வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



07/01/2014

கேள்வி :- மனித உரிமைப் போராளி, திரு. அ. மார்க்ஸ் அவர்கள் "முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகம்"" என்ற தலைப்பில் இந்த வார "ஆனந்தவிகடன்" இதழில் எழுதியதைப் படித்தீர்களா?

கலைஞர்_பதில் :- படித்தேன். அதன் சில முக்கிய பகுதிகளை மற்றவர்களும் படித்து உணர வேண்டுமென்பதற்காக சுருக்கமாக இங்கே தெரிவிக்கின்றேன்.

"தமிழ்நாட்டில் அக மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே அரசியல் வாதி ஜெயலலிதா தான். ஒரு பக்கம், """"தமிழ்த் தேசியம்"" பேசி அதை மத்திய அரசுக்கு எதிரான ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டே, மறுபக்கம் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பாடத் திட்டத்தை அமல்படுத்தினார்.

""""இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது"" எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியவர், தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரை இடித்தார். கொளத்துhர் மணியை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தார். இதில் விநோதம், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரை இடித்ததற்காக அதன் உருவாக்கத்தில் பங்காற்றிய பழ. நெடுமாறன், முதல்வரைக் கண்டித்துப் பேசாமல், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் என்றார். கொளத்துர் மணியின் இயக்கமோ, நாங்கள் அரசை எதிர்த்துப் போராடப் போவதில்லை என அறிவித்தது.

கூட்டணிக் கட்சிகளை ஜெயலலிதா பொருட்படுத்துவதே இல்லை. ஆனாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவரது அழைப்புக்காக காத்துக் கிடக்கின்றன. . . . சாமானியர்கள் மீதான அவரது கெடு பிடியும் எந்த எதிர்ப்பும் இன்றித் தொடர்கிறது. இந்தியாவின் எந்தப் பெரிய நகரங் களிலும் இல்லாத அளவுக்கு, சென்னையில் ஆயிரக்கணக்கில் குண்டர் சட்டக் கைது கள் நடந்துள்ளன.

தமிழர்கள் வாழ்வாதாரத்தையே சீரழிக்கும் மின்வெட்டுச் சிக்கலைத் தீர்க்க, ஜெயலலிதா வாக்களித்தபடி எந்த முன்னேற்றமும் எட்டப்பட வில்லை. ஒரு பக்கம், தமிழகத்துக்கு நிதிப் பங்கீடு போதவில்லை என மத்திய அரசுக்குக் கண்டனக் கடிதங்களை அனுப்பிக் கொண்டே, கோடிகளை வாரி இறைத்து ஈராண்டு சாதனைகளைக் கொண்டாடினர்.

எதிர்க் கட்சிகளை ஜெயா அரசு எதிர்கொள்ளும் முறை எந்த வகையிலும் ஜனநாயக மரபுக்கு உகந்ததாக இல்லை. தே.மு.தி.க.வை உடைத்து நசுக்குவது, பா.ம.க. மீது போராட்டக் கால இழப் பீடு கேட்டு வழக்குப் போடுவது, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அவதுhறு வழக்கு களைப் போட்டு அலைய விடுவது,

இடைத்தேர்தல்களில் அத்தனை அமைச்சர் களையும் களம் இறக்குவது, அமைச்சர்களை சகட்டுமேனிக்குப் பந்தாடுவது என குழந்தை கை பொம்மையாக தமிழகம் ஜெயலலிதாவிடம் சிக்கியிருக்கிறது"" - என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் கபட நாடகம், கெடுபிடி, சர்வாதிகாரம், காழ்ப்புணர்ச்சி பற்றிய இந்தக் கருத்துகள் நண்பர் அ. மார்க்ஸ் அவர்களின் சொந்தக் கருத்துகள் மாத்திரமல்ல; தமிழ்நாட்டில் உள்ள சாதாரண, சாமான்ய மக்களின் கருத்துகளே இவை தான்!

No comments:

Post a Comment


Labels