வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



28/03/2014

தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளது முன்னாள் மத்திய மந்திரி ராசா பேட்டி!

தமிழகத்தில் அமைந்துள்ள தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கூறினார்.
ஆ.ராசா பேட்டி
முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா, நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க ஆ.ராசா நேற்று பெரம்பலூர் வந்திருந்தார். துறைமங்கலம் பாலக்கரை பகுதியில் உள்ள அவருடைய அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பு வரை, தி.மு.க. குறைந்த இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி வந்தனர். தற்போது தி.முக. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று போட்டி போட்டுக்கொண்டு பத்திரிகைகள் அறிவித்து வருகின்றன. தேர்தல் நெருங்க, நெருங்க நிலைமைகள் மாறும். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களை தி.மு.க. கூட்டணி பிடிக்கும்.
வலுவான கூட்டணி
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 2–ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், என்மீது இல்லாத ஒன்றை கூறி குற்றம் சாட்டி சிறையில் அடைத்தனர். தற்போது பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்காக தமிழகத்தில் உருவாகி உள்ள தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி ஆகும். தேர்தலுக்கு பிறகும் இந்த கூட்டணி சமூக கூட்டணியாக திகழும்.
பெரம்பலூர் மாவட்டத்திற்காக நான் அறிவித்த சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துள்ள ஆட்சிகள் அமையும் போது நிறைவேறும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் துரைசாமி, சிவசங்கர் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுபா.சந்திரசேகரன், மாவட்ட அவைத்தலைவர் வெள்ளைச்சாமி, பெரம்பலூர் நகர செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், அறிவுச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்

No comments:

Post a Comment


Labels