வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



14/03/2014

பெரம்பலூர் எம்பி தொகுதியில் 8வது முறையாக திமுக வெற்றிபெறும்! K.N.நேரு உறுதி!

பெரம்பலூர், மார்ச் 14:
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 8வது முறை யாக திமுக வெற்றிபெறும் என்று பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச் சரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என். நேரு உறுதிப்படத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த சீமானூர் பிரபு (44) போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, தொகுதியின் தலைமையிடமான பெரம்பலூர் பாலக்கரைக்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என். நேரு மற்றும் நிர்வாகிகள் புடைச் சூழ வருகை தந்த அவருக்கு மகளிர் அணி நிர்வாகிகள் ஆரத்தி எடுத்து,
நெற்றியில் வெற்றித் திலகமிட்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ராசா அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், பெரம்பலூர் எம்பி தொகுதிக்கான தேர்தல் பொறுப் பாளர் சுபா சந்திரசேகர் முன்னிலையில் வேட்பாளர் சீமானூர் பிரபுவை கட்சியினரிடம் அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:
பெரம்பலூர் எம்பி தொகுதியில் திமுக ஏற்கனவே 7 முறை வெற்றிபெற்றுள்ளது. கடந்த 1999 முதல் 2014 வரை திமுக ஆட்சியால், திமுக முயற்சியால் பெரம்பலூர் தொகுதிக்கு தமிழகத்திற்கு பெற்றுத் தந்த சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.
மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் வாக்குறுதிகளை விளக்கிக் கூற வேண்டும். அவற்றால் பெரம்பலூர் தொகுதியில் 8வது முறையாக திமுக வெற்றிபெறும். தொடர்ந்து 4வது முறையாக இத்தொகுதியில் வெற்றியை தக்கவைத்து அதை தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் ஸ்டாலினுக்கும் பரிசாக வழங்குவோம். அதற்காக இன்று முதல் தேர்தல் பணிகளை தொடங்கி, களத்தில் சூறாவளிக் காற்றுபோல சுழன்று சுழன்று பணியாற்றுவோம். வெற்றி வசப்படும்வரை அயராமல் பாடுபடுவோம் என்றார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டச் செயலா ளர் துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், அவைத்தலைவர் வெள்ளசாமி, ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், ராஜ்குமார், தங்கராசு, நகரச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ஜெகதீசன், துணைச் செயலாளர்கள் வெங்கடாசலம், மகாதேவி ஜெயபால், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், துரைராஜ், பூமதி பெரியசாமி, பிரபாகரன், அணி அமைப்பாளர்கள் மாரிக்கண்ணன், முத்தரசன், செல்வமோகன், செந்தில்நாதன், முருகேசன், சன் சம்பத், முன்னாள் மத்திய அமைச்சரின் நேர்முக உதவியாளர் அறிவு, பேச்சாளர் விஜயரத்தினம், ரினோ பாஸ்டின், சிவசங்கர், தங்ககமல், ராஜேஷ், கரீம், சதாசிவம், ராஜா, யுவராஜா, சீரணி பிரபு, கணேசன், அசோக், மகளிரணி பாத்திமா, தேன்மொழி, பத்மாவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment


Labels