரச்னை என்பது எங்களுக்கு தெரியும். கடந்த 48 ஆண்டுகளாக அறிஞர் அண்ணா காலம் முதல் இருந்து வருகிறது. தலைவர் கருணாநிதி நடவடிக்கையால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, காவிரி வரைவு சட்டம், காவிரி ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு, காவிரி இறுதி தீர்ப்பு, அரசிதழில் வெளியீடு இப்படி பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 23 ஆண்டுகளாக போராடி பெற்றவர் போல் பொன்னி யின் செல்வி பட்டத்தை ஜெயலலிதா பெற்றார். இப்போது டெல்டாவில் குறுவை பட்டமும் இல்லை. சம்பா பட்டமும் இல்லை. தண்ணீரும் இல்லை. விளைச்சலும் இல்லை.
கடந்த ஆண்டு கர்நாடகாவில் கடுமையான மழை பெய்த போது, அணை நிரம்பி தண்ணீரை திறந்தனர். அந்த நேரத்தில் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 1.25 லட்சம் கன அடி வீணாக சென்று கடலில் கலந்தது.
திமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு பல்வேறு சலு கைகளை வழங்கியது. 2006ல் ஆட்சி பொறுப்பேற்றதும் கருணாநிதி கோட்டைக்கு கூட செல்லாமல், பதவியேற்ற விழா மேடைக்கு கோப்புகளை கொண்டு வரச்சொல்லி ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார். நாங்கள்கூட கருணாநிதியை, இதில் பயன்பெற போவது அதிமுகவினர் தான் என்று சொன்னோம். அதற்கு தலைவர் கருணாநிதி, எல்லோரும் தமிழ்நாட்டின் விவசாய பெருங்குடி மக்கள் தான். கட்சி பாகுபாடு எல்லாம் கிடையாது என்றார். இதையெல்லாம் சுட்டிக்காட்டிதான் உங்களிடம் வாக்கு கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் தற்போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போன்ற செயல்கள் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் கருணநிதி காரணம் என கூறி வருகிறார். கொடநாட்டில் அவர் ஓய்வெடுக்க சென்றாலும் கருணாநிதிதான் காரணமா? இதை எல்லாம் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் காவிரி டெல்டா பகுதியில் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஜெயலலிதா எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விவசாயிகள் எலிக்கறி சாப்பிடுவதும், தற்கொலை செய்வதும் அதிகரிக்கும். 13 பேர் தற்கொலை செய்த தகவல் கிடைத்ததும் கருணாநிதி, கட்சியின் சார்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் எழுப்பி, அவை குறிப்பிலும் பதிவு செய்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வைத்தவர் கருணாநிதி.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16 கொலைகள் நடந்துள்ளது. வழிப்பறி உள்ளிட்ட வழக்கு 50, கஞ்சா வழக்கு 8 உள்ளிட்ட 882 வழக்குகள் பதிவாகி உள்ளது. இது ஜெயலலிதா ஆட்சியின் சாதனை. இவ் வாறு மு.க.ஸ்டாலின் பேசி னார். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடவாசல் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடவாசல் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அருகில் வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயன், கோ.சி.மணி, மதிவாணன், சாக்கோட்டை அன்பழகன்.

No comments:

Post a Comment


Labels