சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை நேற்று காலை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் 100 தலைப்புகளில் பல்வேறு சாதனைகள், எதிர்கால திட்டங்கள், வாக்குறுதிகள், வளர்ச்சித் திட்டங்கள் என்று 4 பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
அவை வருமாறு:
* மத நல்லிணக்க வரலாறு படைப்போம், மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்ற லட்சியத்தினை திமுக மேற்கொண்டு தேர்தலை சந்திக்கிறது.\
* 1990ல் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தல் காரணமாக வி.பி.சிங்கால் மண்டல் பரிந்துரை ஏற்பட்டது. மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. காவிரி நதி நீர் பிரச்னைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மாநிலங்களிடை மன்றமும் அப்போதுதான் வெளியானது. சென்னை விமானநிலையத்தில் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும், உள்நாட்டு முனையத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டப்பட்டது. 2004ம் ஆண்டு தொடங்கி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக அமைச்சர்களின் முயற்சியால் தமிழகம் பல்வேறு வகைகளில் நன்மை அடைந்துள்ளது. அதில்: * தமிழ் செம்மொழி என்ற பிரகடனம், சென்னையில் தமிழாய்வு மத்திய அரசு நிறுவனம்.
* 2427 கோடி செலவில் சேது சமுத்திரத் திட்டம்
* சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம் 1650 கோடி செலவில் சென்னை துறைமுகம்மதுரவாயல் இடையே பறக்கும் சாலை திட்டம் போன்றவை முக்கியம்
எதிர்கால திட்டங்கள்:
* மதச்சார்பின்மை கொள்கையை மீறாத வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகளில் வழங்கியுள்ள உரிமைகளின் படி, எந்த மதத்தையும், கடைப்பிடிப்பதற்கும், சுதந்திரமாக பரப்புவதற்கும் பொது நலனுக்கு ஏற்ப வளர்ப்பதற்கும் எவருக்கும் உரிமை உண்டு. அதில் திமுக உறுதியாக உள்ளது.
* சாதீய ஏற்றத் தாழ்வுகளை நீக்க சமூக நிலையிலும், கல்வியிலும் பின் தங்கிய மக்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வியும், வேலை வாய்ப்பும் வழங்கிட உருவான இயக்கம், சமூக நீதி இயக்கம்தான் திமுக.
* இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தை அந்தந்த மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்வதற்கு உரிய வகையில் அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* வறுமை கோட்டிற்கான அளவுகோல் அடிக்கடி மாறக்கூடியது என்பதால், முழுமையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை போல மத்திய அரசு பணிகளிலும் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க திமுக தொடர்ந்து முயற்சி செய்யும்.
* மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.
* மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படாத பின்னடைவு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம்.
* தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வலியுறுத்துவோம்.
* பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் மாவட்டந்தோறும் திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டன. இந்த திட்டங்களில் விட்டுப்போன ஊர்புறங்களில் குடிசைகளில் வாழும் தாழ்த்தப்பட்ட சமுதாய பிரிவினர் அனைவருக்கும் அடுத்த ஐந்தாண்டு காலத்துக்குள் தரமான வீடுகள் கட்டி தர வலியுறுத்துவோம்.
* நாடெங்கிலும் சமத்துவபுரங்களை ஏற்படுத்த வலியுறுத்துவோம்.
* சேது சமுத்திர திட்ட பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி தென்னக வளர்ச்சிக்கு துணை புரிய திமுக வலியுறுத்தும்.
* குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வலியுறுத்துவோம். திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் திரவ உந்துவிசை தொழில் * மீனவர்களுக்கான தேசிய சேமிப்பு திட்டம் முன்பு இருந்ததைப் போலவே மீனவர்மாநில மத்திய அரசு மூன்றும் 111 என்ற சமபங்கு விகிதாச்சாரம் கொண்டதாக மாற்றி அமைக்க திமுக வலியுறுத்தும்.
* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவை தமிழிலேயே செயல்பட வேண்டும். இதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 343வது பிரிவில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
* அனைத்து நதிகளையும், தேசிய மயமாக்கி இந்தியாவின் வடபாகத்தில் உள்ள கங்கை நதியை தென் பகுதியில் ஓடிக் கொண்டுள்ள நதிகளுடன் இணைக்க திமுக பாடுபடும்.
* தூக்குத் தண்டனையை அடியோடு ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்து வருவதால் அதற்கு முழு மாநில தகுதி தரப்பட வேண்டும் என்பது நமது கோரிக்கை. அது வெற்றி பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* சென்னை துறைமுகம்மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் விரைந்து நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* 10ம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் 10 லட்சம் பேரை சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்பட வலியுறுத்துவோம்.
* தென் மண்டல இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு விரைவில் உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
* வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய பாடுபடும்.
*இலங்கை தமிழர் பிரச்னையில் இலங்கை தமிழர்களிடையே ஐநா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனவை நனவாக்கும் தேர்தல் அறிக்கை:
36 ஆண்டுகளுக்கு மேல் எம்பியாக பணியாற்றி நம் மொழி, இனம், பண்பாட்டின்மீது நடைபெற்று வரும் நீண்ட கால படையெடுப்புகளை அம்பலப்படுத்தி ஆதிக்க சக்தியினை முறியடித்திட தொய்வில்லாமல் தொடர்ந்த முயற்சியில் தனது கடைசி நாள் வரை, ஒரு போராளியாக திகழ்ந்தவரும், அதே உணர்வோடு வளரும் நாடுகளில் உரிமைகள் பறிபோகாமல் அவற்றை ‘சியாட்டில்’ மற்றும் ‘தோகா’ உலக வர்த்தக மாநாடுகளில் பாதுகாத்து தந்தவரும், உயர்ந்த அரசியல், பொருளியல், சமத்துவ சிந்தனையாளராக திகழ்ந்து லட்சியக் கதிராக, விளங்கிக் கொண்டிருந்தவரும் நம் நெஞ்சில் என்றென்றும் நிறைந்து வாழும் முரசொலி மாறன், இதுவரை தயாரித்து அளித்த தேர்தல் அறிக்கைகளில் முழங்கிய லட்சியக் கனவுகளையும் நோக்கங்களையும் எதிரொலித்திடும் வண்ணம் இந்த தேர்தல் அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment