வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



07/01/2014

 திருச்சி விமான நிலையத்தில் மாண்புமிகு தளபதி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி... 

செய்தியாளர்கள் கேள்வி : புதிய தலைமுறை டி.வி. க்கு அழகிரி பேட்டியளித்துள்ளாரே?

தேவையற்ற பேச்சையும், தேவையற்ற செய்திகளையும் நான் கவனிப்பதில்லை.

செய்தியாளர்கள் கேள்வி : மாநாட்டு பணிகள் எப்படி நடைபெற்றுவருகிறது?

தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், திருச்சியில் நடைபெறவுள்ள, கழக 10-வது மாநில மாநாட்டில், பல லட்சக்கணக்கான கழகத்தினர் பங்கேற்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டுக்காக சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 4 லட்சம் பேர் பந்தலுக்கு உட்புறமும், சுமார் 6 லட்சம் பேர் பந்தலுக்கு வெளியேயும் உட்கார்ந்து மாநாட்டு நிகழ்வுகளை கவனிக்கும் வகையில் பந்தல் அமைக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

செய்தியாளர்கள் கேள்வி : புதிய கட்சிகளை உங்கள் கூட்டணியில் இணைத்துக்கொள்வீர்களா?

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில், மத்தியில் மதசார்பற்ற, நிலையான ஆட்சி அமையும் வகையில் திமுக வியூகம் இருக்கும். வேறு புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வர விரும்பினால், அது குறித்து தலைவர் கலைஞர் உரிய முடிவுகளை எடுப்பார்.

செய்தியாளர்கள் கேள்வி : தே.மு.தி.க வுடனான கூட்டணி?
திமுக கூட்டணிக்கு, தேமுதிக வந்தால் மகிழ்ச்சி என தலைவர் கலைஞர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். அதையே நானும் வழிமொழிகிறேன்.

No comments:

Post a Comment


Labels